ஆயுதம் ஏந்திப் போராடினால், தான் அரசியல் தீர்வு குறித்து ஆக்கபூர்வமான கருமங்களைப் பெறமுடியும் என்றால் அதுகுறித்து சிந்திக்க வேண்டிய தேவை உள்ளது என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.
இலங்கை தமிழரசுக் கட்சியின் 16ஆவது தேசிய மாநாடு யாழ்.வீரசிங்கம் மண்டபத்தில் இன்று நடைபெற்றது. இதன்போது, உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.அவர் அங்கு மேலும் உரையாற்றுகையில், “உள்ளக சுயநிர்ணய உரிமையுடன், நிரந்தரமாக பாதுகாப்புடன் தமிழர்கள் வாழ வேண்டும். தந்தை செல்வா கட்சியை ஆரம்பித்து ஏறத்தாழ 70 வருடங்கள் ஆகிவிட்டன. அந்தப் பாதையில் நாங்கள் நீண்டதூரம் பயணித்திருக்கின்றோம். சில முக்கிய