Friday, July 9, 2021

பா.ஜ.க. சித்தாந்தத்தை ஒவ்வொரு வீட்டுக்கும் எடுத்துச் செல்வோம்.. பதவி ஏற்றுக்கொண்ட பின்னர் அண்ணாமலை சபதம்!

பாஜகவின் சித்தாந்தத்தை ஒவ்வொரு வீட்டுக்கும் எடுத்துச் செல்லும் வரை ஓயமாட்டோம் என்று தமிழக பாஜக தலைவராக பதவியேற்றுக்கொண்ட பின்னர் அண்ணாமலை முன்னாள் ஐ.பி.எஸ். அதிகாரி கூறியுள்ளார்.

பாஜகவின் சித்தாந்தத்தை ஒவ்வொரு வீட்டுக்கும் எடுத்துச் செல்லும் வரை ஓயமாட்டோம் என்று தமிழக பாஜக தலைவராக பதவியேற்றுக்கொண்ட பின்னர் அண்ணாமலை முன்னாள் ஐ.பி.எஸ். அ
திகாரி கூறியுள்ளார். இது தொடர்பாக தமிழக பாஜக ட்விட்டர் பக்கத்தில் அவர் பதிவிட்டுள்ளதாவது: நமது தேசியத் தலைவர் திரு.ஜே.பி.நட்டா அவர்கள் எனக்கு வழங்கி இருக்கும் தமிழக பாஜகவின் தலைவர் எனும் பொறுப்பு என்னை பணிவும், பெருமையும் கொள்ள செய்கிறது.

நம் கட்சி பல ஆண்டுகளாக பல காரியகர்த்தாக்களின் உயிர் தியாகங்களாலும் மற்றும் பல தன்னலற்ற தலைவர்களின் தியாகங்களாலும் வழி நடத்தப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் உள்ள நம்முடைய கட்சியின் மூத்த தலைவர்களின் வழிகாட்டுதலுடன், ஒரு அணியாக, நாம் அனைவரும் ஒன்றிணைந்து, தேசிய தலைமை என்மீது வைத்துள்ள நம்பிக்கையை போற்றும் விதமாக உறுதியுடன் நடப்போம்.

அழகான மாநிலமான நம் தமிழ்நாடு மாண்புமிகு பிரதமர் திரு.நரேந்திர மோடி அவர்களின் தமிழ் பற்றும், நமது தமிழ் பண்பாடு மீது அவர் கொண்டுள்ள பெருமையும் அனைவருக்கும் தெரியும். நம்முடைய கட்சியின் சித்தாந்தத்தையும், உயிரான தேச பற்றையும் மற்றும் தமிழ் மக்கள் மீது மாண்புமிகு பிரதமர் கொண்டுள்ள பேரன்பையும் தமிழ்நாட்டின் ஒவ்வொரு வீட்டிற்கும் எடுத்துச் செல்லும் வரை நாங்கள் ஓய மாட்டோம். ஜெய்ஹிந்த்.. வாழ்க பாரதம்.. வளர்க தமிழ்நாடு. இவ்வாறு அந்த ட்விட்டர் பக்கத்தில் பதிவிடப்பட்டுள்ளது.

Sunday, June 13, 2021

கோயிலை திறக்காமல் மதுக் கடைகளை திறக்கிறார்கள். எச் ராஜா ஆவேசம்!

ஹெச் ராஜா பாஜக கட்சியின் மீது தீராத அன்பு கொண்டவர் எப்போதும் பாஜகவை விட்டுக்கொடுக்காமல் பேசிவரும் எச் ராஜா தனது கருத்துக்களை டுவிட்டர் மூலமாக முதலில் தெரிவிப்பார் 

எந்த ஒரு பிரச்சனையாக இருந்தாலும் பாஜக சார்பாக முதலில் குரல் கொடுக்க ரெடியாக இருப்பது எச் ராஜா அவர்கள் தான். தற்பொழுது மதுக்கடைகளை நிரந்தரமாக மூடக்கோரி பாஜகவினர்கள் ஒன்று கூடி அந்த அந்த பகுதியில் போராட்டம் நடத்தி உள்ளனர்.

