Friday, September 09, 2011
புலிகளின் கடற்புலிகளின் தளபதியான சூசையின் மைத்துனருக்கு புத்தளம் வண்ணாத்திவில்லு பிரதேசத்தில் 1500 ஏக்கர் அரச காணி ஒன்று வழங்கப்பட்டமை தொடர்பில் ஜனாதிபதி விசாரணை பிரிவினர் விரிவான விசாரணைகளை நடத்தி வருகின்றனர். இது குறித்து விசாரணை நடத்த அதிகாரிகள் குழுவொன்று அங்கு சென்றுள்ளதாக அரசாங்கத்தின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
வண்ணாத்திவில்லு பிரதேசத்தில் உள்ள அரச காணிகள் துண்டுகளாக பிரிக்கப்பட்டு தனியாருக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளதாக கிடைத்த தகவல்களை ஒன்றை அடுத்து நடத்தப்பட்ட விசாரணைகளின் போதே கடற்புலிகளின் தளபதி சூசையின் மைத்துனருக்கு 1500 ஏக்கர் காணி விற்பனை செய்யப்பட்டுள்ளமை தெரியவந்துள்ளது.
வன்னி இராணுவ நடவடிக்கை ஆரம்பிக்கப்படுவதற்கு பல வருடங்களுக்கு முன்னர், சூசையின் மைத்துனருக்கு இந்த காணி வழங்கப்பட்டுள்ளது என தகவல்கள் தெரிவிக்கின்றன. இணையத்தளம் ஒன்றை பயன்படுத்தி வண்ணாத்திவில்லு பிரதேசத்தில் உள்ள அரச காணிகள் துண்டாடப்பட்டு, இவ்வாறு விற்பனை செய்யப்பட்டு வந்துள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

No comments:
Post a Comment