Thursday, January 31, 2013

இலங்கையில் நடந்ததாக கூறப்படும் போர்க்குற்றங்களை சர்வதேச விசாரணைக்கு உட்படுத்த வேண்டுமென்ற தமது நிலைப்பாட்டை மீண்டும் வலியுறுத்தியுள்ளனர் - அமெரிக்க செனட்டர்கள்!

Thursday, January 31, 2013
இலங்கை::போர் குற்றம் தொடர்பான, நியாயமான விசனங்களை கருத்திலெடுத்து செயற்படத் தவறிவிட்டதாக இலங்கை மீது குற்றம் சுமத்தியுள்ள அமெரிக்க செனட்டர்கள் இருவர் இலங்கையில் நடந்ததாக கூறப்படும் போர்க்குற்றங்களை சர்வதேச விசாரணைக்கு உட்படுத்த வேண்டுமென்ற தமது நிலைப்பாட்டை மீண்டும் வலியுறுத்தியுள்ளனர்.

ஜனாதிபதி பராக் ஒபாமாவின் ஜனநாயக கட்சியின் வெளிநாட்டுக் கொள்ளை தொடர்பில் பிரதான பேச்சாளர்களான செனட்டர்கள் பற்றி லீஹி, பொப் கேசி ஆகியோர் இலங்கை தானே அமைத்துகொண்ட கற்றுகொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை செயற்படுத்த தவறிவிட்டது என கூறினார்.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் ஆதரவுடன் அண்மையில் பிரதம நீதியரசர் பதவி நீக்கப்பட்டமைபற்றி இந்த செனட்டர்கள் தமது விசனத்தை வெளியிட்டதோடு அதிகாரம் வாய்ந்தோர் ஊடகங்களை பயமுறுத்தினர் என்ற மனித உரிமைக் குழுக்களின் குற்றச்சாடையும் முக்கியப்படுத்தியுள்ளனர்.

இலங்கையில் நல்லிணக்கத்திற்கும் உறுதியான ஜனநாயகத்துக்கும் முதற்படியாக பொறுப்புக்கூறுதல் வரவேண்டும்' என இவர்கள் கூறியுள்ளனர்.

கற்றுகொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் செயன்முறை பக்கச்சார்புகள், இழுத்தடிப்புகளின் தாக்கம் கொண்டது என அவர்கள் தெரிவித்துள்ளனர்.

 புலிகளை தோற்கடித்த இறுதி யுத்தத்தின் போது 2009 ஆம் ஆண்டு, 40,000 வரையான சிவிலியன்களை கொல்லப்பட்டதாக இலங்கை மீது குற்றஞ்சுமத்தப்பட்டுள்ளது.

சிவிலியன்கள் எவரும் கொல்லப்படவில்லை என கூறி சர்வதேச விசாரணைகளை இலங்கை மறுத்து வருகிறது.

ஓபமா அரசாங்கம் ராஜபக்ஷ தொடர்பில் பொறுமை இழந்து வருகிறது.இலங்கை மீது அழுத்தம் பிரயோகிக்கும் வகையில் ஐ.நா. மனித உரிமை பேரவையில் இரண்டாம் தடவையும் ஒரு தீர்மானத்தை அமெரிக்கா கொண்டுவரவுள்ளது என அமெரிக்கா அதிகாரிகள் கொழும்பில் திங்கட்கிழமை அறிவித்தனர்.

ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் பேரவையில் இலங்கைக்கு எதிராக அமெரிக்காவினால் கொண்டு வரப்படவுள்ள புதிய பிரேரணைக்கு இந்தியா முழுமையாக ஆதரவளிக்கும் - அமெரிக்கா! .

Thursday, January 31, 2013
இலங்கை::ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் பேரவையில் இலங்கைக்கு எதிராக அமெரிக்காவினால் கொண்டு வரப்படவுள்ள புதிய பிரேரணைக்கு இந்தியா முழுமையாக ஆதரவளிக்கும் என்று அமெரிக்கா நம்பிக்கை கொண்டிருப்பதாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன.

இலங்கைக்கு எதிராக கொண்டுவரவிருக்கின்ற இந்த புதிய தீர்மானம் நேரடியான – நடைமுறைத் தீர்மானமாக இருக்கும். நல்லிணக்கம் மற்றும் பொறுப்புக்கூறலை உறுதிப்படுத்தக் கோரும் 2012 ஆம் ஆண்டு தீர்மானத்தை அடிப்படையாக கொண்டிருக்கும் என்று அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் பிரதி உதவிச்செயலர் ஜேம்ஸ் மூர் தெரிவித்திருந்தார்

இராணுவத்தின் 6 வது பெண்கள் படைப்பிரிவில் இணைந்த 96 தமிழ் யுவதிகளின் பயிற்சி நிறைவடைய உள்ளது!

Thursday, January 31, 2013
இலங்கை::இராணுவத்தின் 6 வது பெண்கள் படைப்பிரிவில் இணைந்து கொள்ளப்பட்ட கிளிநொச்சியை சேர்ந்த 96 தமிழ் யுவதிகள் எதிர்வரும் மார்ச் மாதம் பயிற்சிகளை முடித்து கொண்டு வெளியேறவுள்ளனர். போருக்கு பின்னர், இலங்கை இராணுவத்தில் இணைந்து முதல் பெண்கள் இவர்களாவர். இவர்களுக்கான பயிற்சிகள்

கிளிநொச்சி இராணுவ தலைமையகத்தில் வழங்கப்பட்டு வருகிறது.

இராணுவத்தில் இணைந்து கொண்ட யுவதிகளின் குடும்பங்களுக்காக விசேட வீடமைப்புத் திட்டம் ஒன்றும் கிளிநொச்சி இராணுவ கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் உதய

பெரேராவின் தலைமையில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. கிளிநொச்சி இராணுவத் தலைமையகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் பிரிகேடியர் அத்துல கமமே இந்த தகவல்களை வெளியிட்டுள்ளார்.

எல்லை நிர்ணய செயற் பாடுகள் நிறைவுற்ற பின்னரே மட்டக்களப்பு மாநகர சபை மற்றும் அம்மாவட்டத்தின் எட்டு பிரதேச சபைகளுக்கு மான தேர்தல்களை நடத்த முடியும் - மஹிந்த தேசப் பிரிய!

Thursday, January 31, 2013
இலங்கை::எல்லை நிர்ணய செயற் பாடுகள் நிறைவுற்ற பின்னரே மட்டக்களப்பு மாநகர சபை மற்றும் அம் மாவட்டத்தின் எட்டு பிரதேச சபைகளுக்கு மான தேர்தல்களை நடத்த முடியுமென தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் மஹிந்த தேசப் பிரிய தெரிவித்தார்.

புதிய உள்ளூராட்சிச் சபை தேர்தல் திருத்தச் சட்டத்திற்கிண ங்க உள்ளூர் அதிகார சபை களின் எல்லைகள் நிர்ணயம் செய்யும் பணிகள் நிறைவு பெறும்வரை மேற்படி தேர் தல்களை நடத்த சட்டரீதி யான சாத்தியப்பாடுகள் இல்லையெனவும் தேர்தல் கள் ஆணையாளர் தெரிவித்தார்.

இதுதொடர்பாக சகல அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளுக் கும் தேர்தல் தொடர்பில் ஆர்வமுள்ள வர்களுக்கும் அறிவித்துக்கொள்வதாகவும் அவர் தெரிவித்தார். மட்டக்களப்பு மாநகர சபைக்கான தேர்தல் மற்றும் அத்தோடிணைந்ததாக மேலும் எட்டு பிரதேச சபைக ளுக்குமான தேர்தல்கள் பாதுகாப்புக் காரணங்களுக்காகப் பின்போடப்பட்டி ருந்ததுடன் அத்தேர்தல்கள் மீண்டும் 2008 மார்ச் மாதம் 10 ஆம் திகதி நடாத்தப்பட்டன.

இந்த உள்ளூராட்சிச் சபைகளுக் கான பதவிக் காலம் 2012 மார்ச் 10 ஆம் திகதி நிறைவடைந்ததுடன் அவற்றின் பதவிக் காலம் எதிர்வரும் 2013 மார்ச் 17 ஆம் திகதி வரை உள்ளூராட்சி மாகாண சபை அமைச்சரினால் ஒத்திவைக்கப்பட்டது.

இதற்கிணங்க தேர்தல்களை நடத்துவதற்கான பெயர் குறித்த நியமனங்களைக் கோரும் அறிவித்தல் 2013 ஜனவரி மாதம் முதல் இருவாரங்களுக்குள் வெளியிட உத்தேசித்திருந்த போதிலும் தேர்தல்களை நடத்துதல் தொடர்பான உள்ளூராட்சிச் சபைகள் தேர்தல்கள் திருத்தச் சட்டம் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது.

இதற்கிணங்க ஜனவரி முதலாம் திகதி முதல் அத்திருத்தச் சட்டம் நடைமுறைக்கு வருவதாக மாகாண சபைகள் உள்ளூராட்சி அமைச்சு வர்த்தமானி அறிவித்தலினூடாக பிரகடனம் செய்தது.

இதன்படி புதிய திருத்தத்திற்கிணங்க உள்ளூராட்சி சபைகளின் வட்டார எல்லைகள் நிர்ணயம் செய்யும் பணிகள் நிறைவுறும் வரை மட்டக்கள்பபு மாநகர சபை மற்றும் மேலும் 8 உள்ளூராட்சி சபைகளின் தேர்தல்களை நடத்தமுடியாதுள்ளது எனவும் தேர்தல்கள் ஆணையாளர் தெரிவித்தார்.

அத்துடன் குறிப்பிட்ட திருத்தத்தில் உள்ளூராட்சிச் சபைகளின் பிரதிநிதிகளின் வெற்றிடங்களை நிரப்புதலுடன் தொடர்புடைய பிரிவு திருத்தம் செய்யப்பட்டுள்ளதால் தற்போது செயற்பாட்டிலுள்ள மாநகர சபைகள் நகர சபைகள் மற்றும் உள்ளூராட்சிச் சபைகளின் மக்கள் பிரதிநிதிகளுக்கான வெற்றிடத்தை நிரப்ப முடியாதுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

இதேவேளை; மாகாண சபைகள் உள்ளூராட்சிச் சபைகள் அமைச்சானது இது தொடர்பான இடைக்கால ஏற்பாடுகளை வர்த்தமானியில் வெளியிடுவதற்கு நடவடிக்கை எடுத்து வருவதாகக் குறிப்பிட்ட தேர்தல் ஆணையாளர் அந்த சட்ட ஏற்பாடுகள் நடைமுறைக்கு வரும்வரை தற்போது நிலவுகின்ற மேற்படி வெற்றிடங்களை நிரப்புவதற்குச் சாத்தியமில்லை எனவும் தெரிவித்தார். (ஸ)

(புலி ஆதரவு) கருணாநிதி பேட்டி பல நாடுகள் தூதர்களுடன் டெசோ குழுவினர் சந்திப்பு!