போராட்டத்தில் கோவில்கள் இல்லை மதுக்கடை எதற்கு? தமிழக அரசே தமிழக அரசே மதுக்கடைகளை திறக்காதே தமிழக அரசே தமிழக அரசே ஏழைகளின் வயிற்றில் அடிக்காதே என்று கோஷத்தையும் எழுப்பியுள்ளார் எச் ராஜா.

தமிழகத்தில் மதுக்கடைகள் திறக்க எதிர்ப்பு: பா.ஜ. போராட்டம்!

சென்னை: தமிழகத்தில் மீண்டும் டாஸ்மாக் மது கடைகள் திறக்கப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து, தமிழகத்தில் 27 மாவட்டங்களில் பா.ஜ.,வினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

தமிழகத்தில் கொரோனா பரவல் குறைந்து வருவதை தொடர்ந்து, தமிழக அரசு ஊரடங்கில் சில தளர்வுகள் அளித்தது. அதில், கோவை, திருப்பூர், நீலகிரி,சேலம், மயிலாடுதுறை, தஞ்சாவூர் உள்ளிட்ட 11 மாவட்டங்களை தவிர்த்து மற்ற மாவட்டங்களில் வரும் திங்கட்கிழமை முதல் காலை 10:00 மணி முதல் மாலை 5:00 மணி வரை டாஸ்மாக் கடைகள் செயல்படும் என தமிழக அறிவித்தது. இதற்கு பா.ம.க., நிறுவனர் ராமதாஸ், அதிமுக ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம் உள்ளிட்டோர் எதிர்ப்பு தெரிவித்தனர்.

டாஸ்மாக் கடைகளை நிரந்தரமாக மூட வேண்டும். இதனை எதிர்த்து பா.ஜ., தொண்டர்கள் போராட்டத்தில் ஈடுபடுவார்கள் என தமிழக பா.ஜ., தலைவர் முருகன் அறிவித்தார்.

சென்னை ஆயிரம்விளக்கில் நடந்த ஆர்பாட்டத்திற்கு தமிழக பாஜ மாநில செயற்குழு உறுப்பினர் தாஸ் பாண்டியன் தலைமை வகித்தார்.

இதன்படி, சென்னை, திருப்பூர் உள்ளிட்ட 27 மாவட்டங்களில் பா.ஜ.,வினர் போராட்டம் நடத்தினர். அப்போது டாஸ்மாக் கடைகளுக்கு எதிரான வாசகங்களை கொண்ட பதாகைகளை ஏந்தி போராட்டம் நடத்தினர்.

சென்னை திநகரில் எல்.முருகன் தலைமையில் போராட்டம் நடந்தது. அப்போது முருகன் கூறியதாவது:

டாஸ்மாக் விவகாரத்தில் திமுக இரட்டை வேடம் போடுகிறது. ஆட்சியில் இல்லாத ஒரு நிலை. ஆட்சிக்கு வந்த பின் ஒரு நிலை என முதல்வர் செயல்படுகிறார். பெட்ரோல், டீசல் விலையை தேர்தல் அறிக்கையில் கூறியது போல் குறைக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

பா.ஜ., போராட்டம் குறித்து தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியதாவது: மதுபான கடைகளுக்கு எதிராக புதுச்சேரியில் முதலில் பா.ஜ., போராட வேண்டும். கடந்த ஆட்சி காலத்திலும் கொரோனா உச்சத்தில் இருந்த போது, டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டிருந்தன. பா.ஜ.,வுக்கு உண்மையில் தமிழகம் மீது அக்கறை இருந்தால், தமிழகத்திற்கு அதிகளவு தடுப்பூசியை பெற்றுத்தர வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

மாணவர்களுக்கும் தடுப்பூசி குறித்து பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ ஆலோசனை!

