Wednesday, January 30, 2013
இலங்கை::ஜெனீவாவில் எதிர்வரும் மார்ச் மாதம் நடைபெறவுள்ள ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைப் பேரவையின் 22ஆவது கூட்டத்தொடரில் இலங்கைக்கு எதிராக அமெரிக்காவினால் கொண்டுவரப்படவுள்ள இரண்டாவது பிரேரணையை எதிர்கொள்ளத் தயாராகவே இருக்கின்றோம். இது எமக்கு பழக்கப்பட்ட விடயமாகும் என்று ஊடகத்துறை அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல தெரிவித்தார்.
சர்வதேச சமூகம் நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகள் தொடர்பில் கொண்டுவர முயற்சிக்கவில்லை. அவர்களின் நிகழ்ச்சி நிரல் குறித்து நாங்கள் ஓரளவு அறிந்து வைத்துள்ளோம் என்றும் அவர் குறிப்பிட்டார்.
ஜெனீவாவில் எதிர்வரும் மார்ச் மாதம் நடைபெறவுள்ள ஐக்கிய நாடுகள் மனித உரிமைப்பேரவையின் 22ஆவது கூட்டத்தொடரில் இலங்கைதொடர்பாக மற்றுமொரு பிரேரணை கொண்டுவரப்படவுள்ளதாக அமெரிக்கா அறிவித்துள்ளமை குறித்து வினவியபோதே அமைச்சர் மேற்கண்டவாறு கூறினார்.
இது குறித்து அவர் மேலும் கூறுகையில்,
ஜெனீவாவில் மார்ச் மாதம் நடைபெறவுள்ள மனித உரிமைப்பேரவையின் 22ஆவது கூட்டத்தொடரில் இலங்கைக்கு எதிராக அமெரிக்கா கொண்டுவரும் இரண்டாவது பிரேரணையை எதிர்கொள்வதற்கு அரசாங்கம் தயாராகவே இருக்கின்றது.
யுத்தத்தின் பின்னரான இலங்கையில் அரசாங்கம் பாரிய முன்னேற்றங்களை வெளிப்படுத்தியுள்ளது. கற்றறிந்த பாடங்களும் நல்லிணக்கமும் தொடர்பான ஆணைக்குழுவின் பரிந்துரைகளை அமுல்படுத்தும் விடயத்தில் சிறப்பான முன்னேற்றங்கள் வெளிப்படுத்தப்பட்டுள்ளன. அரைவாசிக்கும் மேற்பட்ட பரிந்துரைகள் அமுல்படுத்தப்பட்டுவிட்டன என்றார்.
No comments:
Post a Comment