Sunday, September 11, 2011நியூயார்க்: அல் கய்தா தீவிரவாத தலைவர் ஒசாமா பின்லேடனை கொன்ற பிறகும், லண்டனில் இருந்து மும்பை வரை அச்சுறுத்தல் உள்ளது என்று அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் ஹிலாரி கிளின்டன் எச்சரித்துள்ளார். அமெரிக்காவின் நியூயார்க் நகரில் கடந்த 2001 செப்டம்பர் 11ம் தேதி தீவிரவாதிகள் இரட்டை கோபுரங்களை தகர்த்தனர். இதில் 3ஆயிரத்துக்கும் அதிகமானோர் பலியாயினர். இதன் 10ம் ஆண்டு நினைவு தினம் நாளை அனுசரிக்கப்படுகிறது. இந்த தினத்தில் மீண்டும் தாக்குதல் நடத்த அல் கய்தா தீவிரவாதிகள் சதி திட்டம் தீட்டியுள்ளதாக அஞ்சப்படுகிறது. இதையடுத்து அமெரிக்கா முழுவதும் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
இந்நிலையில், மான்ஹாட்டனில் உள்ள ஜான்ஜே கல்லூரியில் நடந்த நிகழ்ச்சியில் அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் ஹிலாரி பேசியதாவது:
அமெரிக்கர்கள் மீது மீண்டும் தாக்குதல் நடத்த தீவிரவாதிகள் திட்டமிட்டுள்ளனர். இதற்கான ஆதாரப்பூர்வ தகவல்கள் கிடைத்துள்ளன. அல் கய்தா தீவிரவாத தலைவர் ஒசாமாவை கொன்ற பிறகும் லண்டனில் இருந்து மும்பை வரை உள்ள முக்கிய நகரங்களுக்கு தீவிரவாத அச்சுறுத்தல் நீடிக்கிறது.
ஒசாமாவை கொன்ற பிறகும் லண்டன், லாகூர், மட்ரிட், மும்பை போன்ற முக்கிய நகரங்களில் அல் கய்தா தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தி உள்ளது இதற்கு சான்றாக உள்ளன. எனினும், சர்வதேச அளவில் தீவிரவாதத்தை ஒழிக்கும் நடவடிக்கையில் அமெரிக்கா தொடர்ந்து பாடுபடும்.
இவ்வாறு ஹிலாரி பேசினார்.
No comments:
Post a Comment