Wednesday, August 24, 2011
மல்லாகம், கோணாப்புலம் நலன்புரி முகாம் மற்றும் நீதிவான் முகாம் பகுதியில் நேற்று இரவு கறுப்பு உடையணிந்த இருவர் சந்தேகத்திற்கிடமான முறையில் நடமாடியதால் பதற்றம் ஏற்பட்டது.
இதனையடுத்து முகாம் மக்கள் கத்திக்குளறியதுடன் இவர்களைப் பிடிப்பதற்காக துரத்திச் சென்றுள்ளனர். ஆயினும் மேற்படி இருவரும் தப்பியோடி விட்டனர்.
இதனைத் தொடர்ந்து முகாம் மக்கள் பொலிஸாருக்கு அறிவித்ததையடுத்து அப்பகுதிக்கு வந்து இருபொலிஸார் தப்பியோடியவர்களை தேடிப்பிடிப்பதற்கு தங்களுடன் இருவரை வருமாறு கேட்டுள்ளனர்.
இதற்கு முகாம் வாசிகள் மறுப்பு தெரிவித்ததையடுத்து பொலிஸார் திரும்பி சென்றுவிட்டனர். இதன் பின்னர் இப்பகுதியில் வழமைக்கு மாறாக அதிக இராணுவத்தினர் சுற்றி வளைத்து நின்றதாக தெரிவிக்கப்படுகிறது.
இதேவேளை நாவாந்துறை சம்பவம் தொடர்பில் காயமடைந்து யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளவர்களை எம்.பிக்களான திருமதி. விஜயகலாமகேஸ்வரன், ஈ.சரவணபவன், ஆகியோர் நேரில் சென்று பார்வையிட்டுள்ளனர். _
No comments:
Post a Comment