Tuesday, September 20, 2011

சந்தேக நபர்களை 48 மணித்தியாலங்கள் தடுத்து வைக்க முடியும் - ஹக்கீம்!

Tuesday, September 20, 2011
சந்தேக நபர்களை 48 மணித்தியாலங்கள் தடுத்து வைப்பதற்கான அதிகாரம் தொடர்ந்தும் காவல்துறையினருக்கு காணப்படுவதாக நீதி அமைச்சர் ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார்.

குற்றவியல் விசேட ஒழுங்கு சட்டத் திருத்தத்தை இறுதியாக பாராளுமன்றம் அங்கீகரிக்காத போதிலும், சந்தேக நபர்களை 48 மணித்தியாலங்களுக்கு தடுத்து வைக்க முடியும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

குறித்த சட்டத் திருத்தம் தொடர்பில் எதிர்க்கட்சி உறுப்பினர்களுடன் விரைவில் பேச்சுவார்த்தை நடத்தப்பட உள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.

பாராளுமன்றில் குறித்த சட்டத்திற்கு அனுமதி கிடைக்காத போதிலும், வர்த்தமானி அறிவித்தல் மூலம் குறித்த சட்டத்தை அமுல்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என அவர் தெரிவித்துள்ளார்.

2007ம் ஆண்டு இந்த சட்டம் முதலில் அமுல்படுத்தப்பட்டது என சுட்டிக்காட்டியுள்ளார்.

ஒவ்வொரு இரண்டு ஆண்டுக்கு ஒரு தடவையும் இந்த சட்டம் நீடிக்கப்பட வேண்டும் என்ற போதிலும், 2009ம் ஆண்டு இந்த சட்டத்தை நீடிக்கப்பதற்கு பாராளுமன்ற அனுமதி கிடைக்கப் பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, எதிர்க் கட்சியினரின் கருத்துக்களை கேட்டறிந்து அதன் பின்னர் அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் ஹக்கீம் தெரிவித்துள்ளார்.

இந்தச் சட்டத் திருத்தத்தை நிரந்தரமாக அமுல்படுத்துவது குறித்தும் கவனம் செலுத்தப்பட்டு வருவதாகக் குறிப்பிட்டுள்ளார்.

No comments:

Post a Comment