Wednesday, January 30, 2013
இலங்கை::30 ஆண்டு யுத்தத்திற்கு பின்னர் நாடு வளம் பெறும் இந்த சந்தர்ப்பத்தில் எதிர்க் கட்சிகள் அநாவசியமான முறையில் அரசாங்கத்தை எதிர்ப்பது நல்லதல்ல. அரசாங்கத்தின் நற்பணிகளுக்கு எதிர்க் கட்சியினர் ஒத்துழைக்கும் ஒரு புதிய அரசியல் கலாசாரத்தை எங்கள் நாட்டில் உருவாக்க வேண்டுமென்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ பத்திரிகைகளின் பிரதம ஆசிரியர்களுடன் உரையாடுகையில் இதனை கூறினார்.
அவர் மேலும் கூறுகையில், எங்கள் நாட்டின் அரசியலில் எதிர்க் கட்சியினர் எதற்கெடுத்தாலும் அரசாங்கத்தை எதிர்த்து கண்டனம் தெரிவிக்கும் கொள்கைகளையே கடைப்பிடிக்கின்றனர்.
30 ஆண்டுகால யுத்தம் முடிவடைந்து நாட்டின் சகஜ நிலையும் அமைதியும் திரும் பியிருக்கின்றவேளையில் அரசாங்கம் அபி விருத்தி பணிகளை துரிதப்படுத்தி நாட்டின் பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்கு நடவடிக்கை எடுத்து வருகின்றது.
இந்த சந்தர்ப்பத்தில் எதிர்க் கட்சியினர் அரச எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களை மேற்கொள்வது மன வேதனையளிக்கின்றது.
எந்நேரத்திலும் அரசாங்கத்தை எதிர்ப்பதற்கு பதில் அரசாங்கத்தில் உள்ள குற்றம் குறைகளை சுட்டிக்காட்டி அவற்றை சரி செய்வதற்கு எதிர்க் கட்சியினர் முன்வந்தால் இந்த நாட்டில் பாராளுமன்ற ஜனநாயகம் தழைத்தோங்கும் என்றும் அவர் சொன்னார்.
இதன் போது பாராளுமன்றத்தின் சட்டவாக்க அதிகாரம் குறித்து பத்திரிகை ஆசிரியர்கள் கேள்வி எழுப்பிய போது ஜனாதிபதி அவர்கள் சிரித்துக் கொண்டே, பாராளுமன்றம் தான் சட்டங்களையும் இயற்றுகின்றன.
அவ்வாறே சட்டங்களை மாற்றி அமைப்பதும், திருத்துவதும் பாராளுமன்றம் தான் என்று கூறினார்.
“கேலிச்சித்திரக்காரர்கள் என்னை ஜே.ஆர். ஜயவர்தனவைப் போன்று என்னையும் விமர்சிக்கிறார்கள். அது அவர்களுடைய உரிமை. அதைப்பற்றி நான் கவலைப்படுவதும் இல்லை. ஆனால் நான் அரசியல் சாசனத்திற்கு அமையவே எனது பணிகளை” செய்கிறேன் என்று ஜனாதிபதி தெரிவித்தார்.
No comments:
Post a Comment