Sunday, September 25, 20116500 புலி உறுப்பினர்களுக்கு மறுவாழ்வு அளிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் சரத் அமுனுகம தெரிவித்துள்ளார்.
இறுதிக் கட்ட யுத்தத்தின் போது 11644 முன்னாள் புலி உறுப்பினர்கள் படையினரிடம் சரணடைந்ததாகக் குறிப்பிட்டுள்ளார்.
வடக்கு கிழக்கை மையப்படுத்தி அரசாங்கம் பாரியளவிலான உட்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்தி வருவதாகக் குறிப்பிட்டுள்ளார்.
யுத்தம் நிறைவடைந்ததன் பின்னர் நாட்டில் ஆரோக்கியமான பொருளாதார வளர்ச்சி நிலைமை ஏற்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
உண்மையைக் கண்டறியும் ஆணைக்குழுவின் நடவடிக்கைகள் முன்னேற்றகரமாக அமைந்துள்ளது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஆணைக்குழுவின் இடைக்கால பரிந்துரைகள் ஏற்கனவே அமுல்படுத்தப்பட்டு வருவதாகக் குறிப்பிட்டுள்ளார்.
அமெரிக்காவின் வொஷிங்டன் டி.சி.யில் சர்வதேச நாணய நிதியம் மற்றும் உலக வங்கி ஆகியவற்றின் ஆண்டுப் பொதுக் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றிய போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment