Sunday, August 21, 2011
தற்போது நாட்டில் அமுலில் உள்ள பயங்கரவாதத் தடைச் சட்டத்தில் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
எதிர்வரும் செப்டம்பர் மாதத்தில் இந்த புதிய சட்டத் திருத்தங்கள் பாராளுமன்றில் நிறைவேற்றப்பட உள்ளது.
இதேவேளை, கடந்த ஆறு ஆண்டுகளாக தொடர்ச்சியாக அமுல்படுத்தப்பட்டு வந்த அவசரகாலச் சட்டத்தை நீக்குவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
எதிர்வரும் செப்டம்பர் மாதம் 8ம் திகதி அவசரகாலச் சட்ட நீக்கம் தொடர்பில் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அவசரகாலச் சட்டம் நீக்கப்படும் காரணத்தினால் பயங்கரவாதத் தடைச் சட்டத்தை மேலும் வலுவாக்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட உள்ளன.
செப்டம்பர் மாதம் நடைபெறவுள்ள பாராளுமன்ற அமர்வுகளின் போது அவசரகாலச் சட்டத்தை மேலும் ஒரு மாதத்திற்கு நீடிக்கும் யோசனை முன்வைக்கப்பட மாட்டாது என எதிர்பார்க்கப்படுகிறது.
எனினும், அவசரகாலச் சட்டம் நீக்கப்பட்டு இரண்டு வாரங்களுக்குள் புதிய பயங்கரவாதத் தடைச் சட்டத் திருத்தங்கள் அமுல்படுத்தப்படும்.
2005ம் ஆண்டு வெளிவிவகார அமைச்சர் லக்ஸ்மன் கதிர்காமர் படுகொலை செய்யப்பட்டதனைத் தொடர்ந்து நாட்டில் அவசரகாலச் சட்டம் தொடர்ச்சியாக நீடிக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
Sunday, August 21, 2011
தற்போது நாட்டில் அமுலில் உள்ள பயங்கரவாதத் தடைச் சட்டத்தில் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது!
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment