Sunday, September 04, 2011
இந்திய - வங்கதேச எல்லையில் வேலி அமைக்கும் போது 4 கி.மீ தூரத்துக்கு இந்திய நிலப்பரப்பு பறிபோயுள்ளது. இதனால் அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். அசாம் மாநிலம் கரீம்கஞ்ச் மாவட்டம், வங்கதேச எல்லையில் உள்ளது. இந்திய - வங்கதேச எல்லையில் வேலி அமைக்கப்பட்டு வருகிறது. இந்த பணியில் நேஷனல் வொர்க்ஸ் பில்டிங் கன்ஸ்டிரக்ஷன் கம்பெனி, நேஷனல் புராஜெக்ட் கன்ஸ்டிரக்ஷன் கம்பெனி லிமிடெட் ஆகிய 2 கம்பெனிகள் ஈடுபட்டு வருகின்றன. சர்வதேச விதிமுறைகளை கண்டுகொள்ளாமல் இந்த கம்பெனிகள், இந்திய - வங்கதேச எல்லையில் வேலி அமைத்துள்ளன. இதனால் இந்தியாவின் 4 கி.மீ தூரம் பறிபோயுள்ளது தெரிய வந்துள்ளது.
இதுகுறித்து கரீம்கஞ்ச் துணை கமிஷனர் ஜித்தன் போர்கோரி நிருபர்களிடம் கூறியதாவது: எல்லையில் வேலி அமைக்கும் பணிகளை ஆய்வு செய்ய சென்றேன். அப்போது விதிகளை மீறி இந்திய பகுதிக்குள் 4 கி.மீ தூரம் தாண்டி வேலி அமைக்கப்பட்டுள்ளதை பார்த்து அதிர்ச்சி அடைந்தேன். இந்திய - வங்கதேச ஒப்பந்தப்படி இருநாட்டு எல்லையிலும் 137 மீட்டர் தூரத்துக்கு Ôஆள் இல்லா பகுதிÕ (நோ மேன் ஸோன்) விடவேண்டும்.
ஆனால், இந்த 2 கம்பெனிகளும் அசாம் மாநிலத்தின் நியாமுர் மற்றும் கோபிந்தாபூர் ஆகிய எல்லைகளில் 1200 மீட்டர் முதல் 1800 மீட்டர் வரை இந்தியாவின் நிலப்பகுதியில் வேலி அமைத்துள்ளன. இதனால் 4 கி.மீ தூரம் இந்தியாவுக்குள் வேலி வந்துள்ளது. பணியின் போது கம்பெனி அதிகாரிகள் மிகமிக அலட்சியமாக செயல்பட்டுள்ளனர். இதுகுறித்து அசாம் தலைமை செயலருக்கு தகவல் தெரிவித்து நடவடிக்கை எடுக்கும்படி கூறியுள்ளேன். இவ்வாறு துணை கமிஷனர் ஜித்தன் கூறினார்.
No comments:
Post a Comment