Thursday, January 31, 2013
சென்னை::இலங்கை தமிழர்களை பிரச்னைக்கு தீர்வுக்கான, இலங்கை அரசை நிர்பந்திக்க கேட்டு கொள்ள திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் தலைமையில் டெசோ குழுவினர் டெல்லி சென்று விட்டு நேற்று மாலை திரும்பினர். அவர்கள் அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர்  கருணாநிதியை சந்தித்து, டெல்லி பயணம் குறித்து விளக்கினர்.அதன்பின், திமுக தலைவர் கருணாநிதி நிருபர்களுக்கு அளித்த பேட்டி:-

(புலி ஆதரவு) டெசோ குழுவினர் டெல்லி சென்று அங்குள்ள வெளிநாட்டு தூதர்களை சந்தித்து, இலங்கை தமிழர் துன்ப வாழ்விற்கு விடிவு காண்பதற்கான கருத்து, திட்டங்களை விளக்கினார்கள். இந்த குழுவில் மு.க.ஸ்டா லின், கி.வீரமணி, திருமாவளவன், சுப.வீரபாண்டியன், சுப்புலட்சுமி ஜெகதீசன், ஒருங்கிணைப்பாளர் டி.ஆர்.பாலு ஆகியோர் இடம்பெற்றிருந்தனர்.

அவர்கள் இந்திய குடியரசு தலைவர், மான்டி ரிகோ, அமெரிக்கா, ரஷ்யா, இத்தாலி, மலேசியா, எஸ்தோனியா ஆகிய நாட்டு தூதர்களை சந்தித்து இலங்கை தமிழர் விடிவு காலத்தை விரைவுபடுத்த உதவிக்கரம் நீட்ட வேண்டும் என்று கேட்டு கொண்டுள்ளனர். வருகிற 4ம் தேதி நடக்கும் டெசோ கூட்டத்தில் இந்த குழுவினர் இவற்றை விளக்குவார்கள். பின்னர், தொடர் நடவடிக்கை பற்றி முடிவு எடுத்து அறிவிக்கப்படும்.இவ்வாறு கருணாநிதி கூறினார்.

அதன்பின் கருணாநிதி நிருபர்களின் கேள்விக்கு அளித்த பதில்:

இலங்கை அதிபர் ராஜபக்சே மீண்டும் இந்தியா வர திட்டமிட்டிருப்பதாக கூறப்பட்டுள்ளதே?

இப்போது தமிழ் ஈழத்தில் தமிழ் மொழி, பண்பாடு, இவற்றை அறவே ஒழிக்க சிங்கள அரசு திட்டமிட்டு அதற்கு அடையாளமாக 90 ஊர்களின் தமிழ் பெயர்களை சிங்கள பெயர்களாக மாற்றி இருக்கிறது. இலங்கை தழிழர்களை ஏற்கனவே கொன்று குவித்ததற்கு ஈடான செயலாக இந்த பெயர் மாற்றத்தை நாங்கள் கருதுகிறோம். எனவே, எங்கள் எதிர்ப்பு குரலை காட்ட, ராஜபக்சே வரும் போது எங்கள் அணுகுமுறை எப்படி அமைய வேண்டும் என்பதை டெசோ குழுவில் தீர்மானிக்கப்படும்.

விஸ்வரூபம் படம் பிரச்னை தொடர்பாக, நான் இந்தியாவை விட்டே போகப்போகிறேன் என்று கமல்ஹாசன் கூறியுள்ளாரே?

இந்த பிரச்னை தொடர்பாக நான் ஒரு அறிக்கை வெளியிட்டு இருக்கிறேன்.

ஐ.நா.சபையில் அங்கம் வகிக்கும் 47 நாட்டு தூதர்களை சந்திக்க போவதாக கூறியிருந்தீர்கள். மீதமுள்ளவர்களை எப்போது சந்திப்பீர்கள்.

இது முதல் கட்ட பயணம். இந்த குழுவினர் தொடர்ந்து அந்த பணியில் ஈடுபடுவார்கள்.

புதிய தலைமைச் செயலகத்தில் அவசரம் அவசரமாக மருத்துவமனை தொடங்கி இருக்கிறார்களே?

தமிழ்நாட்டில் நடக்கும் இதுபோன்ற காரியங்கள் பற்றி நான் என்ன சொல்ல முடியும்.

காவிரி நீரை திறக்க உத்தரவிட முடியாது என்று உச்சநீதிமன்றம் கூறியிருக்கிறதே?

நீதிமன்ற தீர்ப்பின் விளைவு பற்றி கூற முடியுமே தவிர, தீர்ப்பு பற்றி கருத்து கூறக்கூடது.

ஐ.நா.சபையில் இலங்கைக்கு எதிராக வரவிருக்கும் தீர்மானத்தின் போது அமெரிக்கா முக்கிய பங்காற்றும் என்று கருதுகிறீர்களா?

முக்கிய பங்காற்றும் என்று நம்புகிறோம். அதற்கு அழுத்தம் தரவே இப்போது டெசோ குழுவினர் அமெரிக்கா தூதரை சந்திதுள்ளனர்.

பத்மஸ்ரீ விருது பெறுவதில் தென்னகம் புறக்கணிக்கப்படுவதாக கூறி, பாடகி எஸ்.ஜானகி விருதை புறக்கணித்துள்ளாரே?

அதுபற்றி விவரம் தெரி யாது. புறக்கணித்த எஸ். ஜானகியிடம் தான் கேட்க வேண்டும். இவ்வாறு கருணாநிதி தெரிவித்தார்.

காட்டுப்பள்ளி துறைமுகம்: முதல்வர் ஜெயலலிதா திறந்து வைத்தார்!

Thursday, January 31, 2013
சென்னை::திருவள்ளூர் மாவட்டத்திலுள்ள காட்டுப்பள்ளியில் ரூ.3,375 கோடியில் கட்டப்பட்டுள்ள கப்பல் கட்டுமானத் திட்டம் மற்றும் துறைமுகத்தினை முதல்வர் ஜெயலலிதா நேற்று தலைமைச் செயலகத்தில் காணொலிக் காட்சி மூலம் திறந்துவைத்தார். இதுதொடர்பாக தமிழக அரசின் செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:-

தமிழ்நாடு முதலமைச்சர் ஜெயலலிதா நேற்று (30.1.2013) தலைமைச் செயலகத்தில், திருவள்ளுர் மாவட்டம் பொன்னேரி வட்டம், காட்டுப்பள்ளி கிராமத்தில், எல் ேடி மற்றும் டிட்கோ நிறுவனத்தின் கூட்டு முயற்சியில் 3 ஆயிரத்து 375 கோடி ரூபாய் முதலீட்டில் கட்டப்பட்டுள்ள எல் ேடி கப்பல் கட்டுமானத் தளம் மற்றும் துறைமுகத்தினை காணொலிக் காட்சி மூலமாக திறந்து வைத்தார்.

திருவள்ளுர் மாவட்டம் பொன்னேரி வட்டம், காட்டுப்பள்ளி கிராமத்தில், எல் ேடி மற்றும் டிட்கோ நிறுவனத்தின் கூட்டு முயற்சியில் 3 ஆயிரத்து 375 கோடி ரூபாய் முதலீட்டில் கட்டப்பட்டுள்ள எல் ேடி கப்பல் கட்டுமானத் தளம் மற்றும் துறைமுகம் 1143 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது. இதில் 810 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள கப்பல்கட்டும் தளமானது இந்தியாவிலேயே மிகப்பெரியதாகும். இதில் மிகப்பெரிய சரக்கு கப்பல்கள், பெட்ரோல் மற்றும் இயற்கை எரிவாயுவினை பெருமளவில் கொண்டு செல்லும் சிறப்பு வடிவினைக்கொண்ட கப்பல்கள், கடலிலிருந்து கச்சா எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு எடுப்பதற்கான ஆய்வு கட்டுமானங்கள் வடிவமைத்தல் மற்றும் கப்பல் கட்டுவதற்கான கனரக இயந்திரங்கள் வடிவமைத்தல் ஆகிய வசதிகள் உள்ளன. சுமார் 1.9 கிலோ மீட்டர் நீளமுள்ள கடல்பகுதி இந்நிறுவன துறைமுகத்தின் முகப்புப் பகுதியாக அமைக்கப்பட்டுள்ளது. இந்த எல் ேடி கப்பல் கட்டுமானத் தளம் மற்றும் துறைமுகத்தினை காணொலிக் காட்சி மூலமாக தமிழ்நாடு முதலமைச்சர் ஜெயலலிதா நேற்று திறந்து வைத்தார்.

முன்னதாக தமிழ்நாடு உப்பு நிறுவனம் 2011-​12ஆம் ஆண்டு 21 கோடியே 88 லட்சம் ரூபாய்க்கு உப்பு விற்பனை செய்து மொத்த லாபமாக 4 கோடியே 36 லட்சம் ரூபாய் ஈட்டியுள்ளது. இதன் அடிப்படையில் 25 லட்சத்து 36 ஆயிரம் ரூபாய் லாப ஈவுத்தொகையாகவும், கூடுதல் உரிமைத் தொகையான 1 கோடியே 47 லட்சம் ரூபாய், என மொத்தம் 1 கோடியே 72 லட்சத்து 36 ஆயிரம் ரூபாய்க்கான காசோலைகளை தமிழ்நாடு முதலமைச்சர் ஜெயலலிதாவிடம் நேற்று தொழில்துறை அமைச்சர் வழங்கினார்.

விழுப்புரம் மாவட்டம், கச்சிராயப்பாளையத்தில் அமைந்துள்ள கள்ளக்குறிச்சி கூட்டுறவு சர்க்கரை தொழிற்சாலை, 2010-​11ஆம் ஆண்டு 6 கோடியே 36 லட்சம் ரூபாய் லாபம் ஈட்டியுள்ளது. இதில் தமிழக அரசின் மூலதனத்திற்கான ஈவுத்தொகை 1 கோடியே 86 லட்சம் ரூபாய்க்கான காசோலையினை தமிழ்நாடு முதலமைச்சர் ஜெயலலிதாவிடம் நேற்று தலைமைச் செயலகத்தில் தொழில்துறை அமைச்சர் வழங்கினார்.

இந்த நிகழ்ச்சியில் நெடுஞ்சாலை மற்றும் சிறுதுறைமுகங்கள் துறை அமைச்சர், பால்வளத் துறை அமைச்சர், சுற்றுச்சூழல் துறை அமைச்சர், தொழில் துறை அமைச்சர், வணிகவரி மற்றும் பத்திரப் பதிவுத் துறை அமைச்சர், தலைமைச் செயலாளர், தொழில்துறை முதன்மைச் செயலாளர், டிட்கோ நிறுவன முதன்மைச் செயலாளர்/தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குநர், தமிழ்நாடு சிமெண்ட் நிறுவன தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குநர், எல் ேடி நிறுவனத்தின் முதுநிலை செயல் துணைத் தலைவர் எஸ்.என். சுப்ரமணியன் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இவ்வாறு அந்த செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

கச்சைத்தீவு அந்தோனியார் ஆலய திருவிழா; ஆறாயிரம் இந்திய யாத்திரிகர்களுக்கு அனுமதி!

Thursday, January 31, 2013
இலங்கை::எதிர்வரும் பெப்ரவரி மாதம் ஆரம்பமாகவுள்ள கச்சைத்தீவு அந்தோனியார் ஆலய திருவிழாவில் கலந்துகொள்ள இந்தியாவிலிருந்து ஆறாயிரம் யாத்திரிகர்கள் வருகை தர அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கச்சைத்தீவு உற்சவத்தினை முன்னிட்டு அதன் ஏற்பாடுகள் கடற்படையினரால் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருவதாக யாழ். மாவட்ட உதவி பொலிஸ் அத்தியட்சகர் ஹேரத் தெரிவித்தார்.

