Tuesday, August 23, 2011

சட்டத்தைத் தமது கையில் எடுத்துக்கொண்டு பொதுச் சொத்துக்களைச் சேதப்படுத்தி அரசாங்க அதிகாரிகள் மீது தாக்குதல் நடத்துபவர்கள் தொடர்பாக கடுமையான சட்டநடவடிக்கை எடுக்கப்படும்-லக்ஷ்மன் ஹுலுகல்ல!

Tuesday, August 23, 2011
சட்டத்தைத் தமது கையில் எடுத்துக்கொண்டு பொதுச் சொத்துக்களைச் சேதப்படுத்தி, அரசாங்க அதிகாரிகள் மீது தாக்குதல் நடத்துபவர்கள் தொடர்பாக கடுமையான சட்டநடவடிக்கை எடுக்கப்படும் என்று தேசிய பாதுகாப்புக்கான ஊடக மத்திய நிலையப் பணிப்பாளர் நாயகம் லக்ஷ்மன் ஹுலுகல்ல தெரிவித்தார்.

நாட்டில் தற்போதைய அமைதியான சூழலை சீர்குலைக்க வேண்டிய தேவை ஒரு சிலருக்கு ஏற்பட்டுள்ளது. அவர்களே இவ்வாறான நடவடிக்கைகளில் ஈடுபடுகின்றனர். ஆனால், அமைதியான இந்த நிலைமையை ஏற்படுத்த அரசாங்கம் பாரிய முயற்சிகளை எடுக்கவேண்டியிருந்தது என்பதை அவர்கள் நினைத்துப் பார்ப்பதில்லை என்றும் அவர் தினகரனுக்கு மேலும் தெரிவித்தார்.

நாட்டின் பல்வேறு இடங்களில் சில குழுக்கள் பொலிஸார் மீதும், பாதுகாப்பு படை முகாம்கள் மீதும் தாக்குதல்களை நடத்தியுள்ளன. இது சட்டப்படி ஒரு குற்றச்செயலாகும். இல்லாதவொரு உருவத்திற்காக வேண்டி சட்டத்தை எவரும் கைகளில் எடுத்துக்கொள்ள முடியாது.

அதன் மூலம் பொலிஸாரைக் கொலை செய்வதோ, மக்கள் மீது தாக்குதல் நடத்துவதோ பொதுசொத்துக்களை கண் மூடித்தனமாக அழிப்பதோ ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்றாகும். இனந்தெரியாத நபர் ஒருவர் கிராமத்துக்குள் நுழைந்தால் அவர்கள் மீது தாக்குதல் நடத்தவோ, வெட் டவோ, கொலை செய்யவோ எவருக்கும் அனுமதியில்லை.

வ்வாறான செயற்பாடுகள் மூலம் உண்மையாகவே குற்றச்செயல்களில் ஈடுபடுவோரே நன்மையடைகின்றனர். புத்தளத்தில் பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் கொல்லப்பட்டமை பரிதாபகரமான தொன்றாகும் எனத் தெரிவித்த லக்ஷ்மன் ஹுலுகல்ல,

இவ்வாறான நிலையில் பொலிஸார், பொதுமக்கள் தொடர்பான விசாரணைகளை எவ்வாறு நடத்த முடியும் என்று கேள்வியெழுப்பினார்.

இதேவேளை, பொலிஸார் தமது பிரச்சினைகளைத் தீர்க்கவில்லையென்று ஒரு சிலர் கூறித் திரிகின்றனர் என்றும் அவர் குறிப்பிட்டார்.

No comments:

Post a Comment