Sunday, July 17, 2011சென்னை மீனம்பாக்கம் அண்ணா பன்னாட்டு விமான நிலையத்தில் இருந்து தாய்லாந்து நாட்டிற்கு தாய் ஏர்வேஸ் செல்ல இருந்தது. இதில் 273 பயணிகளும், 12 ஊழியர்களும் இருந்தனர்.
விமானம் நேற்று முன்தினம் நள்ளிரவு 12.40 மணிக்கு புறப்பட்டுச் சென்றது. விமானம் ஓடுபாதையில் சென்றபோது அதில் இயந்திர கோளாறு ஏற்பட்டதை விமானி கண்டுபிடித்தார். உடனே சென்னை விமான நிலைய கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் அளித்தார்.
இதையடுத்து விமானம் புறப்பட்ட பகுதியிலேயே கொண்டு வந்து நிறுத்த அனுமதிக்கப்பட்டது. விமானி சாமர்த்தியமாக விமானத்தை புறப்பட்ட இடத்திலேயே கொண்டு வந்து நிறுத்தினார்.
உடனே விமான என்ஜினீயர்கள் குழு விமானத்திற்குள் சென்று கோளாறை சரி செய்யும் பணியில் ஈடுபட்டனர். ஆனால் கோளாறு சரி செய்யப்படாததால் விமானத்தில் இருந்த பயணிகள் கீழே இறக்கப்பட்டு ஓட்டல்களில் தங்க வைக்கப்பட்டனர்.
விமானத்தில் ஏற்பட்ட கோளாறை சரி செய்த பிறகு விமானம் புறப்பட்டு செல்லும் என்று விமான நிறுவன அதிகாரிகள் தெரிவித்தனர்.
No comments:
Post a Comment