கொவிட்-19 தொற்று காரணமாக மூடப்பட்டுள்ள பாடசாலைகளை மீண்டும் திறக்கும் போது பிள்ளைகளின் நோய்கள் மற்றும் பிரச்சினைகளை கண்டறிய குழந்தை மருத்துவர்களின் உதவியை பெறுமாறு   பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, கல்வி அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கினார்.

பாடசாலைகளை மீள ஆரம்பித்தல் மற்றும் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுக்கு கொவிட் நோய் எதிர்ப்பு தடுப்பூசிகளை வழங்குவது தொடர்பில் கவனம் செலுத்தி அலரி மாளிகையில் நேற்று (11) நடைபெற்ற கலந்துரையாடலின் போதே  பிரதமர் இவ்வாறு குறிப்பிட்டார்.

கொவிட் தொற்று நிலைமை கட்டுப்படுத்தப்பட்ட பின்னர் உடனடியாக கட்டம் கட்டமாக பாடசாலைகளை மீள ஆரம்பிப்பதன் முக்கியத்துவம் குறித்து சுட்டிக்காட்டிய   பிரதமர், ஆசிரியர்களுக்கான தடுப்பூசிகளை பெற்றுக்கொள்ளும் நடவடிக்கையை சுகாதார அமைச்சின் ஊடாக நிறைவேற்றிக் கொள்ள முடியும் என சுட்டிக்காட்டினார்.

குறித்த கலந்துரையாடலில் கலந்துக்கொண்ட குழந்தை மருத்துவர்களின் சங்கத்தின் பிரதிநிதிகள் பாடசாலைகளை மீள திறக்கும்போது ஏற்படக்கூடிய பிரச்சினைகளை தவிர்ப்பதற்கு தமது சங்கத்தின் ஆதரவை கல்வி வலய மட்டத்தில் பெற்றுக்கொடுக்க முடியும் என  பிரதமர் முன்னிலையில் தெரிவிக்கப்பட்டது.

அதற்கமைய நாடு முழுவதும் உள்ள 99 கல்வி வலயங்களுக்கும் தமது சங்கத்தின் சார்பில் பிரதிநிதிகளை பெயரிட்டு மேற்படி நடவடிக்கையை முறையாக முன்னெடுப்பதாக சங்கத்தின் பிரதிநிதிகள் குறிப்பிட்டனர்.

“பாடசாலைகளை மீண்டும் ஆரம்பிப்பதற்கான தடுப்பூசி திட்டமொன்று செயற்படுத்தப்படின் அதன்போது தரம் 11 மற்றும் தரம் 13 மாணவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்பட வேண்டும்” என கல்வி அமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில பெரேரா தெரிவித்தார்.

இப்பணியை வெற்றிகரமாக நிறைவேற்றுவதற்கு சுமார் இரண்டு இலட்சத்து எழுபத்து ஒன்பது ஆயிரம் ஆசிரியர்கள் மற்றும் சுமார் மூன்று இலட்சம் கல்விசாரா ஊழியர்கள் உள்ளிட்டோருக்கு தடுப்பூசி வழங்குவதன் முக்கியத்துவமும் பேராசிரியர் கபில பெரேரா சுட்டிக்காட்டினார்.

நாட்டின் எதிர்கால சந்ததியினர் மற்றும் அவர்களை வழிகாட்டும் ஆசிரியர்களை பாதுகாப்பதற்கு அரசாங்கம் எப்போதும் நடவடிக்கை மேற்கொள்ளும் என   பிரதமர் இதன்போது நம்பிக்கை தெரிவித்தார்.

பாடசாலை ஆரம்பிக்கும்போது மாணவர்களும் ஆசிரியர்களும் பாதுகாப்பான முறையில்  பாடசாலைகளுக்கு அனுமதிக்கப்படுவது தொடர்பான வேலைத்திட்டமொன்றை செயற்படுத்த வேண்டும் என்று தெரிவித்த  பிரதமர். பாடசாலை மாணவர்களின் போக்குவரத்து நடவடிக்கையின் போது பின்பற்ற வேண்டிய சுகாதார நடைமுறைகள் தொடர்பில் விசேட கவனம் செலுத்துமாறும் கேட்டுக்கொண்டார்.

