Thursday, August 25, 2011

வேட்புமனு தாக்கல் இறுதி தினம் இன்று!

Thursday, August 25, 2011
எஞ்சிய 23 உள்ளுராட்சி சபை தேர்தல்களுக்குமான வேட்பு மனுக்கள் தாக்கல் செய்யும் இறுதி தினம் இன்றாகும்.

இதன்படி இன்று நன்பகல் 12 மணி வரையில் அரசியல் கட்சிகள் தங்களது வேட்பு மனுக்களை தாக்கல் செய்ய முடியும்.

பின்னர் மேலதிக ஒரு மணி நேரத்தில் கட்சிகள் தங்களது முறைப்பாடுகளை சமர்ப்பிக்க முடியும்.

இதன் பின்னர், தேர்தல் இடம்பெறும் திகதியை தேர்தல்கள் ஆணையளர் அறிவிப்பார்.

இதனிடையே, சுயாதீன குழுக்களுக்கான கட்டுப்பணம் செலுத்தும் நடவடிக்கைகள் நேற்று நண்பகல் 12 மணியுடன் நிறைவடைந்தது.

இந்த நிலையில், 143 சுயேற்சை குழுக்கள் தங்களது கட்டுப்பணங்களை செலுத்தியுள்ளதாக தேர்தல்கள் செயலகம் குறிப்பிட்டுள்ளது.

ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு, ஐக்கிய தேசிய கட்சி மற்றும் ஜே வி பி என்பன இன்றைய தினம் கெபாழும்பு நகர மாநகர சபைக்காக இன்றைய தினம் தமது வேட்பு மனுக்களை தாக்கல் செய்யவுள்ளன.

இந்த முறை இடம்பெறும் உள்ளுராட்சி சபை தேர்தலில் 17 நகர சபைகள், ஒரு மாநகர சபை மற்றும் 5 பிரதேச சபைகளுக்கான வேட்பாளர்களை தெரிவு செய்யப்படவுள்ளனர்.

No comments:

Post a Comment