Friday, September 09, 2011ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நேற்று மாலை வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் தமிழ் கட்சிகளின் பிரதிநிதிகளைச் சந்தித்து பேச்சுவார்த்தை நடாத்தினார்.
வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் அண்மைக்காலங்களில் இடம்பெற்றதாக் கூறப்படும் சில சம்பவங்கள் தொடர்பாகவூம் குறிப்பாக கிரீஸ் பூதங்கள் குறித்துத் தெரிவிக்கப்படும் சம்பவங்கள் தொடர்பாகவூம் இச்சந்திப்பின்போது விரிவாகக் கலந்துரையாடப்பட்டது.
அலரி மாளிகையில் இடம்பெற்ற இச்சந்திப்பில் தமிழ் தேசிய கூட்டமைப்பு- தமிழர் விடுதலைக் கூட்டணி மற்றும் புளொட் ஆகிய கட்சிகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.
மேற்படி சம்பவங்கள் இடம்பெற்றதாகக் குறிப்பிடப்படும் பிரதேசங்களில் உள்ள மக்கள் மத்தியில் காணப்படும் அச்சம்- சந்தேகத்தை போக்கும் வகையில் பொலிஸார் மற்றும் பிரதேசங்களில் உள்ள பொதுமக்கள் சங்கங்களுக்கிடையே கூட்டுறவை ஏற்றுபடுத்துவதன் அவசியம் குறித்து இங்கு உடன்பாடு காணப்பட்டது.
இது தொடர்பாக ஆராய்ந்து அறிக்கை ஒன்றை சமர்ப்பிக்கும் பொருட்டு ஜனாதிபதியின் வேண்டுகோளுக்கிணங்க நேற்று முன்தினம் யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்திருந்த ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பொதுச்செயலாளர் அமைச்சர் சுசில் பிரேமஜயந்த இங்கு கருத்துத் தெரிவிக்கும் போது:
வட மாகாண ஆளுநர்- சிரேஷ்ட இராணுவ அதிகாரிகள் பொலிஸ் அதிகாரிகள்- நிருவாகத்துறை அதிகாரிகள்இ பிரதேச அரசியல் வாதிகள்- சிவில் சமூக அதிகாரிகள்- சமயத் தலைவர்களோடு இது தொடர்பாகக் கலந்துரையாடியதாகவூம் மூன்று குழுக்களை அமைத்து அதன்மூலம் இப்பிரச்சினைக்கான தீர்வூகளைக் காண்பதற்கு உடன்பாடு காணப்பட்டுள்ளதாகவூம் தெரிவித்தார்.
தற்போது வட மாகாணத்தில் நிலைமை விரைவாக இயல்புநிலைக்குத் திரும்பிக் கொண்டிருப்பதாக இங்கு தெரிவிக்கப்பட்டது. மேற்படி சம்பவங்களினால் மக்கள் எதிர்நோக்கும் சகலவிதமான கஷ்டங்களையூம் உடனடியாக நீக்கி அமைதியை உறுதிப்படுத்துவதற்குத் தேவையான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படுமெனத் தெரிவித்த ஜனாதிபதி அதற்காக தமிழ் கட்சி பிரதிநிதிகளின் ஒத்துழைப்பும் அவசியம் எனவூம் தெரிவித்தார்.
சுமார் 30 வருட மோதலின் காரணமாக தமிழ் மக்கள் மிகவூமே பாதிக்கப்பட்டுள்ளனH. மோதல் காரணமாக மிகவூம் வளமான தமிழ் கலாசாரமும் பாரம்பரியமும் மிக மோசமாக அழிவூற்றுள்ளது எனக் குறிப்பிட்ட ஜனாதிபதி அழிவூற்ற அந்த கலாசாரத்தையூம் பாராம்பரியத்தையூம் மீண்டும் கட்டியெழுப்புவதே இச்சந்தர்ப்பத்தில் தேவையான விடயம் என்றும் அதற்காக எல்லோரும் தமிழ் மக்களுக்கு உதவியளிக்க வேண்டுமென்றும் தெரிவித்தார்.
இச்சந்திப்பில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களான
சுரேஷ் பிரேமசந்திரன்- பொன். செல்லவராஜா- என் ஏ சுமந்திரன் மற்றும் ஈ சரவணபவன் ஆகியோரும் தமிழர் விடுதலைக்கூட்டணியின் தலைவர் வீ ஆனன்தசங்கரி மற்றும் புளோட் தலைவர் தர்மலிங்களம் சித்தார்த்தன் ஆகியோரும் கலந்து கொண்டனர்.
அரசாங்க தரப்பில் சனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அமைச்சர்களான சுசில் பிரேமஜயன்த- பசில் ராஜபக்ஷ ஆகியோருடன் ஜனாபதியின் செயலாளர் லிலித் வீரதுங்க மற்றும் பொலிஸ் மா அதிபர் என்.இலங்ககோன் ஆகியோரும் பங்குபற்றினர்
No comments:
Post a Comment