கர்ப்பிணி தாய்மார்களுக்கு கொவிட் தடுப்பூசி வழங்குவதற்கு பிரதமரின் பாரியார் திருமதி.ஷிரந்தி ராஜபக்ஷ அவர்கள் பெற்றுக்கொடுத்த ஒத்துழைப்பு தொடர்பில் குழந்தை மருத்துவர்களின் சங்கம் நன்றிகளை தெரிவித்தது.

இந்திய ஒருமைப்பாட்டிற்கு எதிரான ஒற்றைச் சொல் ஆயுதமா?

 "ஒன்றியம்" என்ற சொல் ஒன்றும் பயன்படுத்தபட கூடாத சொல் அல்ல. ஆனால் அதை பயன்படுத்துவோரும் அவர்களின் மறைமுக நோக்கங்களும் இங்கு விவாதிக்கப்பட வேண்டியது. ஒன்றியம் என்ற சொல் ஒற்றுமையை அல்லது ஒருங்கே இணைவதை குறிக்கும் பதத்தில் வர கூடிய ஒரு சொல்லே. ஆனால் அதன் பொருளுக்கு எதிராக, குறிப்பாக இந்திய ஒருமைபாட்டிற்கு எதிராக அச்சொல் இன்று பயன்படுத்தப்படுகிறதோ என்ற சந்தேகம் எழுந்துள்ளது. தி.மு.க ஆட்சிக்கு வரும் முன்பு வரையிலும், மு.க.ஸ்டாலின் அவர்களின் பல்வேறு அறிக்கைகள் "மத்திய அரசு" என்றே குறிப்பிட்டு வெளியிடப்பட்டுள்ளது. ஆனால் தற்போது ஆட்சிக்கு வந்தவுடன், குறிப்பாக ஸ்டாலின் பதவியேற்றவுடன் பதிவிட்ட ஒரு ட்விட்டர் பதிவில் 'ஒன்றிய அரசு' என்ற வார்த்தையை பயன்படுத்தினார். பின்னர் அதை தி.மு.க ஆதரவு ஊடகங்கள் பெரிதாய் பேசி வீடியோக்களை வெளியிட்டனர்.

இம்மாதம் காணொளி காட்சி மூலம் நடைபெற்ற 43 வது GST கவுன்சில் கூட்டத்தில் நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் அவர்களும் "மாநிலங்கள் இல்லாமல் ஒன்றியம் இல்லை" என்று கூறியிருக்கிறார். தற்போது ஸ்டாலின் அவர்களின் மகனும், கட்சியில் ஸ்டாலினுக்கு பிறகான அதிகார மையமாக திகழும் சேப்பாக்கம் MLA உதயநிதி ஸ்டாலின் அவர்களும் தன்னுடைய டிவிட்டர் பதிவுகளில் ஒன்றிய அரசு என்ற வார்த்தையை பயன்படுத்தி வருகிறார். இது எதோ இவர்கள் முதலாய் பயன்படுத்திய சொல் அல்ல. சில காலமாகவே வைகோ அவர்களும் இதை வலியுறுத்தி வந்தார்.

ஒருவேளை தி.மு.க மற்றும் ஒத்த சிந்தனையாளர்கள் யாவருக்கும் இந்திய தேசிய வரையறைக்குள் இருக்க விருப்பம் இல்லை என்றால் அதை வெளிப்படையாக சொல்லியே பேசலாம். இப்படி ஒற்றைச் சொல்லைக் கொண்டு சோசியல் மீடியாவில் திராவிட வீரர்கள் முஷ்டியை தூக்கி மீசையை முறுக்க தேவையில்லை. ஆதலால் ஒன்றியம் என்ற சொல்லை விட, அதை ஏன் இப்போது தி.மு.க கையில் எடுத்துள்ளது என்பது தான் இங்கு ஆய்வுக்கும், விவாதத்திற்கும் உரியது. அந்த ஒற்றைச் சொல் மூலம் தி.மு.க சொல்ல வருவது என்ன? இந்திய தேசியத்திற்கு அப்பாற்பட்ட ஒரு கருத்தியலை, ஒரு சவாலை முன் வைக்கிறதா? பிரிவினையை பேச முற்படுகிறதா? மாநில உரிமைகள் என்ற பேரில் மீண்டும் ஒரு கலக பிரச்சாரத்தை துவங்குகிறதா? என்ற கேள்விகள் முன் வருகின்றன.

