Tuesday, September 13, 2011

பிளேக்கிற்கும் இடையில் நடைபெற்ற பேச்சுவார்த்தை மிகவும் திருப்திகரமாக அமைந்ததாக கூட்டமைப்பு அறிவித்துள்ளது!

Tuesday, September 13, 2011
தமிழ் தேசியக் கூட்டமைப்பிற்கும் அமெரிக்காவின் பிரதி இராஜாங்கச் செயலாளர் ரொபேர்ட் ஓ பிளேக்கிற்கும் இடையில் இன்று காலை நடைபெற்ற பேச்சுவார்த்தை மிகவும் திருப்திகரமாக அமைந்ததாக தமிழ் தேசியக் கூட்டமைப்பு அறிவித்துள்ளது.

இன்றைய சந்திப்பில் இருதரப்பினரினதும் கருத்துக்கள் பரிமாறப்பட்டதுடன், அரசியல் தீர்வு விடயத்தில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நிலைப்பாடு குறித்தும் தெளிவாக எடுத்துரைக்கப்பட்டதாக தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற குழுத் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.

மேலும், சந்திப்பு நேற்றுக்காலை காலை 7 மணியளவில் ஆரம்பித்ததுடன் 8.15 வரையில் நடைபெற்றதாகவும் அவர் கூறினார்.

இதன் போது தமிழ் மக்களின் தேசியப் பிர்ச்சினைகள் குறித்து வலியுறுத்தப்பட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் கூட்டத்தில் தமிழர்களுக்கான அரசியல் தீர்வு, தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் உடனான அரசின் பேச்சுவார்த்தை, வடக்கு கிழக்கில் மனித உரிமையின் நிலை, இராணுவ மயமாக்கல் மற்றும் நில அபகரிப்பு குறித்து கலந்துரையாடப்பட்டதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

வடக்கு கிழக்கு நிலைமைகள் தொடர்பில் ஐ.தே.க. வும் பிளெக்கிடம் விபரிப்பு!

இலங்கை வந்துள்ள தெற்கு மற்றும் மத்திய ஆசிய பிராந்திய நடவடிக்கைகளுக்குப் பொறுப்பான அமெரிக்க பிரதி ராஜாங்கச் செயலாளர் ரொபர்ட் ஓ பிளேக்கை இன்று மாலை ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதிநிதிகள் குழுவொன்று சந்தித்துப் பேசியுள்ளது.மாலை நான்கு மணி முதல் ஐந்து மணிவரை இடம்பெற்ற இந்தச் சந்திப்பின் போது வடக்கு, கிழக்கில் ஏற்பட்டுள்ள அண்மைக்கால நிலைமைகள் அந்த மக்களின் பிரச்சினைகள் தொடர்பிலேயே பெரும்பாலும் கலந்துரையாடல்கள் இடம்பெற்றன என்று ஐக்கிய தேசியக் கட்சியின் முக்கியஸ்தர் ஒருவர் எமது இணையத்துக்குத் தெரிவித்தார்.

இந்தச் சந்திப்பில் ஐக்கிய தேசியக் கட்சி சார்பில் அதன் பிரதித் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான கருஜயசூரிய மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களான மங்கள சமரவீர, (முன்னாள் வெளிவிவகார அமைச்சர்) ரவி கருணாநாயக்க, சாகல ரத்னாயக்க ஆகியோர் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment