Friday, August 26, 2011
அவசரகால சட்டத்தை நீக்குவதற்கு மேற்கொள்ளப்பட்ட தீர்மானத்தை அமெரிக்கா வரவேற்றுள்ளது.
இந்த சட்டம் நீக்கப்படுகின்றமை, ஜனாதிபதி மகிந்தராஜபக்ஷவின் சாதகமான தீர்மானம் என அமெரிக்க ராஜாங்க திணைக்களத்தின் பேச்சாளர் விக்டோரியா நுலண்ட் தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில், எதிர்வரும் 29ம் திகதி, அமெரிக்காவின் உதவி ராஜாங்க செயலாளர் ரொபர்ட் பிலேக் இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
29ம் திகதி முதல், 31ம் திகதி வரையில் ரொபர்ட் பிலேக் இலங்கையில் தங்கி இருப்பார்.
ரொபர்ட் ஓ பிலேக் இலங்கையின் அரச தரப்பு மற்றும் மனித உரிமைகளின் பிரதிநிதிகளை சந்தித்து உரையாற்றுவார் என பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
அத்துடன், சமூக பிரதிநிதிகள், பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் தமிழ் அரசியல் தலைவர்களையும் அவர் சந்தித்து உரையாற்றவுள்ளார்.
அத்துடன் யாழ்ப்பாணத்துக்கான விசேட விஜயம் ஒன்றையும் அவர் மேற்கொள்ளவுள்ளார்.
இதற்கிடையில் தொடர்ந்து சர்வதேச சட்டத் திட்டங்களுக்கு அமைய செயற்படுமாறு இலங்கையை அமெரிக்கா வலியுறுத்தும் என பேச்சாளர் நூலண்ட் தெரிவித்துள்ளார்.
யுத்தக் குற்றச்சாட்டுகள் தொடர்பிலான விசாரணைகளை உள்நாட்டில் மேற்கொள்ளாதபட்சத்தில், சர்வதேச ரீதியாக அதனை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டார்.
இவை தொடர்பில் ரொபர்ட் பிலக் இலங்கையுடன் பேச்சு நடத்துவார் எனவும் பேச்சாளர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அமெரிக்க தூதரகத்தினால் வெளியிடப்பட்ட விசேட அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.
புலிகள் தோற்கடிக்கப்பட்டு இரண்டு ஆண்டுகளின் பின்னர் அவசரகாலச் சட்டம் நீக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:
Post a Comment