Wednesday, August 24, 2011
மன்னார் கஜபா கடற்படை முகாமிலுள்ள கடற்படை வீரர் ஒருவர் தமது துப்பாக்கியுடன் தப்பிச்செல்ல முற்பட்ட வேளையில் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த கடற்படை வீரர் தனது துப்பாக்கியுடன் நேற்றிரவு 7.30 மணியளவில் தப்பிச் சென்றதாக கடற்படை ஊடகப் பேச்சாளர் கொமாண்டர் கோசல வர்ணகுலசூரிய தெரிவித்தார்.
தப்பிச்சென்ற வேளையில் இவர் மன்னார் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
இவ்வாறு தப்பிச்சென்ற வீரரிடமிருந்து ரீ-56 ரக துப்பாக்கிகள் மற்றும் 120 துப்பாக்கி ரவைகள் கைப்பற்றப்பட்டதாக கடற்படை ஊடகப் பேச்சாளர் மேலும் கூறினார்.
No comments:
Post a Comment