இந்த உற்சவம் தொடர்பான விசேட கலந்துரையாடலொன்று யாழ். மாவட்ட செயலகத்தில் எதிர்வரும் 6ஆம் திகதி நடைபெறவுள்ளதாகவும் அவர் கூறினார்.

திருவிழாவில் கலந்துகொள்ளும் இந்திய, இலங்கை யாத்திரிகர்களுக்கு வழங்கப்பட வேண்டிய வசதிகள், பாதுகாப்பு நடவடிக்கைகள் உள்ளிட்ட மேலும் பல விடயங்கள் தொடர்பாக இந்தக் கலந்துரையாடலின் போது ஆராயப்படவுள்ளதாகவும் யாழ். மாவட்ட உதவி பொலிஸ் அத்தியட்சகர் குறிப்பிட்டார்.

எதிர்வரும் 22,23ஆம் திகதிகளில் கச்சைத்தீவு அந்தோனியார் ஆலய உற்சவத்தினை நடத்துவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

Visiting US Delegation calls on Commander of the Navy!

Thursday, January 31, 2013
Colombo::The visiting US delegation comprising Deputy Assistant Secretary of State James Moore, Deputy Assistant Secretary of Defense Vikram Singh and Deputy Assistant Secretary of State Jane Zimmerman accompanied by US Ambassador to Sri Lanka, Her Excellency Michelle J. Sison and US Defence Attaché, Lieutenant Colonel Patrick Schuler called on Commander of the Navy, Vice Admiral Jayanath Colombage at the Naval Headquarters on 28th January 2013.

They held cordial discussions on matters of mutual interests and bilateral importance. Mementos were also exchanged on the occasion as a gesture of goodwill.

Wednesday, January 30, 2013

'விஸ்வரூபம்' வெளியாகவில்லை என்றால் இந்தியாவைவிட்டே வெளியேறிவிடுவேன் : கமல்ஹாசன் உறுக்கம்!!!

Wednesday, January 30, 2013
சென்னை:: 'விஸ்வரூபம்' படம் தொடர்பான நீதிமன்ற வழக்கு தனக்கு சாதகமாக வரவில்லை என்றால், தான் தமிழகம் மட்டும் இன்றி இந்தியாவை விட்டே வெளியேறும் நிலைக்கு தள்ளப்பட்டு இருக்கிறேன் என்று நடிகர் கமல்ஹாசன் கூறியுள்ளார்.

விஸ்வரூபம் படத்திற்கு எதிராக தமிழக அரசு மற்றும் பல தரப்பினர் பல்வேறு வழக்குகளை போட்டு வருகிறார்கள். இந்த நிலையில் கமல்ஹாசன் தாக்கல் செய்த விஸ்வரூபம் படத்திற்கு விதித்த தடையை நீக்க கோரிய மனு மீது விசாரணை நடத்திய நீதிபதி தடையை நீக்கி உத்தரவிட்டார். இருப்பினும் தமிழக அரசு மேல் முறையீடு மனு ஒன்றை இன்று தாக்கல் செய்தது. அந்த மனு மீதானா விசாரணை நண்பகல் 2 மணிக்கு மேல் வெளியாகும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.

நேற்று படத்திற்கு இருந்த தடையை நீக்கி உத்தரவிட்ட நீதிபதி, படம் திரையிடப்படும் திரையரங்குகளில் அசம்பாவிதம் ஏதாவது நடந்தால் அபோது தடை விதிக்கப்படும் என்று கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் விஸ்வரூபம் திரையிடுவதாக இருந்த சென்னை, ஆல்பர் திரையரங்கில் வைக்கப்பட்டிருந்த விஸ்வரூபம் படத்தின் போஸ்டரை இன்று சிலர் எரித்துள்ளார்கள்.

இந்த நிலையில் இன்று தனது சென்னை, ஆல்வார்பேட்டை அலுவலகத்தில் பத்திரிகையாளர்களை சந்தித்து பேசிய கமல்ஹாசன், "இந்த சிறிய வீட்டில் இவ்வளவு பெரிய கூட்டத்தை கூட்டி ஏன் இந்த சந்திப்பு என்று நீங்கள் நினைக்கலாம் அதற்கு காரணம் இருக்கிறது. எனக்கு சொத்துக்கள் என்று சொல்லும் அளவுக்கு ஏதும் இல்லை என்பது தமிழக மக்களுக்கு நன்றாகவே தெரியும். இருப்பினும் சென்னையில் இந்த ஆல்வார்பேட்டை வீடு உள்ளிட்ட சில சொத்துக்கள் இருக்கிறது. ஆல்வார்பேட்டை வீடு உட்பட.

தற்போது நீதிமன்றத்தின் தீர்ப்பு எனக்கு சாதகமாக வரவில்லை என்றால், இந்த வீடு உள்ளிட்ட அனைத்துமே எனது இல்லை. ஏனென்றால் இவற்றையெல்லாம் வைத்துதான் விஸ்வரூபம் படத்தை நான் எடுத்திருக்கிறேன். படம் வெளியாக ஏற்பட்ட தாமதத்தினால் கடன் கொடுத்தவர்கள் அவர்களுடைய பெயர்களுக்கு மாற்றி எழுதிகொள்கிறார்கள். இனி இங்கு உங்களை என்னால் சந்திக்க முடியாமல் போய்விடுமோ என்ற எண்ணத்தினால் தான் இந்த சந்திப்பை இங்கு வைத்திருக்கிறேன்.

அப்படி இவற்றையெல்லாம் நான் இழந்தால், மத சார்பற்ற ஒரு மாநிலத்தை தேடி சென்று விடுவேன். கேரளா முதல் காஷ்மீர் வரை எந்த இடத்தில் மத சார்பற்ற மாநிலம் இருக்கிறதோ அங்கு நான் குடிபெயர்வேன். அப்படி ஒரு மாநிலம் இந்தியாவில் இல்லை என்றால், மத சார்பற்ற நாட்டை தேடிச் செல்வேன். எனக்கு மதம் இல்லை, அரசியல் இல்லை, இப்போது பணமும் இல்லை என்ற நிலையில் கடல் கடந்து திரவியம் தேடு என்ற நிலைதான். ஆனால், என்னிடம் திறமை இருக்கிறது. என்னை தனி மனிதன் தானே வீழ்த்திவிடலாம் என்று தமிழக அரசு நினைக்கிறது. வீழ்ந்தாலும் நான் மறுபடியும் மரமாக வலருவேன். தனி மரம் தோப்பாகாது என்று நினைத்தால், பல சுதந்திர பறவைகள் அமறும் மரமாவேன்.

நீதிபதி என்னிடம், தனி மனிதனின் சொத்து முக்கியமா அல்லது நாட்டின் ஒற்றுமை முக்கியமா என்று கேட்டார். எனக்கு நாட்டின் ஒற்றுமை தான் முக்கியம். அதற்காக நான் வீழவும் தயார் என்பதை இப்போது சொல்லிக்கொள்கிறேன்." என்று கூறினார்...

விஸ்வரூபம் பட விவகாரம் குறித்து சென்னையில் நடிகர் கமலஹாசன் செய்தியாளர்களிடம் பேசினார். தனது சொத்து முழுவதும் வைத்து விஸ்வரூபம் படத்தை தயாரித்துள்ளதாகவும், படம் வெளியாக தாமதமானால், தன் வீடு உட்பட தான் அனைத்து சொத்துக்களையும் இழக்க நேரிடும் என்றும் கமல் நெகிழ்ச்சியாக தெரிவித்துள்ளார். நாட்டின் ஒற்றுமை தான் எனக்கு முக்கியம் என்று கூறிய அவர், என் சொத்து முழுவதும் இழக்க தயார் எனவும் நான் நஷ்டப்பட்டாலும் பரவாயில்லை என்றும் நெகிழ்ச்சியாக கூறியுள்ளார்.

விஸ்வரூபம் படம் இந்திய முஸ்லீம்களை கேலி செய்யும் வகையில் இல்லை என்று கூறியுள்ள கமல், படத்தின் தளம் ஆப்கானிஸ்தான் அமெரிக்காவை மையமாக கொண்டுள்ளதாகவும் விளக்கம் அளித்துள்ளார். மேலும் தமது ரசிகர்கள் திரையரங்கில் இருந்து போலீசார் வெளியேற்றப்பட்டுள்ளதாகவும் கமல் குற்றம்சாட்டியுள்ளார். எனக்கு மதம் கிடையாது, மனிதம் தான் முக்கியம் என்று கூறிய கமல், மத சார்பற்ற மாநிலம் உள்ளதா என்பதை கண்டு அங்கு குடி அமர்வேன் என்று உருக்கமாக கூறியுள்ளார்.

தனி மனிதன் என்பதை விட எனக்கு நாட்டின் ஒற்றுமை தான் முக்கியம் என்று கூறியுள்ள கமல், நான் வீழ்ந்தாலும் மீண்டும் எழுந்து விதையாக மாறுவேன் என்று கூறியுள்ளார்.

தமிழ்த் தேசியக் (புலி)கூட்டமைப்பின் ஆதரவாளர்கள் சிலர் இன்று முற்பகல் வவுனியா நகர மத்தியில் ஆர்ப்பாட்டம் ஒன்றை முன்னெடுத்தனர்!

Wednesday, January 30, 2013
இலங்கை::தமிழ்த் தேசியக் (புலி)கூட்டமைப்பின் ஆதரவாளர்கள் சிலர் இன்று முற்பகல் வவுனியா நகர மத்தியில் ஆர்ப்பாட்டம் ஒன்றை முன்னெடுத்தனர்.

யுத்தத்தால் இடம்பெயர்ந்த வடக்கு மக்களுக்கு இந்தியாவினால் கட்டித்தரப்படும் வீடமைப்பில் தாம் புறக்கணிக்கப்படுவதாக தெரிவித்தே இந்த ஆர்ப்பாட்டம் இடம்பெற்றது.

ஏற்கனவே, தமிழ்த் தேசிய (புலி)கூட்டமைப்பின் ஆதரவாளர்களும், அகில இலங்கை முஸ்லிம் காங்கிரசின் ஆதரவாளர்களும் வௌ;வேறு இடங்களில் ஆர்ப்பாட்டங்களை ஏற்பாடு செய்திருந்தனர்.

எனினும், இந்த விடயத்தில் தலையிட்ட வவுனியா நீதிபதி அலெக்ஷ் ராஜா, இன்று தமிழத் தேசியக் (புலி)கூட்டமைப்புக்கு ஆர்ப்பாட்டத்திற்கான அனுமதியை வழங்கினார்.

அதேநேரம் எதிர்வரும் வெள்ளிக்கிழமை அகில இலங்கை முஸ்லிம் காங்கிரசின் ஆதரவாளர்களின் ஆர்ப்பாட்டத்திற்கு அனுமதி வழங்கியுள்ளார்.

இதன்படியே இன்று தமிழத் தேசியக் (புலி)கூட்டமைப்பின் ஆதரவாளர்கள் தமது ஆர்ப்பாட்டத்தை நடத்தியுள்ளனர்.

