Sunday, August 21, 2011

வவுனியா காவல்துறையினரை தாக்கியவர்கள் விளக்கமறியலில்!

Sunday, August 21, 2011
வவுனியா பெரிய கோமரசன்குளத்தில் காவல்துறை அதிகாரிகள் மூவர் மீது தாக்குதல் நடத்தினார்கள் என்ற சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட 11 இளைஞர்கள் விளக்கமறியலில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.

வவுனியா நீதிமன்ற நீதவான் எம்.மொஹிதீனினால் இவர்களுக்கு எதிர்வரும் 2 ம் திகதிவரை விளக்கமறியல் தடுத்துவைப்பதற்கான தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

நேற்று இரவு இனந்தெரியாத இருவர் ஊந்துருளில்; சென்று கொண்டிருந்த சமயம் அவர்களை துரத்தி சென்ற இளைஞர்கள் அந்த பகுதிக்கு வந்த காவல்துறையினரையும் தாக்கியுள்ளனர்.

இதன்போது மூன்று காவல்துறையினர் உட்பட 5 பேர் காயமடைந்து வவுனியா பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்ட்டுள்ளனர்.

கோமரசன்குளம் பகுதியில் இருவர் ஊந்துளியில் சந்தேகத்திற்கிடமான முறையில் சென்று கொண்டிருந்ததாகவும் அதன் போது கிராம இளைஞர்கள் இணைந்து அவர்களை துரத்தி சென்றுள்ளனர்.

அந்த தருணத்தில் அவர்கள் பாடசாலையொன்றினுள் புகுந்ததாகவும் அப்போது இளைஞர்கள் அந்த இருவரையும் தாக்கியுள்ளனர்.

இதன்போது அந்த இடத்திற்கு வருகைதந்த பரீட்சை மண்டபத்தில் கடமையாற்றும் காவல்துறையினர் மீதும் இளைஞர்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர்.

இதேவேளை, கிறீஸ் பூதம் என்று கருதி பிரதேச வாசிகளின் தாக்குதலுக்கு உள்ளான கல்பிட்டிய காவல்நிலைய உத்தியோகத்தர் சிலாபம் பொது வைத்தியசாலைக்கு நேற்று மாற்றப்பட்டுள்ளார்..

No comments:

Post a Comment