Saturday, September 10, 2011881 முன்னாள் புலி உறுப்பினர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
குறித்த உறுப்பினர்களுகு எதிராக வழக்குகளைத் தொதாடர்வதற்கு முன்னதாக விசாரணைகள் நடத்தப்பட்டு வருவதாகக் குறிப்பிடப்படுகிறது.
விசாரணைகள் பூர்த்தியானதன் பின்னர் குற்றப்பாத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு வழக்குகள் தொடரப்படும் என பிரதி சொலிசுட்டர் ஜெனரல் சவேந்திர பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
22 முன்னாள் புலி உறுப்பினர்களுக்கு எதிராக நீதவான் நீதிமன்றங்களிலும், 278 முன்னாள் புலி உறுப்பினர்களுக்கு எதிராக உயர் நீதிமன்றங்களிலும் வழக்குத் தொடரப்பட்டுள்ளது.
மேலும், 200 பேர் சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதுடன், 204 பேர் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
இறுதிக் கட்ட யுத்தத்தின் போது 4281 பேர் கைது செய்யப்பட்டதாகவும் இதில் வழக்குத் தொடர்வதற்கு போதியளவு ஆதாரங்கள் இல்லாத காரணத்தினால் ஆயிரம் பேர் விடுதலை செய்யப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
அவசரகாலச் சட்டம் நீக்கப்பட்ட போதிலும் முன்னாள் புலி உறுப்பினர்கள் பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டு விசாரிக்கப்படுவார்கள் என சவேந்திர பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
பொதுப்பாதுகாப்புச் சட்டத்தின் 40ம் சரத்தின் அடிப்படையில் வழக்குகள் தொடுக்கப்பட உள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.
பயங்கரவாதம் தொடர்பான விசாரணைகளை முன்னெடுப்பதற்கு சந்தேக நபர்களை தொடர்ந்தும் தடுத்து வைப்பது சர்வதேச ரீதியில் ஏற்றுக்கொள்ளப்பட்ட நடைமுறையாகும் என அவர் தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment