Monday, July 18, 2011

தேர்தல்களிலிருந்து விலகிக்கொள்ளப் போவதாக தமிழ்த் தேசியக் (புலி)கூட்டமைப்பு எச்சரிக்கை!

Monday, July 18, 2011
தேர்தல்களிலிருந்து விலகிக்கொள்ளப் போவதாக தமிழ்த் தேசியக் (புலி)கூட்டமைப்பு எச்சரிக்கை!

தேர்தல்களிலிருந்து விலகிக் கொள்ளப் போவதாக தமிழ்த் தேசியக் (புலி)கூட்டமைப்பு கட்சி எச்சரிக்கை விடுத்துள்ளது.

தேர்தல் பிரச்சார நடவடிக்கைகளுக்கு தொடர்ந்தும் இடையூறு ஏற்படுத்தப்பட்டால், தேர்தல்களிலிருந்து விலக நேரிடும் என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும், உள்ளுராட்சி மன்றத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளருமான எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார்.

தேர்தல் பிரச்சாரங்களின் போது பல்வேறு தடைகளை எதிர்நோக்க நேரிட்டுள்ளதாக சுட்டிக்காட்டியுள்ளார்.

இது தொடர்பில் தேர்தல் ஆணையாளரிடமும் முறைப்பாடு செய்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.

தேர்தல் ஆணையாளருக்கு முறைப்பாடு செய்யப்பட்ட போதிலும் இடையூறுகள் தொடர்வதாகத் தெரிவித்துள்ளார்.
தேர்தல் கண்காணிப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு வெளிநாட்டு கண்காணிப்பாளர்கள் ஈடுபடுத்தப்பட வேண்டுமென அவர் வலியுறுத்தியுள்ளார்.

No comments:

Post a Comment