Saturday, July 16, 2011

வடக்கில் அபிவிருத்திப் பணிகளைப் பார்வையிடுவதற்காக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ஜனாதிபதி யாழ். விஜயம்!

Saturday, July 16, 2011
வடக்கில் அபிவிருத்திப் பணிகளைப் பார்வை யிடுவதற்காக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களுக்கு நாளை மறுதினம் 18ஆம் திகதி விஜயம் மேற்கொ ள்ளவுள்ளார்.

யாழ்ப்பாணத்தில் மானிப்பாய், கோப்பாய், நெல்லியடி பிரதேசங்களில் ஏற்பாடுசெய்யப்பட்டுள்ள மக்கள் பேரணிக் கூட் டங்களில் கலந்து கொண்டு பல்வேறு அபிவிருத்தித் திட்டங்களையும் ஆரம்பித்து வைக்கவுள்ளார்.

18ஆம் திகதி புனர்வாழ்வு அமைச்சின் விசேட நிகழ்வொன்றில் கலந்துகொள்ளும் ஜனாதிபதி, 20ஆம் திகதி பரந்தன் ஆஸ்பத்திரியை உத்தியோகபூர்வமாகத் திறந்து வைக்கிறார்.

அன்றைய தினம் கிளிநொச்சி பொருளாதார மத்திய நிலையம் மற்றும் கிளிநொச்சி சந்தை கட்டடத்தொகுதி ஆகியவற்றுக்கான அடிக்கல்லையும் நடவுள்ளார்.

இதனைத் தொடர்ந்து கிளிநொச்சியில் நடைபெறவிருக்கும் மக்கள் பேரணிக் கூட்டத்திலும் அவர் கலந்துகொள்ளவுள்ளார்.

No comments:

Post a Comment