தமிழகத்தில் உள்ள இலங்கை அகதிகளை அவுஸ்திரேலியாவிற்கு அனுப்பி வைப்பதாகக் கூறி நிதி மோசடி செய்த ஒருவரை தமிழக காவல்துறையினர் தேடி வருகின்றனர்!

Wednesday, January 30, 2013
திண்டுக்கல்::தமிழகத்தில் உள்ள இலங்கை அகதிகளை அவுஸ்திரேலியாவிற்கு அனுப்பி வைப்பதாகக் கூறி நிதி மோசடி செய்த ஒருவரை தமிழக காவல்துறையினர் தேடி வருகின்றனர்.

திண்டுக்கல்லை சேர்ந்த அகதிகளை அவுஸ்திரேலியாவிற்கு அழைத்து செல்வதாக கூறி 6 லட்சம் இந்திய ரூபாய்களை பெற்று அவர் மோசடி செய்துள்ளதாக முறையிடப்பட்டுள்ளது.

அவரினால் அழைத்துச் செல்லப்பட்ட அகதிகள் நடுக்கடலில் விட்டுச் செல்லப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

திண்டுக்கல் அடியனூத்து அகதிகள் முகாமைச் சேர்ந்த 6 இலங்கையர்களே இந்த சம்பவத்துக்கு முகம்கொடுத்துள்ளனர்.

கடந்த வருடம் நவம்பர் மாதம் தொடக்கம் இலங்கை அகதிகள் தமது பணத்தினை படிப்படியாக வழங்கி வந்ததாக தமிழக காவல்துறையில் முறையிட்டுள்ளனர்.

தம்மை அவுஸ்திரேலியா அழைத்துச் செல்வதாக கூறியவர்கள், கடலில் வைத்து உரிய சமிஞ்ஞை கிடைக்காமையால் திசை தெரியாது நாகப்பட்டிணம் அருகே படகை நிறுத்திவிட்டு சென்றுவிட்டதாக தெரிவித்தனர்.

பின்னர் நீண்ட நேரம் ஆகியும் அவர்கள் திரும்பாததால் சந்தேகம் ஏற்பட்டு காவல்துறையை நாடியுள்ளனர்.

தமது பணத்தை மீள பெற்றுத் தரும்படி, அல்லது அவுஸ்திரேலியா செல்வதற்கான வழிவகையை ஏற்படுத்துமாறு பாதிக்கப்பட்ட இலங்கை அகதிகள் கோரியுள்ளனர்.

புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனுக்கு சொந்தமான புதுக்குடியிருப்பு வீட்டை அண்டிய பிரதேசத்தில் 51, 000 நிலக்கண்ணி வெடிகள்!

Wednesday, January 30, 2013
இலங்கை::புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனுக்கு சொந்தமான புதுக்குடியிருப்பு வீட்டை அண்டிய பிரதேசத்தில் 51, 000 நிலக்கண்ணி வெடிகள் புதைக்கப்பட்டுள்ளதாக தாஸ் நிலக்கண்ணி வெடி அகற்றும் நிறுவனத்தின் முகாமையாளர் மேஜர் சுனில் ஆரியரட்ன தெரிவித்துள்ளார்.

குறித்த பிரதேசத்திலிருந்து நிலக்கண்ணி வெடிகளை அகற்றும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. நிலக்கண்ணி வெடி அகற்றும் பணிகளில் ஈடுபட்டுள்ள குழுவினர் நாளொன்றுக்கு 90 கண்ணி வெடிகளை அகற்றி வருகின்றனர் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

ஜப்பான் மற்றும் அவுஸ்திரேலிய உதவிகளுடன் தாஸ் நிலக்கண்ணி வெடி அகற்றும் நிறுவனம் பணியாற்றி வருகின்றது.

மார்ச் மாதம் 31ம் திகதிக்கு முன்னதாக சகல நிலக்கண்ணி வெடிகளையும் அகற்ற முடியும் என நம்பிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

மினுவங்கொடையில் கொள்ளை: பொலிஸாரின் துப்பாக்கிப் பிரயோகத்தில் ஒருவர் பலி!

Wednesday, January 30, 2013
இலங்கை::மினுவங்கொடையில் பொலிஸார் மேற்கொண்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இந்த துப்பாக்கிப் பிரயோகம் இன்று அதிகாலை மேற்கொள்ளப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் பிரிஷாந்த ஜயக்கொடி தெரிவித்தார்.

மினுவங்கொடை - திவுலபிட்டிய வீதிக்கு அருகில் இளைஞர் ஒருவரின் தங்கச் சங்கிலியைக் கொள்ளையிட வந்தவர்களுள் ஒருவரே பொலிஸாரின் துப்பாக்கிப் பிரயோகத்திற்கு இலக்காகி உயிரிழந்துள்ளார்.

முச்சக்கரவண்டியில் வருகை தந்த நான்கு கொள்ளையர்கள் குறித்த இளைஞரின் தங்கச்சங்கிலியை பறித்துச்செல்ல முயற்சித்த சந்தர்ப்பத்தில் ஏற்பட்ட முரண்பாட்டின்போது கொள்ளையர்கள் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டுள்ளனர்.

இதனையடுத்து குறித்த இடத்திற்கு பொலிஸார் வருகை தந்ததையடுத்து கொள்ளையர்களில் ஒருவரினால் பொலிஸார் மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் குறிப்பிட்டார்.

பொலிஸாரினால் மேற்கொள்ளப்பட்ட பதில் துப்பாக்கி பிரயோகத்தின்போதே ஒருவர் உயிரிழந்துள்ளார். மேலும் மூன்று பேர் குறித்த இடத்திலிருந்து தப்பிச் சென்றுள்ளனர்.

உயிரிழந்த நபரிடமிருந்து T-56 ரக துப்பாக்கியொன்றும் பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளதாக சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் பிரிஷாந்த ஜயக்கொடி தெரிவித்தார்.

உயிரிழந்த சந்தேகநபரின் சடலம் மினுவங்கொடை வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

30 ஆண்டு யுத்தத்திற்கு பின்னர் நாடு வளம் பெறும் இந்த சந்தர்ப்பத்தில் எதிர்க் கட்சிகள் அநாவசியமான முறையில் அரசாங்கத்தை எதிர்ப்பது நல்லதல்ல: எதிர்க் கட்சியினர் எதற்கெடுத்தாலும் அரசாங்கத்தை எதிர்த்து கண்டனம் தெரிவிக்கும் கொள்கைகளையே கடைப்பிடிக்கின்றனர் -ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ!

Wednesday, January 30, 2013
இலங்கை::30 ஆண்டு யுத்தத்திற்கு பின்னர் நாடு வளம் பெறும் இந்த சந்தர்ப்பத்தில் எதிர்க் கட்சிகள் அநாவசியமான முறையில் அரசாங்கத்தை எதிர்ப்பது நல்லதல்ல. அரசாங்கத்தின் நற்பணிகளுக்கு எதிர்க் கட்சியினர் ஒத்துழைக்கும் ஒரு புதிய அரசியல் கலாசாரத்தை எங்கள் நாட்டில் உருவாக்க வேண்டுமென்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ பத்திரிகைகளின் பிரதம ஆசிரியர்களுடன் உரையாடுகையில் இதனை கூறினார்.

அவர் மேலும் கூறுகையில், எங்கள் நாட்டின் அரசியலில் எதிர்க் கட்சியினர் எதற்கெடுத்தாலும் அரசாங்கத்தை எதிர்த்து கண்டனம் தெரிவிக்கும் கொள்கைகளையே கடைப்பிடிக்கின்றனர்.

30 ஆண்டுகால யுத்தம் முடிவடைந்து நாட்டின் சகஜ நிலையும் அமைதியும் திரும் பியிருக்கின்றவேளையில் அரசாங்கம் அபி விருத்தி பணிகளை துரிதப்படுத்தி நாட்டின் பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்கு நடவடிக்கை எடுத்து வருகின்றது.

இந்த சந்தர்ப்பத்தில் எதிர்க் கட்சியினர் அரச எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களை மேற்கொள்வது மன வேதனையளிக்கின்றது.

எந்நேரத்திலும் அரசாங்கத்தை எதிர்ப்பதற்கு பதில் அரசாங்கத்தில் உள்ள குற்றம் குறைகளை சுட்டிக்காட்டி அவற்றை சரி செய்வதற்கு எதிர்க் கட்சியினர் முன்வந்தால் இந்த நாட்டில் பாராளுமன்ற ஜனநாயகம் தழைத்தோங்கும் என்றும் அவர் சொன்னார்.

இதன் போது பாராளுமன்றத்தின் சட்டவாக்க அதிகாரம் குறித்து பத்திரிகை ஆசிரியர்கள் கேள்வி எழுப்பிய போது ஜனாதிபதி அவர்கள் சிரித்துக் கொண்டே, பாராளுமன்றம் தான் சட்டங்களையும் இயற்றுகின்றன.

அவ்வாறே சட்டங்களை மாற்றி அமைப்பதும், திருத்துவதும் பாராளுமன்றம் தான் என்று கூறினார்.

“கேலிச்சித்திரக்காரர்கள் என்னை ஜே.ஆர். ஜயவர்தனவைப் போன்று என்னையும் விமர்சிக்கிறார்கள். அது அவர்களுடைய உரிமை. அதைப்பற்றி நான் கவலைப்படுவதும் இல்லை. ஆனால் நான் அரசியல் சாசனத்திற்கு அமையவே எனது பணிகளை” செய்கிறேன் என்று ஜனாதிபதி தெரிவித்தார்.

இலங்கைக்கு எதிராக அமெரிக்காவினால் கொண்டுவரப்படவுள்ள இரண்டாவது பிரேரணையை எதிர்கொள்ளத் தயாராகவே இருக்கின்றோம் - கெஹெலிய ரம்புக்வெல!

Wednesday, January 30, 2013
இலங்கை::ஜெனீவாவில் எதிர்வரும் மார்ச் மாதம் நடைபெறவுள்ள ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைப் பேரவையின் 22ஆவது கூட்டத்தொடரில் இலங்கைக்கு எதிராக அமெரிக்காவினால் கொண்டுவரப்படவுள்ள இரண்டாவது பிரேரணையை எதிர்கொள்ளத் தயாராகவே இருக்கின்றோம். இது எமக்கு பழக்கப்பட்ட விடயமாகும் என்று ஊடகத்துறை அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல தெரிவித்தார்.

சர்வதேச சமூகம் நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகள் தொடர்பில் கொண்டுவர முயற்சிக்கவில்லை. அவர்களின் நிகழ்ச்சி நிரல் குறித்து நாங்கள் ஓரளவு அறிந்து வைத்துள்ளோம் என்றும் அவர் குறிப்பிட்டார்.

ஜெனீவாவில் எதிர்வரும் மார்ச் மாதம் நடைபெறவுள்ள ஐக்கிய நாடுகள் மனித உரிமைப்பேரவையின் 22ஆவது கூட்டத்தொடரில் இலங்கைதொடர்பாக மற்றுமொரு பிரேரணை கொண்டுவரப்படவுள்ளதாக அமெரிக்கா அறிவித்துள்ளமை குறித்து வினவியபோதே அமைச்சர் மேற்கண்டவாறு கூறினார்.

