Friday, July 15, 2011மும்பை குண்டு வெடிப்பு விசாரணையில் இந்தியாவுக்கு உதவ தயார்: அமெரிக்கா அறிவிப்பு!
மும்பையில் கடந்த 13-ந் தேதி அன்று 3 இடங்களில் அடுத்தடுத்து வெடிகுண்டுகள் வெடித்தன. இந்த குண்டு வெடிப்பு குறித்து மும்பை போலீசாரும், தேசிய புலனாய்வு துறையும் தீவிரமாக விசாரித்து வருகின்றன.
இந்த சூழ்நிலையில், மும்பை குண்டு வெடிப்பு விசாரணையில் உதவ தயாராக இருப்பதாக அமெரிக்கா இன்று அறிவித்தது. ஏற்கனவே, தீவிரவாதிகள் ஹெட்லி மற்றும் ராணா ஆகியோரை அமெரிக்க தேசிய புலனாய்வு துறையினர் கைது செய்தது குறிப்பிடத்தக்கது
No comments:
Post a Comment