Monday, August 22, 2011
காத்தான்குடி பொலிஸ் பிரிவிலுள்ள நாவற்குடா பிரதேசத்தில் நேற்றிரவு கைது செய்யப்பட்ட நாலு பேரையும் இன்று (22.8.2011) விடுவித்ததாக காத்தான்குடி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி நிமல் குணவர்த்தன தெரிவித்தார்.
காத்தான்குடி பொலிஸ் பிரிவிலுள்ள நாவற்குடா பிரதேசத்தில் நேற்றிரவு (21.8.2011) மர்ம மனிதன் ஊடுருவியதாக ஏற்பட்ட பதற்ற நிலையினால் அங்கு சென்ற காத்தான்குடி பொலிசாருக்கும் பொதுமக்களுக்கு மிடையில் முரண்பாடு தோன்றியது.
இதையடுத்து இங்கு இரானுவத்தினர் வரவழைக்கப்பட்டு இங்கு ஏற்பட்ட அசாதாரண சூழ்நிலையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்ததுடன் குழப்பத்தை தூண்டும் முயற்சியில் ஈடுபட்டார்கள் என்ற குற்றச்சாட்டின் பேரில் நாலு பேர் கைது செய்யப்பட்டு காத்தான்குடி பொலிஸ் நிலையத்தில் இவர்களின் வாக்கு மூலங்கள் பதியப்பட்ட பின்னர் இவர்கள் பொலிஸ் நிலையத்தில் வைத்தே இன்று விடுவித்ததாக பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி மேலும் தெரிவித்தார்.

No comments:
Post a Comment