இது குறித்து அவர் மேலும் கூறுகையில்,

ஜெனீவாவில் மார்ச் மாதம் நடைபெறவுள்ள மனித உரிமைப்பேரவையின் 22ஆவது கூட்டத்தொடரில் இலங்கைக்கு எதிராக அமெரிக்கா கொண்டுவரும் இரண்டாவது பிரேரணையை எதிர்கொள்வதற்கு அரசாங்கம் தயாராகவே இருக்கின்றது.

யுத்தத்தின் பின்னரான இலங்கையில் அரசாங்கம் பாரிய முன்னேற்றங்களை வெளிப்படுத்தியுள்ளது. கற்றறிந்த பாடங்களும் நல்லிணக்கமும் தொடர்பான ஆணைக்குழுவின் பரிந்துரைகளை அமுல்படுத்தும் விடயத்தில் சிறப்பான முன்னேற்றங்கள் வெளிப்படுத்தப்பட்டுள்ளன. அரைவாசிக்கும் மேற்பட்ட பரிந்துரைகள் அமுல்படுத்தப்பட்டுவிட்டன என்றார்.

யுத்தம் தொடர்பான விசாரணைகள் தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட்டு வருவதாக இராணுவம் அறிவித்துள்ளது!

Wednesday, January 30, 2013
இலங்கை::யுத்தம் தொடர்பான விசாரணைகள் தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட்டு வருவதாக இராணுவம் அறிவித்துள்ளது.இறுதிக் கட்ட யுத்தத்தின் போது படையினரின் நடவடிக்கைகள் குறித்து இராணுவ நீதிமன்றம் தொடர்ந்தும் விசாரணை செய்து வருவதாகத் தெரிவித்துள்ளது.இந்த விசாரணைகள் விரைவில் பூர்த்தியாகும் என இராணுவப் பேச்சாளர் ருவான் வனிகசூரிய தெரிவித்துள்ளார்.

உண்மையைக் கண்டறியும் ஆணைக்குழுவின் பரிந்துரைகளின் அடிப்படையில் சில விசாரணைகள் நடத்தப்பட்டு அந்த அறிக்கை பாதுகாப்புச் செயலாளரிடம் அண்மையில் ஒப்படைக்கப்பட்டதாகக் குறிப்பிட்டுள்ளார்.எனினும், இராணுவ நீதிமன்றின் யுத்தம் தொடர்பான விசாரணைகள் இன்னமும் பூர்த்தியாகவில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.யுத்தம் இடம்பெற்ற காலத்தில் படையினரின் நடவடிக்கைகள் குறித்து சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் விசாரணை நடத்தப்பட்டு வருவதாக இராணுவப் பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கைக்கு எதிராக சர்வதேச போர்க்குற்ற விசாரணைகள் நடாத்தப்பட வேண்டும் - அமெரிக்க செனட் சபை!

Wednesday, January 30, 2013
இலங்கைக்கு எதிராக சர்வதேச போர்க்குற்ற விசாரணைகள் நடாத்தப்பட வேண்டும் என அமெரிக்காவின் இரண்டு செனட்டர்கள் மீண்டும் வலியுறுத்தியுள்ளனர். போர்க்குற்ற விடயத்தில் இலங்கை போதிய கவனத்தை செலுத்தவில்லை என அவர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.

அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா தலைமையிலான ஜனநாயக கட்சியின் வெளியுறவுக் கொள்கையில் முக்கிய பாத்திரத்தை கொண்டுள்ள பெற்றிக் லேஹி மற்றும் போப் கேசி ஆகிய இரு செனட்டர்களே இவ்வாறு கருத்து வெளியிட்டுள்ளனர்.

இலங்கை அரசாங்கம் தமது சொந்த நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்த தவறியுள்ளதாக அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

அரசியல் மற்றும் மனித உரிமைகள் போன்ற விடயங்கள் இலங்கையில் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளதாக கூறியுள்ள செனட்டர்கள், நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்தாமல் காலத்தாமதம் செய்வது ஒருபக்க நடவடிக்கையை உணர்த்துவதாகவும் தெரிவித்துள்ளனர்.

எனவே, சுதந்திரமான சர்வதேச விசாரணைக்கு இலங்கையை உட்படுத்த வேண்டும் என்று அமெரிக்க ஜனநாயக கட்சி செனட்டர்கள் கோரியுள்ளனர்.

ஐ.நா.,மனித உரிமைக்கழகத்தில் இலங்கைக்கு எதிராக அமெரிக்கா கொண்டு வரும் தீர்மானத்தை இந்தியா ஆதரிக்க வேண்டும் -(புலி ஆதரவு) தி.மு.க., தலைவர் கருணாநிதி கோரிக்கை!

Wednesday, January 30, 2013
சென்னை:: ஐ.நா.,மனித உரிமைக்கழகத்தில் இலங்கைக்கு எதிராக அமெரிக்கா கொண்டு வரும் தீர்மானத்தை இந்தியா ஆதரிக்க வேண்டும் -(புலி ஆதரவு) தி.மு.க., தலைவர் கருணாநிதி கோரிக்கை!

தி.மு.க. தலைவர் கருணாநிதி வெளியிட்டுள்ள கேள்வி-பதில் அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

கேள்வி:- 1-2-2013 அன்று தமிழகச் சட்டப்பேரவை கூடுமென்றும், அன்றைய தினம் ஆளுநர் உரையாற்றுவார் என்றும் அறிவிப்பு வந்த பிறகு, அரசு சார்பில் எந்த அறிவிப்பும் செய்யக் கூடாது என்ற மரபினை மீறி அன்றாடம் முதலமைச்சர் உத்தரவுகள் வந்து கொண்டே இருக்கிறதே?

பதில்:- 1-2-2013 அன்று சட்டப் பேரவை கூடப் போகிறது - அன்று அரசின் சார்பில் ஆளுநர் அறிவிப்புகளைச் செய்யப் போகிறார். சட்டசபை கூடப் போகிறது என்று தெரிவிக்கப்பட்டுவிட்டாலே, அரசின் சார்பில் எந்தவிதமான அறிவிப்புகளையும் செய்யக்கூடாது. ஆனால் இன்று ஒரு நாளில் மட்டும் ஏராளமான அறிவிப்புகள் வெளிவந்துள்ளன. ஆளுநர் ஆண்டுதோறும் பேரவையில் ஆற்றுகின்ற உரையிலேதான் அரசின் திட்டங்களைப் பற்றிய அறிவிப்புகளே இடம் பெற வேண்டும். ஆனால் ஆளுநர் என்ன உரையாற்றுவது, அறிவிப்புகள் எல்லாம் ஆளுநர் உரையிலே வரலாமா என்று; முதலமைச்சர் கடந்த சில நாட்களாக அரசின் அறிவிப்புகளையெல்லாம் தானே உத்தரவிட்டதாகக் கூறி அறிவித்துக் கொண்டிருக்கிறார்.

கேள்வி:- அனைத்துச் சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்ற கழக ஆட்சிக் காலத்தில் பிறப்பிக்கப்பட்ட அரசாணையின் தொடர்ச்சியாக பயிற்சி பெற்ற அர்ச்சகர்களுடைய தற்போதைய நிலை என்ன?

பதில்:- தந்தை பெரியாரின் நெஞ்சில் இருந்த முள்ளை அகற்றிடும் வகையில் தி.மு.கழகம் ஆட்சிப் பொறுப்பேற்றவுடனேயே 23-5-2006 அன்று அரசாணை ஒன்று பிறப்பிக்கப்பட்டது. அதன்படி தகுதியும், திறமையும் பெற்ற அனைத்து இந்துக்களும் சாதி வேறுபாடின்றி திருக்கோவில்களில் அர்ச்சகர்களாக ஆவதற்கு வழி வகை செய்யப்பட்டது. அரசாணையினை அடுத்து பழனி, திருச்செந்தூர், மதுரை, திருவண்ணாமலை ஆகிய நான்கு இடங்களில் சைவ அர்ச்சகர் பயிற்சி நிலையங்களும்; சென்னை, திருவரங்கம் ஆகிய இரண்டு இடங்களில் வைணவ அர்ச்சகர் பயிற்சி நிலையங்களும் தொடங்கப்பட்டன.

பயிற்சி பெறும் மாணவர்களுக்கு உணவு, உடை, இருப்பிடம் ஆகியவை இலவசமாக அளிக்கப்பட்டு ஒவ்வொருவருக்கும் பிரதி மாதம் ரூபாய் 500 ஊக்கத் தொகையும் வழங்கப்பட்டது. இத்திட்டத் தின்கீழ் ஆதிதிராவிட வகுப்பைச் சேர்ந்த 34 மாணவர்கள், பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த 76 மாணவர்கள், மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த 55 மாணவர்கள், இதர வகுப்பைச் சேர்ந்த 42 மாணவர்கள் உட்பட மொத்தம் 207 மாணவர்கள் பயிற்சியை முடித்து சான்றிதழ் பெற்றனர். பயிற்சி முடித்த நிலையில், அனைத்துச் சாதியினரும் அர்ச்சகராகும் பிரச்சினை உச்சநீதிமன்றம் வரை எடுத்துச் செல்லப்பட்டது. அதன் காரணமாக அவர்களுக்கு உடனடியாக திருக்கோவில்களில் வேலைவாய்ப்பு உருவாக்கிட இயலாமல் போயிற்று.

அதற்குப் பின்னர் அ.தி.மு.க. ஆட்சி தமிழகத்தில் பொறுப் பேற்றது. உச்சநீதி மன்றத்தில் தமிழக அரசு அர்ச்சகர் பிரச்சினையை முடிவுக்குக் கொண்டு வர ஆறு மாத கால அவகாசத்தைக் கேட்டுப் பெற்றது. ஆறு மாத காலம் முடிந்த பிறகும், இந்தப் பிரச்சினையில் எவ்விதமான நடவடிக்கைகளையும் அ.தி.மு.க. அரசு மேற்கொள்ளவில்லை.

அர்ச்சகர் பயிற்சி பெற்ற மாணவர்கள் சங்கத்தைச் சேர்ந்தோர், “உச்ச நீதி மன்றம் ஆறு மாத கால அவகாசம் வழங்கியும்கூட மாநில அரசு இதுவரை எவ்வித கலந்தாலோசனையையும் நடத்தவில்லை. எனவே மாநில அரசின் நோக்கத்தை நாங்கள் சந்தேகிக்கிறோம். 2006ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட அரசாணையை தற்போதுள்ள தமிழக அரசு என்ன செய்யப் போகிறது என்று எங்களுக்குத் தெரியவில்லை. எனினும் எங்களுடைய சட்ட ரீதியான போராட்டத்தை நிறுத்திக் கொள்ளப் போவதில்லை” என்று சொல்லியிருக்கிறார்கள்.

மேலும் அரசியல் சட்ட ரீதியாக பயிற்சி பெற்ற அனைத்துச் சாதி அர்ச்சகர்களுக்கும் திருக்கோவில்களில் வேலை பெறுவதற்கான உரிமை உள்ளது என்று வழக்கறிஞர்களும் கருத்து அறிவித்துள்ளனர். இந்த நிலையில் தந்தை பெரியார் அவர்களின் நெஞ்சில் இருந்த முள்ளை அகற்றுவதற்கு தி.மு.கழக அரசு மேற்கொண்ட நடவடிக்கையை அ.தி.மு.க. அரசு எப்படி தொடர்ந்து நிறைவேற்றப்போகிறது என்பதை வரவிருக்கின்ற சட்டப்பேரவைக் கூட்டத் தொடரிலாவது அறிவிப்பார்கள் என்று எதிர்பார்ப்போம்!

