Wednesday, August 24, 2011
தற்போது செயற்படாதிருக்கும், நாடுபூராகவும் உருவாக்கப்பட்டுள்ள சிவில் பாதுகாப்புக் குழுக்கள் எதிர்வரும் ஆகஸ்ட் 30 ஆம் திகதிக்கு முன்னர் மீண்டும் திடமாக செயற்பட வேண்டும் என பாதுகாப்புச் செயலாளர் கோடாபய ராஜபக்ஷ மற்றும் பொலிஸ் மா அதிபர் இலங்ககோன் ஆகியோர் அறிவித்துள்ளனர்.
சிவில் பாதுகாப்புக் குழுவானது மிகவும் சிறந்த முறையில் செயற்பட்டு, கடந்த யுத்தகாலங்களில் நாட்டின் அமைதிக்காக சிறந்த பங்களிப்பு செய்தும் வந்தது. இக் குழுவானது நாட்டில் யுத்தம் நடைபெற்றுக் கொண்டிருந்த காலகட்டத்தில் பொதுமக்கள் பாதுகாப்புக்காக மிகவும் அர்ப்பணிப்புடன் செயற்பட்டு வந்தன.
14,000க்கு மேற்பட்ட சிவில் பாதுகாப்புக் குழுக்கள் நாடுபூராகவும் செயற்பட்டு தமது கிராமங்களை பாதுகாத்து வந்த அதேவேளை யுத்தத்திற்கு பின் இவை தமது செயற்பாட்டை இழந்தமை குறிப்பிடத்தக்கது.
சிராமங்களில் உள்ள சிவில் பாதுகாப்புக் குழுக்களை மீண்டும் திட்டமிட்டு, மீள ஆரம்பிக்க நடவடிக்கை எடுக்குமாறு, பாதுகாப்பு அமைச்சு மற்றும் பொலிஸ் திணைக்களம் ஆகியவை நாடுபூராகவும் உள்ள அனைத்து பொலிஸ் நிலையங்களுக்கும் அறிவுறுத்தல் விடுத்துள்ளன.
இது தொடர்பான தகவல்கள் அண்மையில் மஹரகம நகர சபை கேட்போர்கூடத்தில், பொலிஸ் அதிகாரிகள் மற்றும் சிவில் பாதுகாப்புக் குழு தலைமைதாங்கிகளுக்கு இடையில் இடம்பெற்ற கூட்டத்தில் வெளியிடப்பட்டன.
No comments:
Post a Comment