ஒற்றைச் சொல்லை மையப்படுத்தி எதற்கு இத்துணை கேள்விகள் என்றால், அதன் வரலாறு அப்படி. பாரத தேசம் சுதந்திரம் அடைந்த பின்பு பிரிவினை பேசிய தி.மு.க ஒரு கட்டத்தில் அதை கைவிட்டது என்பது அனைவரும் அறிந்ததே. தி.மு.க துவங்கப்பட்ட காலம் முதலே 'திராவிட நாடு' கோரிக்கையை முன்வைத்தே செயல்பட்டது. இந்திய தேசியத்திற்கு எதிராக, முரண்பட்டே தி.மு.க இருந்தது. அன்று "திராவிடர் நாடு திராவிடருக்கே" என்ற கருத்தை தொடர்ந்து தி.மு.க பரப்பி வந்தது. மேலும் ஒரு குறிப்பிட்ட நாளை "திராவிட விடுதலை நாள்" எனவும் கொண்டாடி வந்தது. மறைந்த முன்னாள் அமைச்சர் திரு. முரசொலி மாறன் எழுதிய "ஏன் வேண்டும் இன்பத் திராவிடம்" என்று புத்தகமே 1956-வாக்கில் வெளியிடப்பட்டது.

ஆனால் அன்றே இதற்கு தென்னகத்தில் இருந்த மற்ற மொழி பேசும் மக்களிடம் இருந்து எந்த ஆதரவும் கிடைக்கப் பெறவில்லை. ஏன், தமிழகத்திலும் இந்த கோரிக்கை பெரியளவில் எடுபடவில்லை. இதை அண்ணா மற்றும் வினோபாபாவே அவர்களின் உரையாடல் மூலம் அறியலாம். பூமிதான இயக்கம் தொடர்பாக நாடு முழுவதும் பயணித்து கொண்டிருந்த பாபா தமிழகம் வந்த போது அண்ணாவை சந்திக்கிறார். அப்போது நடந்த உரையாடலை அண்ணாவே வெளியிட்டு இருக்கிறார். அதில் குறிப்பாக இந்திய தேசத்திற்குள் இருக்க முடியாது. தமிழகம், ஆந்திரா, கர்நாடகா, கேரளா உள்ளடக்கிய தனி நாடாக திராவிட நாடு இருக்கும் என்றும், ராணுவம் போன்று தனிப் படைகள் இருக்கும் என்றும் அண்ணா கூறி இருக்கிறார். அப்போது குறுக்கிட்ட பாபா இவ்வாறு சொல்கிறார் "நான் ஆந்திராவில் சுற்றுப்பயணம் செய்திருக்கிறேன், தமிழர்களுடன் தமிழர்களுடன் ஒன்றுகூடி அரசு அமைக்க விரும்பும் எண்ணம் ஆந்திரர்களிடம் இருப்பதாக எனக்குத் தெரியவில்லையே?" என்று கூறியிருக்கிறார். இப்படி தி.மு.க வின் ஆரம்ப நாட்களில் இந்திய தேசியத்தை உடைத்து வெளியேறி தனிநாடு அமைப்பதிலேயே குறியாக இருந்தது தெரியவருகிறது. ஆனால் 1963-இல் தேசிய ஒருமைபாட்டுக் குழுவின் முடிவுகளின் படி 'பிரிவினைவாத தடுப்பு சட்ட மசோதா' கொண்டு வரப்பட்டது. அதன் பின்னரே அண்ணா அவர்கள் தி.மு.க வின் விதிகளை மாற்றி இந்திய அரசியலமைப்பு சட்டத்துக்கு உட்பட்டு இயன்ற வரை அதிகாரங்களை பெற்று பாடுபடுவோம் என கொள்கைகளை மாற்றினார். இப்படி பாரதம் அல்லது இந்தியா என்ற தேசத்தை ஏற்காமல் பிரிவினையை பேசியே தான் தி.