கேள்வி:- ஐ.நா. மனித உரிமைக் கவுன்சில் கூட்டத்தில் இலங்கை அரசுக்கு எதிராக அமெரிக்கா புதிய தீர்மானம் ஒன்றைக் கொண்டு வரப்போவதாக செய்தி வந்துள்ளதே?

பதில்:- கடந்த ஆண்டு நடைபெற்ற மனித உரிமைக் கவுன்சில் கூட்டத்தில் இலங்கை அரசுக்கு எதிராக அமெரிக்கா கொண்டு வந்த தீர்மானத்தை நமது வற்புறுத்தலினால் இந்தியாவின் ஆதரவோடு நிறைவேற்றினார்கள். அப்படித் தீர்மானம் நிறைவேற்றப்பட்டும், அந்தத் தீர்மானத்தின்படி ராஜபக்சே அரசு எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை என்பதாலும், தீர்மானத்திற்கு எதிரான நடவடிக்கைகளையே தொடர்ந்து மேற்கொண்டு வருவதாலும் வருகிற மார்ச் மாதம் நடைபெறவிருக்கும் ஐ.நா. மனித உரிமைக் கவுன்சில் கூட்டத்தில் இலங்கை அரசை மேலும் நிர்ப்பந்தப்படுத்தும் புதிய தீர்மானம் ஒன்றை அமெரிக்கா தாக்கல் செய்ய முடிவு செய்துள்ளதாக அமெரிக்க வெளியுறவுத் துறை துணை அமைச்சர் ஜேம்ஸ் மூர் தெரிவித்திருக்கிறார். அந்தத் தீர்மானத்தை இந்திய அரசு ஆதரித்து நிறைவேற்றிட வேண்டு மென்பதே நமது உறுதியான வேண்டுகோள்.

இவ்வாறு கருணாநிதி கூறியுள்ளார்.

Tuesday, January 29, 2013

தடைகளை தகர்த்து வெளிவருகிறது விஸ்வரூபம் ; உயர்நீதிமன்றம் தீர்ப்பு!!

Tuesday, January 29, 2013
சென்னை::கமலஹாசன் இயக்கி நடித்துள்ள விஸ்வரூபம் திரைப்படத்திற்கு தமிழக அரசு விதித்த தடையை நீக்கி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழகம் முழுவதும் விஸ்வரூபம் திரைப்படத்தை நாளை வெளியிடலாம் என உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. இந்த வழக்கு தொடர்பான இறுதி கட்ட விசாரணை பிறகு நடைபெறும் என உயர்நீதிமன்ற நீதிபதி அறிவித்துள்ளார்..

கமலஹாஸனின் விஸ்வரூபம் படத்திற்கு தமிழக அரசு விதித்த தடையை நீக்கி உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்தது. படத்தை உடனடியாக வெளியிடலாம் என்று தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது. கமல் ரசிகர்கள் இதனை பட்டாசு வெடித்து கொண்டாடி மகிழ்கின்றனர்.

தீர்ப்பை நாளை வரை ஒத்தி வைக்குமாறு அரசு தரப்பு வக்கீல் நவநீதகிருஷ்ணன் விடுத்த கோரிக்கையும் நிராகரிக்கப்பட்டது. மேலும் அரசு மேல்முறையீடு வேண்டுமானால் செய்து கொள்ளலாம் என்று நீதிபதி வெங்கட்ராமன் தனது தீர்ப்பில் கூறியுள்ளார்.

தணிக்கை துறை அனுமதி அளித்த பிறகு தமிழக அரசு தடை விதிக்க முடியாது என்று நீதிபதி வெங்கட்ராமன் கூறியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

அரசு தரப்பு வழக்கறிஞர் நவநீத கிருஷ்ணன், மற்றும் கமல் சார்பு வழக்கறிஞர் ராமன் ஆகியோர் வாதங்களை நாள் முழுதும் கேட்டறிந்த, படத்தை நேரில் பார்த்த, நீதிபதி வெங்கட்ராமன், படத்தில் முஸ்லிம்களுக்கு எதிரான காட்சிகள் இடம்பெற்றதாக கருத இடமில்லை என்று கூறியுள்ளார்.

இதனையடுத்து நாளையே அதாவது 30ஆம் தேதியே படத்தை வெளியிடலாம் என்று சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.

மேலும் 144 தடை உத்தரவை நிறுத்தி வைக்கவும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

சரி ஐய்யா நமது கேள்வி: தணிக்கைத் துறை அனுமதி அளித்த பிறகு தடை விதிக்க முடியாது என்பதைக் கூற இவ்வளவு கால தாமதம் தேவையா என்பதே. இவ்வளவு நீண்ட வழக்கு விசாரணை தேவையா என்பதே.

எனினும் நல்ல தீர்ப்பு, கமல் ரசிகர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர். இனி படம் பார்த்து விட்டு உண்மையான விமர்சனங்கள் வெளிவரட்டும்

அமெரிக்கா ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் தீர்மானம் நிறைவேற்றினால் அதனை எதிர்நோக்கத் தயார் - கருணாதிலக்க அமுனுகம!

Tuesday, January 29, 2013
இலங்கை::அமெரிக்கா ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் தீர்மானம் நிறைவேற்றினால் அதனை எதிர்நோக்கத் தயார் என அரசாங்கம் அறிவித்துள்ளது. எதிர்வரும் மார்ச் மாதம் சுவிட்சர்லாந்தின் ஜெனீவாவில் நடைபெறவுள்ள ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் இலங்கைக்கு எதிராக, அமெரிக்கா தீர்மானமொன்றை நிறைவேற்றத் திட்டமிட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

எனினும், இந்தத் தீர்மானம் தொடர்பான சவால்களை எதிர்நோக்கத் தயார் என வெளிவிவகார அமைச்சின் செயலாளர் கருணாதிலக்க அமுனுகம தெரிவித்துள்ளார். யுத்தத்தின் பின்னரான இலங்கையில் அரசாங்கம் பல்வேறு அபிவிருத்தித் திட்டங்களை மேற்கொண்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கைக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றும் உரிமை அமெரிக்காவிற்கு காணப்படுகின்றது, அதேபோன்று அதற்கு பதிலளிக்கும் அதிகாரமும் அரசாங்கத்திற்கு காணப்படுவதாகத் தெரிவித்துள்ளார். உண்மையைக் கண்டறியும் ஆணைக்குழுவின் பரிந்துரைகளுக்கு அமைய பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.


ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை பேரவையில் இலங்கைக்கு எதிராக அமெரிக்காவினால் கொண்டுவரவிருக்கின்ற பிரேரணையை எதிர்கொள்வதற்கு தயாராகவும் நம்பிக்கையுடனும் இருப்பதாக வெளிவிவகார அமைச்சின் செயலாளர் கருணாரத்ன அமுனுகம தெரிவித்துள்ளார்.

ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை பேரவையில் இலங்கைக்கு எதிராக அமெரிக்காவினால் கொண்டுவரவிருக்கின்ற 'நேரடியான மற்றும் செயல்முறையிலான தீர்மானம் தொடர்பில் கேட்டபோதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

கற்றறிந்த பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை அமுல்படுத்துவதற்காக வரவு-செலவுத்திட்டத்தில் 1200 மில்லியன் ரூபாய் ஒதுக்கப்பட்டது. அந்த பரிந்துரைகள் மிகத்தெளிவாக அமுல்படுத்தப்படும்.

நாங்கள் ஜனாதிபதி செயலகத்துடன் மிக அண்மித்தே செயற்படுகின்றோம். ஜனாதிபதி செயலகமும் இதனை கண்காணித்துகொண்டு வருகின்றது. தீர்மானத்திற்கு அப்பால் சென்று செயற்பட்டுக்கொண்டிருக்கின்றோம் என்பதனை தெளிவாக கூறமுடியும்.

இலங்கை அரசு பல நடவடிக்கைகளை எடுத்துள்ளதாகவும் அது குறித்து சர்வதேசத்திற்கு போதியளவு விளக்கமளித்துள்ளதாகவும் தெரிவித்த அவர் மனித உரிமை பேரவையில் கொண்டுவரப்படவிருக்கின்ற விவகாரம் எந்தவிதமான பாதகங்களையும் ஏற்படுத்தாது என்றும் அவர் சொன்னார்.

உனர்ச்சிகளைத் தூண்டி வீணான பிரச்சினைகளை தோற்றுவிக்க முஸ்லிம் பிரதேசங்களில் சில இளைஞர்கள் முற்படுகின்றர் – கிழக்கு மாகாண கட்டளைத்தளபதி லால்பெரேரா!

Tuesday, January 29, 2013
இலங்கை::மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள முஸ்லிம் பிரதேசங்களில் சில இளைஞர்கள் கையடக்கத் தொலைபேசிகளின் மூலம் பிழையான குறுந் தகவல்களை(எஸ்.எம்.எஸ்.) அனுப்பி உனர்ச்சிகளைத் தூண்டி வீணான பிரச்சி னைகளைதோற்றுவிக்க முற்படுகின்றர். இந்த விடயங்களில் உலமாக்கள் சமயப்பிரமுகர்கள் கவனமெடுக்க வேண்டும்.

கிழக்கு மாகாணத்திலுள்ள சமயத்தலைவர்கள் முழு நாட்டிற்கும் முன்மாதிரியானவர்களாக திகழ வேண்டும் என கிழக்கு மாகாண படைக்கட்டளைத்தளபதி மேஜர் ஜெனரல் லால்பெரேரா தெரிவித்தார்.

நேற்று(28.1.2013) மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள சமயத்தலைவர்களை சந்தித்த போது அவர்கள் மத்தியில் உரையாற்றுகையிலேயே கிழக்கு மாகாண கட்டளைத்தளபதி மேற்கண்டவாறு கூறினார்.

மட்டக்களப்பு பாடுமீன் விடுதியில் நடைபெற்ற இந்த சந்திப்பில் தொடர்ந்துரையாற்றிய அவர் நாட்டில் இன நல்லுறவையும் ஐக்கியத்தையும் கட்டி வளர்க்க நாம் பாடுபட வேண்டும். இதற்காக சமயத்தலைவர்கள் முழுமையாக ஈடுபட வேண்டும். சமயத்தில் மற்றய சமயத்தையும் மதிக்கின்ற மற்ற சமயத்திற்கு மதிப்பளிக்கின்ற நிலை நம்மிடையே காணப்படல் வேண்டும்.

நமது மதத்தை பின் பற்றும் அதே நேரம் மற்ற மதங்களையும் மதித்து நடக்கின்ற மனப்பாங்கு வரவேண்டும். அப்போதுதான் சமயங்களுக்கிடையில் இனங்களுக்கிடையில் ஐக்கியத்தையும் ஒற்றுமையையும் ஏற்படுத்த முடியும்.

ஓவ்வொரு சமயத்தவர்களும் தமது சமயத்தை நேசிப்பது போன்று அடுத்த சமயத்தவர்களுக்கும் மதிப்புக்கொடுத்து அவர்களையும் கௌரவிக்கின்ற நிலைமையை நாங்கள் வளர்க்க வேண்டும.

