Thursday, September 8, 2011

சர்வதேச மன்னிப்புச்சபையின் அறிக்கைக்கு உரிய பதிலளிக்கப்படும் - அரசாங்கம்!

Thursday, September 08, 2011
சர்வதேச மன்னிப்புச் சபையினால் இன்று வெளியிடப்பட்ட அறிக்கைக்கு உரிய பதிலளிக்கப்படும் என இலங்கை வெளிவிவகார அமைச்சு அறிவித்துள்ளது.

ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்ட உண்மையைக் கண்டறியும் ஆணைக்குழுவின் நடவடிக்கைகளை கடுயைமாக விமர்சனம் செய்யும் வகையில் சர்வதேச மன்னிப்புச் சபை அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

இவ்வாறான அறிக்கைகளினால் உண்மையைக் கண்டறியும் ஆணைக்குழுவின் நடவடிக்கைகளை திசை திருப்ப முடியாது என வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

சர்வதேச மன்னிப்புச் சபை ஓர் சுயாதீனமான அமைப்பு விரும்பயதனை விரும்பியவாறு தெரிவிக்க முடியும் என அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.

இன்றைய தினம் மன்னிப்புச் சபை வெளியிட்ட அறிக்கையை உன்னிப்பாக அவதானித்து அதன் பின்னர் உரிய வகையில் பதிலளிக்கப்படும் என தெரிவித்துள்ளது.

சர்வதேச மன்னிப்புச் சபையின் அறிக்கைக்கு பதிலளிக்கப்பட மாட்டாது – LLRC

சர்வதேச மன்னிப்புச் சபையின் அறிக்கைக்கு பதிலளிக்கப்பட மாட்டாது என உண்மையைக் கண்டறியும் ஆணைக்குழுவின் ஊடக ஆலோசகர் லக்ஸ்மன் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

ஆணைக்குழுவின் ஆரம்ப கட்ட விசாரணைகளின் போது சாட்சியமளிக்குமாறு சர்வதேச மன்னிப்புச் சபைக்கு அழைப்பு விடுக்கப்பட்டதாகவும் அதற்கு உரிய பதலளிக்கப்படவில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

எனவே, சர்வதேச மன்னிப்புச் சபையின் அறிக்கைகளுக்கு பதிலளிக்க வேண்டிய அவசியம் கிடையாது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

தமது அழைப்பினை ஏற்றுக் கொள்ளாது, தொடர்ச்சியாக விமர்சனங்களை வெளியிட்டு வந்த சர்வதேச மன்னிப்புச் சபைக்கு பதிலளிக்க வேண்டியதில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இவ்வாறான நடவடிக்கைகளின் மூலம் சர்வதேச மன்னிப்புச் சபையின் நம்பகத்தன்மை கேள்விக்குறியாக மாறியுள்ளது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

No comments:

Post a Comment