Sunday, August 21, 2011
அமெரிக்காவில் மிஸ் சோரி மாகாணத்தில் உள்ள கன்சாஸ் நகரில் விமான சாகச நிகழ்ச்சி நடந்தது. அப்போது விமானங்கள் விண்ணில் பறந்தும், குட்டி கரணம் அடித்தும் மக்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தின.
அப்போது ஒரு விமானம் தலைகீழாக தரையில் விழுந்து நொறுங்கியது. எனவே அது கரும்புகையுடன் தீப்பிடித்து எரிந்தது. இதனால் அங்கு கூடியிருந்த மக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
இந்த விபத்தில் விமானி பிரயான் ஜென்சன் என்பவர் உடல் கருகி பலியானார். கன்சாஸ் விமான சாகச நிகழ்ச்சியில் இது போன்ற விபத்து நடந்ததில்லை. தற்போது தான் முதன் முறையாக நடந்துள்ளது.
கனடாவில் விமான விபத்து 12 பேர் பலி!
கனடாவின் போய்ங் 737 ரக ஜெட் விமானம் விபத்துக்குள்ளானதில் 12 பேர் கொல்லப்பட்டுள்ளதுடன், மேலும் மூவர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
நான்கு விமான பணியார்கள் உட்பட 15 பேர் குறித்த விமானத்தில் பயணித்ததாக கனேடிய பொலிஸாரை மேற்கோள்காட்டி செய்தி வெளியாகியுள்ளது.
குறித்த பகுதிகளில் பயிற்சி நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ள கனேடிய படையினர் மீட்பு நடவடிக்கைகளுக்கு உதவ முடியும் என அந்த நாட்டு தகவல்கள் சுட்டிக்காட்டியுள்ளன.
காயமடைந்தவர்களின் தற்போதைய நிலைமைகள் குறித்து இதுவரை விபரங்களை வெளியிடாத பொலிஸார், விபத்து குறித்து விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:
Post a Comment