Tuesday, September 27, 2011நடிகை சோனா, எஸ்.பி.பி. சரண் மோதல் தீவிரமாகிறது. பாலியல் பலாத்காரம் செய்ததற்காக சரண் தன்னிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று சோனா வற்புறுத்தி வருகிறார். இதையடுத்து இருவருக்கும் இடையே மத்தியஸ்தர்கள் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் சரண் மன்னிப்பு கேட்க மறுத்து விட்டாராம்.
இதனால் பாலியல் பலாத்கார வீடியோ ஆதாரங்களை போலீசாரிடம் சோனா ஒப்படைத்து உள்ளார். இதற்கிடையில் சோனாவுக்கு ஆதரவாக பெண்கள் சங்கத்தினர் போராட்டத்தில் குதிக்கின்றனர். எஸ்.பி.பி. சரண் வீட்டில் முற்றுகை போராட்டம் நடத்தப்படும் என்று மகளிர் அமைப்புகள் அறிவித்தன.
எஸ்.பி.பி. சரண் வீடு மகாலிங்கபுரத்தில் உள்ளது. அங்கு பெண்கள் அத்து மீறி நுழைந்து தகராறில் ஈடுபடலாம் என எதிர்பார்க்கப்பட்டது. இதையடுத்து சரண் வீட்டின் முன்னால் இன்று காலை போலீசார் குவிக்கப்பட்டனர். பெண்கள் அமைப்பினர் முற்றுகை போராட்டத்துக்கு போலீசாரிடம் அனுமதி பெறவில்லை. இதனால் போராட்டத்தை தள்ளி வைத்து இருப்பதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.
No comments:
Post a Comment