Wednesday, August 24, 2011
தமிழ் மக்களின் ஆதரவினை இலங்கை அரசாங்கம் பெற்றுக்கொள்ளத் தவறியுள்ளதாக இந்தியா அறிவித்துள்ளது. புலிகளுக்கு எதிரான போர் வெற்றி கொள்ளப்பட்ட போதிலும், தமிழ் மக்களின் இதயங்களை வென்றெடுக்க நடவடிக்கை எடுக்கப்படவில்லை என இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் எம்.கே. நாராயணன் தெரிவித்துள்ளார்.
இந்திய ஊடகமொன்றுக்கு அளித்த நேர் காணலில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
தமிழ் மக்களின் இதயங்களை வென்றெடுப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்ற ஆலோசனையை இலங்கை விரும்பாது.
எனினும், ஏனைய சர்வதேச நாடுகளை விடவும் தமிழ் மக்களை நன்கு அறிந்து கொண்டவர்கள் என்ற ரீதியில் இந்த ஆலோசனையை வழங்குவதாகக் குறிப்பிட்டுள்ளார்.
தமிழ் மக்கள் மத்தியில் திருப்தியான நிலைமை ஏற்படும் வரையில் நிரந்தர சமாதானத்தை ஏற்படுத்துவது சுலபமாகாது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
No comments:
Post a Comment