Thursday,September 15,2011இலங்கையில் போர் நடைபெற்ற போது, அகதிகளாக இந்தியாவுக்கு சென்ற 9 குடும்பங்களை மீண்டும் இன்று நாடு திரும்பியுள்ளன. ஐக்கிய நாடுகளின் அகதிகளுக்கான உயர்ஸ்தானிகரலாயத்தின் உதவியுடன் இவர்கள் நாடு திரும்பியுள்ளனர். இவர்கள் இன்று காலை 8.35 அளவில் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
2009 ஆம் ஆண்டு 252 குடும்பங்களை சேர்ந்த 818 பேர் இந்தியாவில் இருந்து நாடு திரும்பியிருந்தனர், 2010 ஆம் ஆண்டு 584 குடும்பங்களை சேர்ந்த 2 ஆயிரத்து 40 பேர் நாடு திரும்பினர், 2011 ஆம் ஆண்டில் இதுவரையான காலபகுதியில் 48 குடும்பங்களை சேர்ந்த ஆயிரத்து 402 குடும்பங்கள் நாடு திரும்பியுள்ளன.
No comments:
Post a Comment