இந்த நாட்டில் இன ஐக்கியத்தையம் சமூகங்களுக்கிடையிலான ஒற்றுமையையும் புரிந்துனர்வையும் எற்படுத்த சமயத்தலைவர்கள் பாடுபட வேண்டும்.

இந்தப்பொறுப்பு சமயத்தலைவர்களிடம் அதிகமுண்டு. நமது நாட்டில் எந்தவொரு நிகழ்வினை ஆரம்பிக்கும் போது சமயத்தலைவர்களின் ஆசியுடன் சமய வணக்க வழிபாடுகளுடன் ஆரம்பிக்கின்றோம். இது சிறந்த வழிகாட்டலாகும்.

கடந்த முப்பது வருடகால யுத்தத்தில் நமது உறவுகளை இழந்திருக்கின்றோம்.அதே போன்று இயற்கை அழிவுகளினாலும் நமது உறவுகளை இழந்துள்ளோம்.

இந்த நிலையில் நமது நாட்டிற்கு இன்று ஒரு நிரந்தரமான சுமூகமான நிலைமை ஏற்பட்டுள்ளது. அனைவரும் சுதந்திரமாக வாழும் நிலை உருவாகியுள்ளது. இந்த நிலையை நாங்கள் மேலும் வளர்த்தெடுக்க வேண்டும்.

இன்றுள்ள இளைஞர்களுக்கு ஆத்மீக ரீதியாக சமயத்தலைவர்கள் வழிகாட்ட வேண்டும இணையத்தளங்களினாலும் கையடக்கத் தொலைபேசிகளினாலும் நமது இளைஞர்கள் சமூகச் சீரழிவுக்குள் தள்ளப்படுகின்ற ஒரு நிலைமையை நாங்கள் பார்க்கின்றோம்.

இந்த இளைஞர்களை நல்வழிப்படுத்த ஆத்மீக ரீதியாக அவர்களை பக்குவப்படுத்த வேண்டிய மிகப்பெரிய பொறுப்பு சமயத் தலைவர்களுக்குண்டு இது மிகப்பொறுப்புமிக்க சவாலாகும். இந்த சவாலை நாம் எதிர் கொள்ள வேண்டும். அவ்வாறான இளைஞர்களை கெட்ட வழியில் செல்லாமல் பாதுகாத்துக்கொள்ள வேண்டும்.

தம்புள்ள பள்ளிவாயல் பிரச்சினையின் போது மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள முஸ்லிம் பிரதேசங்களில் சில இளைஞர்கள் கையடக்கத் தொலைபேசிகளின் மூலம் பிழையான குறுந் தகவல்களை(எஸ்.எம்.எஸ்.) அனுப்பி உனர்ச்சிகளைத் தூண்டி வீணான பிரச்சினைகைள தோற்றுவிக்க முற்பட்டனர்.

அப்போது மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள உலமா சபை சிறப்பாக செயற் பட்டு இங்கு எவ்வித பிரச்சினைகளையும் ஏற்பட்டுவிடாமல் பார்த்துக் கொண்டனர். உலமா சபை சிறந்த வழிகாட்டலை அதன்போது மேற் கொண்டிருந்தது. தம்புள்ள பள்ளிவாயல் பிரச்சினையின் போது சிலர் பொய்யான பிரச்சினைகளை மேற் கொண்டடிருந்தனர். அப்போது இங்குள்ள உலமாக்களை தம்புள்ளைக்கு சென்று அந்த பள்ளிவாயலில் தொழுது விட்டு வருமாறு நான் கேட்டேன். அதற்கான போக்குவரத்து ஒழுங்குகளையும் நான் செய்துதருவதாக கூறியிருந்தேன.

எனவேதான நமது நாட்டில் சமயங்களுக்கிடையில் மதங்களுக்கிடையில் பிரச்சினைகள் ஏற்படாதவாறு சமயத்தலைவர்கள் பார்த்துக்கொள்ள வேண்டும். இன ஐக்கியத்தையும் நல்லுறவையும் இ சமூக ஒற்றுமையையும் வளர்க்க சமயத்தலைவர்கள் வழிகாட்டல்களை மேற் கொள்ள வேண்டும்.

கிழக்கு மாகாணத்திலுள்ள சமயத்தலைவர்கள் முழு நாட்டிற்கும் சிறந்த முன்மாதிரியானவர்களாக திகழ வேண்டும்.2013ம் ஆண்டை அதற்கான வேலைத்திட்டத்திற்குரிய ஆண்டாக நாம் பார்க்க வேண்டும்.

பண்பாடுள்ள ஒரு சமுதாயத்தை கட்டியெழுப்ப நாம் அனைவரும் முயற்சிக்க வேண்டும் என அவர் இங்கு மேலும் தெரிவித்தார்.

போர்க்குற்ற விசாரணை: இலங்கை அரசை காப்பாற்ற இந்தியா, அமெரிக்கா முயற்சி- (புலி ஆதரவு) டாக்டர் ராமதாஸ் குற்றச்சாட்டு!

Tuesday, January 29, 2013
சென்னை::பா.ம.க. நிறுவனர் (புலி ஆதரவு பரதேசி) டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

இலங்கை போரில் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட தமிழர்கள் கொடூரமான முறையில் படுகொலை செய்யப்பட்டது, தமிழ் பெண்கள் பாலியல் வன்கொடுமைகளுக்கு ஆளாக்கப்பட்டது உள்ளிட்ட செயல்களுக்காக இலங்கை மீது போர்க்குற்ற விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று உலகம் முழுவதும் உள்ள தமிழர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

ஆனாலும் சில வல்லரசுகளின் துணையுடன் இலங்கை அரசு போர்க்குற்ற விசாரணையில் இருந்து தப்பி வருகிறது. கடந்த ஆண்டு மார்ச் மாதம் ஜெனிவாவில் நடைபெற்ற ஐ.நா. மனித உரிமை ஆணையக் கூட்டத்தில் இதுதொடர்பாக தீர்மானம் கொண்டுவந்து நிறைவேற்றப்பட்டது. அதன்படி இலங்கையில் நடந்த போர்க்குற்றங்கள் தொடர்பாக இலங்கை அரசே விசாரணை நடத்தி தவறு செய்த ராணுவ அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும்.

ஆனால் அத்தகைய நடவடிக்கைகள் எதையும் எடுக்காத சிங்கள அரசு, ஒருபுறம் போர்க் குற்றஞ்சாட்டப்பட்ட அதிகாரிகளுக்கு பதவி உயர்வு உள்ளிட்ட சலுகைகளை வழங்கி வருகிறது. மற்றொருபுறம் போரில் பாதிக்கப்பட்ட தமிழர்களை அச்சுறுத்தி ஒடுக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறது. இதற்காக இலங்கை அரசு மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.

அடுத்த மாதம் நடைபெற உள்ள ஐ.நா. மனித உரிமை ஆணையக் கூட்டத்தில் இலங்கை மீது போர்க்குற்ற விசாரணை நடத்துவதற்கான தீர்மானத்தை கொண்டு வந்து நிறைவேற்ற வேண்டும் என்று உலகெங்கும் உள்ள தமிழர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

ஆனால் தமிழர்களுக்கு துரோகம் செய்யும் வகையில் இலங்கை அரசை காப்பாற்ற இந்தியாவும், அமெரிக்காவும் திட்டமிட்ருப்பதாக அதிர்ச்சியூட்டும் செய்திகள் வெளியாகியுள்ளன.

ஈழத் தமிழர் நலனை விட இலங்கையில் உள்ள இயற்கை வளங்கள் மீதும், அந்நாட்டு கடற்பரப்பு மீதும் அதிக பாசம் வைத்துள்ள அமெரிக்கா, போர்க் குற்றச்சாட்டுகளில் இருந்து இலங்கையை காப்பாற்றும் நோக்குடன் அந்நாட்டிற்கு எதிராக இந்தியாவின் ஆதரவுடன் ஐ.நா. மனித உரிமை ஆணையத்தில் மென்மையான தீர்மானம் ஒன்றை கொண்டுவர திட்டமிட்டிருக்கிறது.

இலங்கையில் நடைபெற்ற போர்க்குற்றங்களை கண்டிக்கும் வகையில் இத்தீர்மானம் வடிவமைக்கப்படும் போதிலும் இதில் போர்க் குற்றச்சாட்டுகள் குறித்து விசாரணை நடத்த இலங்கை அரசுக்கும் மேலும் சில ஆண்டுகள் அவகாசம் கொடுக்க வேண்டும் என்ற வாசகம் இடம் பெற்றிருக்கும் என்றும் இதன்மூலம் இலங்கை மீதான போர்க் குற்றச்சாட்டுகளை நீர்த்துப் போகச் செய்வதுதான் இந்தியா மற்றும் அமெரிக்காவின் நோக்கம் என்றும் கூறப்படுகிறது.

அன்மையில் டெல்லி வந்த இலங்கை வெளியுறவுத்துறை அமைச்சர் பெரீசிடம் போர்க் குற்றச்சாட்டுகளில் இருந்து இலங்கையை காப்பாற்றுவதாக இந்திய அரசு தரப்பில் உறுதி அளிக்கப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது.

இலங்கை போர் முடிவடைந்து நான்கு ஆண்டுகள் முடிவடையவிருக்கும் நிலையில், அந்நாட்டின் மீது போர்க்குற்ற விசாரணை நடத்துவதற்கு உண்மையான முயற்சிகளை நடத்தாமல் சொந்த லாபத்தை கருத்தில் கொண்டு அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் செயல்படுவதும், அதற்கு இந்தியா துணை போவதும் கண்டிக்கத்தக்கது.

இலங்கைக்கு எத்தனையோ வாய்ப்புகள் அளிக்கப்பட்டும் அது திருந்து வதற்கோ அல்லது வருந்துவதற்கோ அறிகுறிகள் தென்படவில்லை. எனவே இனியும் அந்நாட்டிற்கு அவகாசம் தராமல் இலங்கை மீது உடனடியாக போர்க்குற்ற விசாரணை நடத்துவதற்கான தீர்மானத்தை பிப்ரவரி- மார்ச் மாதங்களில் நடை பெற உள்ள ஐ.நா. மனித உரிமை ஆணையக் கூட்டத்தில் இந்தியாவே கொண்டு வருவதுதான் சரியானதாக இருக்கும்.

இதை செய்யும்படி மத்திய அரசை வலியுறுத்தி வரும் பிப்ரவரி 1-ந்தேதி கூடும் தமிழக சட்டப்பேரவையில் தீர்மானம் கொண்டு வந்து, அனைத்துக்கட்சிகளின் ஆதரவுடன் நிறைவேற்ற தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

இராணுவத்தால் யாழில் வருமானம் குறைந்த குடும்பங்களுக்கு கறவைப் பசுக்கள்,ஆடுகள்!

Tuesday, January 29, 2013
இலங்கை::இராணுவத்தால் யாழில் வருமானம் குறைந்த குடும்பங்களுக்கு கறவைப் பசுக்கள்,ஆடுகள்,

யாழ்ப்பாணத்தல் வருமானம் குறைந்த குடும்பங்களுக்கு இராணுவத்தின் 511ஆவது படைப்பிரிவினால் கறவைப் பசுக்கள் கையளிக்கும் நிகழ்வு கடந்த சனிக்கிழமை  இடம் பெற்றது.

