Wednesday, August 24, 2011

புத்தளம் சிலாபம் பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவமொன்றில் ஒருவர் பலி!

Wednesday, August 24, 2011
புத்தளம் சிலாபம் பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவமொன்றில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

சிலாபம் சிப்பிகலான பிரதேசத்தில் நேற்று இரவு இத்துப்பாக்கிச் சூடு இடம்பெற்றுள்ளதாக சிலாபம் பொலிஸார் தெரிவித்தனர்.

விட்டிலிருந்து வெளியில் வந்த நபர்மீது இனந்தெரியாத ஒருவர் துப்பாக்கிச் சூடு நடத்திவிட்டுத் தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

சிலாபம் சிப்பிகலான பகுதியில் அண்மைக் காலங்களில் இடம்பெற்ற குற்றச் செயல்கள் பலவற்றுடன் தொடர்புடைய சந்தேகநபரே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் குறிப்பிட்டனர்.

சம்பவம் தொடர்பில் சந்தேகநபர்கள் எவரும் கைது செய்யப்படாத நிலையில் சிலாபம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

No comments:

Post a Comment