Sunday, August 21, 2011

கிறீஸ் மர்ம மனிதன்-அச்சத்தின் பின்னணியில், அடிப்படைவாத அமைப்பும், தமிழ் அரசியல் கட்சியும் - திவயின!!!

Sunday, August 21, 2011
கிறீஸ் மர்ம மனிதன் - அச்சத்தின் பின்னணியில், அடிப்படைவாத அமைப்பும், தமிழ் அரசியல் கட்சியும் - திவயின.

கிழக்கு மாகாணத்தில் ஏற்பட்டுள்ள கிறீஸ் மர்ம மனிதன் தொடர்பான அச்சத்தின் பின்னணியில், அடிப்படைவாத அமைப்பொன்றும், தமிழ் அரசியல் கட்சியொன்றும் இருப்பதாக பாதுகாப்பு தரப்பினரின் விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக திவயின பத்திரிகை தெரிவித்துள்ளது.

இலங்கை இராணுவத்தினர், கிழக்கில், பெண்களை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்துவதாக சர்வதேச நாடுகளுக்கு முறைப்பாடுகளை செய்வதே இந்த அமைப்புகளின் நோக்கம் எனவும் அதில் கூறப்பட்டுள்ளது.

இந்த விடயம் தொடர்பான பிரசாரங்கள் மத்திய கிழக்கு நாடுகளில் மேற்கொள்ளப்பட்டிருந்ததாக தெரியவந்துள்ளது. இதற்கு பொறுப்புக் கூறவேண்டிய தரப்பு யார் என்பது தற்போது கண்டறியப்பட்டுள்ளது. வெளிநாடுகளில் இருந்து கிழக்கு மாகாணத்திற்கு வரும் தொலைபேசி அழைப்புகள் பலவற்றை பாதுகாப்பு தரப்பினர் செவிமடுத்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன எனவும் திவயின தெரிவித்துள்ளது.

No comments:

Post a Comment