வடக்கில் இராணுவத்தினரால் முன்னெடுக்கப்பட்டு வரும் வாழ்வாதார அபிவிருத்தி வேலைத்திட்டத்தின் கீழ் இவ் வாழ்வாதார உதவி வழங்கப்பட்டுள்ளது. இதற்கமைய அச்செழு கிராமத்தைச் சேர்ந்த 6 குடும்பங்களுக்கு இந்த கறவைப் பசுக்கள் கையளிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

கச்ச தீவு அருகே தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் தாக்குதல்?

Tuesday, January 29, 2013
ராமேஸ்வரம்::கச்சதீவு அருகே மீண்டும் தமிழக மீனவர்களை தாக்கிய இலங்கை கடற்படையினர், ராமநாதபுரம் மாவட்டம் தொண்டி அருகே உள்ள நம்புதாளை மீனவர்கள் தொண்டி கடலில் மீன் பிடித்து வந்தனர். அங்கு மீன்கள் சரியாக கிடைக்காததால் கச்சத்தீவு அருகே படகுகளில் மீன்பிடிக்க சென்றனர். அவர்கள் நடுக்கடலில் வலைகளை வீசி மீன்கள் பிடித்து கொண்டு இருந்தனர்.

அப்போது இலங்கை கடற்படையினர் அங்கு குட்டி கப்பல்களில் வந்தனர். கடலில் மீன்பிடித்து கொண்டு இருந்த மீனவர்களை பார்த்து ஏன்? இங்கு மீன்பிடிக்க வந்தீர்கள் என்று கூறி தாக்கினர்.

மேலும் அவர்கள் கடலில் வீசி இருந்த வலைகளை அறுத்து எறிந்து சேதப்படுத்தினர்.

மீனவர்கள் பிடித்து வைத்து இருந்த மீன்களையும் கடலில் வீசி எறிந்தனர். இதனால் பயந்துபோன மீனவர்கள் அங்கு இருந்த படகுகளில் தப்பி கரை திரும்பினர்.

தாக்கப்பட்ட மீனவர்கள் சம்பவம் பற்றி கூறுகையில், "நாங்கள் இந்திய எல்லைக்குள்தான் மீன்பிடித்து கொண்டு இருந்தோம். அப்போது அங்கு வந்த இலங்கை கடற்படையினர் அத்துமீறி நுழைந்து காட்டு மிராண்டித்தனமாக எங்களை தாக்கினர். நாங்கள் பிடித்து வைத்து இருந்த பல லட்ச ரூபாய் மதிப்புள்ள மீன்களையும் கடலில் அள்ளி வீசி எங்களை மிரட்டினர்.

மீன்களை கடலில் வீசியதால் வெறும் கையுடன் கரை திரும்பினோம். அடிக்கடி தொல்லை கொடுத்து வரும் இலங்கை கடற்படையின் அட்டூழியத்தை மத்திய அரசு தடுத்து மீனவர்களை பாதுகாக்க வேண்டும்." என்று தெரிவித்தனர்.

எதிர்வரும் 2015 ஆம் ஆண்டில் இலங்கையில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான அரசாங்கத்தை கவிழ்ப்பதற்கான சதித்திட்டத்தை அமெரிக்கா அரங்கேற்றியுள்ளது-விமல் வீரவன்ச!

Tuesday, January 29, 2013
இலங்கை::எதிர்வரும் 2015 ஆம் ஆண்டில் இலங்கையில் பொதுத் தேர்தல் நடத்தப்பட வேண்டிய காலமாகும். அதன் போது ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான அரசாங்கத்தை கவிழ்ப்பதற்கான சதித்திட்டத்தை தற்போது அமெரிக்கா அரங்கேற்றியுள்ளது என்று அமைச்சர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.

இது குறித்து அமைச்சர் மேலும் தெரிவிக்கையில்,

இலங்கையில் சட்டம் நீதித்துறை வீழ்ச்சி கண்டுள்ளதாக பெய்யான குற்றச்சாட்டுக்களை சுமத்துவதற்காகவே அமெரிக்க ஜனாதிபதி ஒபாமாவின் பிரதிநிதிகள் இலங்கைக்கு விஜயத்தை மேற்கொண்டுள்ளனர்.

இவ்வாறான குற்றச்சாட்டை முன்வைத்து யுத்தக் குற்றச்சாட்டுக்களை இலங்கை விசாரிப்பது சுயாதீனமாக அமையாது எனவே சர்வதேச விசாரணை தேவையென வலியுறுத்துவதே இச் சதியின் பின்னணியாகும்.

இது போன்ற பல்வேறு இலக்குகளை இலக்கு வைத்து தாக்குவதற்கு ஏகாதிபத்தியவாதிகள் காத்துக்கொண்டிருக்கின்றனர்.

அத்தோடு இவற்றை பயன்படுத்தி நாட்டு மக்கள் மனதில் சஞ்சலங்களை ஏற்படுத்த இங்கு சில சக்திகள் நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. எதிர்வரும் மார்ச் மாதம் இலங்கைக்கு எதிராக அமெரிக்கா ஐ.நா.வில் பிரேரணையொன்றை முன்வைக்கவுள்ளது.

இப் பிரேரணைக்கமைய செயற்பாடுகளை முன்னெடுத்து இலங்கைக்கு எதிராக சர்வதேச வழக்கு தொடங்கும் காலம் 2015 இல் ஏற்படும்.

அதாவது சர்வதேச யுத்தக்குற்ற நீதிமன்றத்தில் இலங்கைக்கு எதிராக யுத்தக் குற்றச்சாட்டுகள் விசாரிக்கப்படும் போது இந்த அரசாங்கம் ஆட்சியிலிருக்கக்கூடாது என்பதே அமெரிக்காவின் திட்டமாகும். அதன் பின்னர் தம்மால் ஆட்டுவிக்கக்கூடிய பொம்மை ஆட்சியை இலங்கையில் ஏற்படுத்தி எமது படையினரை சர்வதேச நீதிமன்றக் கூட்டில் ஏற்றுவதே திட்டமாகும் என்றார்.

இந்திய கடற்படையினரால் கைது செய்யப்பட்ட இலங்கை மீனவர்கள் 21 பேர் விடுவிக்கப்படவுள்ளனர்!

Tuesday, January 29, 2013
சென்னை::(இந்திய கடற்படையினரால் கைதுசெய்யப்பட்ட இலங்கை மீனவர்கள் 21 பேரும் எதிர்வரும் இரண்டு வாரங்களில் விடுதலை செய்யப்படுவார்கள் என கடற்றொழில் மற்றும் நீர்வள முகாமைத்துவ அமைச்சு தெரிவித்துள்ளது.

இந்தியாவிலுள்ள இலங்கை உயர்ஸ்தானிகராலயம் ஊடாக இதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளதாக அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

சர்வதேச கடல் எல்லையை மீறிய குற்றச்சாட்டின் பேரில் இலங்கையைச் சேர்ந்த மீனவர்கள் சிலர் அண்மையில் கைதுசெய்யப்பட்டனர்.

இதன்போது அவர்களது நான்கு படகுகளும் இந்திய கடற்படையினரால் கைப்பற்றப்பட்டிருந்தன.

கைதுசெய்யப்பட்ட இலங்கை மீனவர்கள் தமிழகத்திலுள்ள சிறைச்சாலையில் தடுத்துவைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

சுற்றுலா விசாவில் இலங்கைக்கு வந்து தொழில் புரிந்த இந்திய பிரஜை ஒருவர் கைது:-36 இலட்சம் ரூபா பெறுமதியான தங்க கட்டிகளை கடத்த முயன்ற ஒருவர் கைது!:-கல்முனையில் கஞ்சா வைத்திருந்த பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் கைது!

Tuesday, January 29, 2013
இலங்கை::சுற்றுலா விசாவில் இலங்கைக்கு வந்து தொழில் புரிந்த இந்திய பிரஜை ஒருவர் மட்டக்களப்பு - கொக்கட்டிச்சோலை பகுதியில் கைது செய்யப்பட்டுள்ளார்.

நெல் இயந்திரம் ஒன்றை இயக்கிக் கொண்டிருந்த வேளை இவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேகநபர் களுவாஞ்சிக்குடி நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டு 5000 ரூபா அபராதம் விதிக்கப்பட்டு விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

36 இலட்சம் ரூபா பெறுமதியான தங்க கட்டிகளை கடத்த முயன்ற ஒருவர்  கைது!

இந்தியாவுக்கு தங்க கட்டிகளை கடத்த முயன்ற ஒருவரை சுங்கப் பிரிவினர் கைது செய்துள்ளனர்.

36 இலட்சம் ரூபா பெறுமதியான ஆறு தங்க கட்டிகளை உடலுக்குள் மறைத்து வைத்தே குறித்த சந்தேக நபர் கட்டுநாயக்க விமானநிலையத்தின் ஊடாக இந்தியாவுக்கு இன்று செவ்வாய்க்கிழமை கடத்துவதற்கு முயற்சித்துள்ளார்.

குறித்த நபரின் நடவடிக்கைகள் தொடர்பில் சந்தேகம் ஏற்பட்டதைத் தொடர்ந்து சுங்க அதிகாரிகள் அவரை விசாரணைக்கு உட்படுத்தினர். இதன்போதே உடலில் மறைத்து வைக்கப்பட்டிருந்த தங்கக்கட்டிகள் மீட்கப்பட்டுள்ளன.

கல்முனையில் கஞ்சா வைத்திருந்த பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் கைது!

தனது பெட்டியில் கஞ்சா வைத்திருந்த பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கல்முனையில் பொலில் நிலையத்தில் மேற்கொள்ளப்பட்ட பொலிஸ் பரிசோதனையின் போதே பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் தனது பெட்டியில்; கஞ்சா வைத்திருந்தமை கண்டு பிடிக்கப்பட்டது.

குறித்த கான்ஸ்டபிளை மாவட்ட பொலிஸ் அத்தியட்சகர் இன்று செவ்வாய்கிழமை காலையில் கைது செய்துள்ளதாக கல்முனை பொலிஸார் தெரிவித்தனர்

அம்பாறை மாவட்டத்தில் உள்ள பொலிஸ் நிலையங்களில் வருடாந்தம் மேற்கொள்ளப்படும் பொலிஸ் சோதனை நடவடிக்கையின் ஒரு கட்டமாக கல்முனை பொலிஸ் நிலைய பரிசோதனை நடவடிக்கை இன்று செவ்வாய்க்கிழமை காலை மேற்கொள்ளப்பட்டது.

அம்பாறை மாவட்ட பொலில் அத்தியட்சகர் அஜித்ஹோகன தலைமையிலேயே இந்த பரிசோதனை நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.

இதன்போது பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவரின் பெட்டியில் 250 கிராம் கஞ்சா போதைப்பொருள் மறைத்து வைக்கப்பட்டிருந்தமை கண்டுபிடித்ததையடுத்து அவரை உடன்கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்

கைது செய்யப்பட்ட பொலிஸ் கான்டபிளை கல்முனை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதுடன் இது தொடர்பான விசாரணைகளை கல்முனை பொலிசார் மேற்கொண்டுவருகின்றனர்.