Friday, September 16, 2011

சிறைக் கைதிக்கு 333 ரூபா: சிறுவருக்கு 20 ரூபா!

Friday, September 16, 2011
சிறைத்தண்டனை அனுபவித்து வரும் ஒரு குற்றவாளிக்கு நாளாந்தம் அரசாங்கம் 333 ரூபாவைச் செலவிடும் அதேவேளை, சிறுவர் பராமரிப்பு நிலையங்களைச் சேர்ந்த சிறுவர்களுக்கு நாளாந்தம் தலா 20 ரூபா மட்டுமே செலவிடப்படுகிறது என்று தெரிய வந்துள்ளது.சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகமான பி. டபிள்யூ. கொடிப்பிலி தகவல் தருகையில், சிறைத்தண்டனை அனுபவித்து வரும் ஒரு கைதிக்காக மாதாந்தம் பத்தாயிரம் ரூபா செலவிடப்படுவதாகத் தெரிவித்தார். இதன்படி ஒரு நாளைக்கு ஒரு கைதிக்கான செலவு சுமார் 333 ரூபா எனக் கூறினார்.

இதேவேளை, நன்னடத்தைச் சிறுவர் பராமரிப்பு சேவைத் திணைக்கள அதிகாரியான ராஸிக்க ஜயதுங்க தகவல் தருகையில், சிறுவர் பராமரிப்பு நிலையங்களைச் சேர்நத சிறுவர்களுக்கு நாளாந்தம் தலா 22 ரூபா செலவிடப்படுவதாகவும் அதன்படி மாதாந்தம் 600 ரூபா மட்டுமே ஒரு சிறுவனுக்குச் செலவாகிறது எனவும் கூறினார்

No comments:

Post a Comment