


Wednesday, September 28, 2011பெய்ஜிங்:சீனாவில் ஷாங்காங் நகரில் மெட்ரோ ரெயில்கள் சுரங்க பாதையில் இயக்கப்படுகின்றன. நேற்று இங்கு 2 ரெயில்கள் நேருக்கு நேர் பயங்கரமாக மோதிக்கொண்டன. இதனால் ரெயில் பெட்டிகள் ஒன்றுடன் ஒன்று மோதி நொறுங்கின. தகவல் அறிந்ததும் மீட்பு பணி உடனடியாக தொடங்கியது. ஆயுதப் படை போலீசார் அங்கு விரைந்து சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர்.
இந்த விபத்தில் 260 பேர் படுகாயம் அடைந்தனர். அவர்கள் அனைவரும் மீட்கப்பட்டு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர். மேலும், விபத்துக்குள்ளான ரெயில் பெட்டிகளில் சிக்கி கிடந்த 500 பேர் பத்திரமாக மீட்கப்பட்டனர். விபத்து காரணமாக ரெயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. 9 ரெயில் நிலையங்கள் மூடப்பட்டன.
இந்த விபத்துக்கு சிக்னல் கோளாறு காரணம் என கூறப்படுகிறது. சிக்னல்கள் வேலை செய்யாததால் டெலிபோன் மூலம் ரெயில் என்ஜின் டிரைவர்களுக்கு தகவல் தரப்பட்டது. அதனால் தான் விபத்து ஏற்பட்டது என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சமீப காலமாக சீனாவில் அடிக்கடி ரெயில் விபத்துக்கள் நடைபெறுகிறது.
கடந்த ஜூலை மாதம் தெற்கு சீனாவில் உள்ள வென்ஷோ என்ற இடத்தில் புல்லட் ரெயில்கள் மோதிக்கொண்டன. அதில் 40 பேர் உயிர் இழந்தனர். எனவே ரெயில் விபத்தை தடுக்க அதிகாரிகள் தீவிர முயற்சி மேற்கொண்டுள்ளனர்.
No comments:
Post a Comment