Friday, July 15, 2011ஐரோப்பிய ஒன்றிய நாடுகளின் தூதுவர்களுடன் வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் அண்மையில் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.
ஐரோப்பிய ஒன்றிய பிரதிநிதிகள் மற்றும் ஒன்றியத்தில் அங்கம் வகிக்கும் நாடுகளின் இராஜதந்திரிகள் இந்த சந்திப்பில் கலந்து கொண்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.
ஜெர்மனி, பிரான்ஸ், இத்தாலி ஆகிய நாடுகளின் தூதுவர்களும், பிரித்தானிய உயர்ஸ்தானிகரும், ஐரோப்பிய ஒன்றிய பிரதிநிதிகளும் இந்த பேச்சுவார்த்தையில் பங்குபற்றியுள்ளனர்.
வெளிவிவகார அமைச்சின் செயலாளர் கருணாதிலக்க அமுனுகம உள்ளிட்ட அரசாங்கத்தின் சிரேஸ்ட அதிகாரிகள் இந்த சந்திப்பில் கலந்துகொண்டனர்.
No comments:
Post a Comment