மு.க அதன் ஆரம்ப காலங்களில் செயல்பட்டது. தி.மு.க-வின் முதல் தேர்தல் அறிக்கையில் பிரிவினையை வலியுறுத்தி, மாநிலங்கள் பிரிந்து செல்லக்கூடிய சுயநிர்ணய உரிமையை வழங்கும் வகையில் அரசியலமைப்பு சட்டம் திருத்தப்பட வேண்டும் என்று கூறியிருந்தது. இந்த புள்ளிகளை எல்லாம் இணைத்து பார்த்தால் ஒருவேளை தி.மு.க பின்னோக்கி பயணப்படுகிறதோ என்று எண்ணத் தோன்றுகிறது. மாநில உரிமைகளுக்காகவும், நலன்களுக்காகவும் பேசுவது என்பது வேறு. ஆனால் அந்த கோரிக்கைகளின் பின் ஒளிந்து கொண்டு பிரிவினைவாதம் பேசுவது என்பது வேறு. பிரிவினைவாதம், மாநில உரிமைகள் இரண்டிற்குமான வேறுபாடுகளின் இழைகோடுகள் மிக மெல்லியதாக இருப்பதால், அதில் எளிதாக அரசியல் ஆட்டம் ஆடலாம் என்று மாநில கட்சிகள் ஆரம்பித்தால் இந்திய ஒருமைப்பாடு சீர்குலையும், உறுதியாக ஒருநாள் உள்நாட்டு போர் வெடிக்கும். இதை எல்லாம் கவனித்து வரும் வலதுசாரி அரசியல் நோக்கர்கள், இந்திய அரசை தன்னுடைய சுயநலன்களுக்காக மிரட்ட தி.மு.க தனது பிரித்தாளும் ஆயுதத்தை மீண்டும் கையில் எடுத்து விட்டதாகவே தெரிகிறது என்று ஐயம் கொள்கிறார்கள். இந்த தேசம் காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை ஒற்றை தேசமாகவே இருக்க வேண்டும், இங்கு பிரிந்து நின்று பெரிதாய் சாதிக்க ஒன்றுமில்லை, ஒற்றுமையே பலம். ஒன்றியம் என்று சொல்லிவிட்டு போகட்டும், ஆனால் ஒன்றி வாழும் பாரத தாய் மக்களின் மனதில் பிரிவினையை கலக்க யார் முயன்றாலும், இந்த இந்திய தேசத்தின் பிள்ளைகளாக நாம் ஒன்றுபட்டு நின்று அதனை எதிர்கொள்ள வேண்டும். இறுதியாக ""ஒன்றியம்" இந்திய ஒருமைப்பாட்டிற்கு எதிரான ஒற்றைச் சொல் ஆயுதமா?"ஒன்றியம்" இந்திய ஒருமைப்பாட்டிற்கு எதிரான ஒற்றைச் சொல் ஆயுதமா?" என்ற உணர்வையும், நாம் எல்லாம் "இந்தியர்கள்" என்ற உணர்வையும் மக்களிடம் சிதைக்கும் வழியாக இந்த "ஒன்றிய" சொல் பிரயோகம் இருக்க கூடாது என்பதே பெரும்பான்மை மக்களின் விருப்பம்.


நேற்று மட்டும் 378 பேர் இறப்பு என்ற நிலையில் TASMAC திறந்திருப்பது மோசமான செயல்' : விளாசும் H.ராஜா!

கொரோனா தொற்று 2-வது அலை தமிழகத்தில் அதிகரித்து வந்ததை அடுத்து தளர்வுகளற்ற ஊரடங்கு அறிவிக்கப்பட்டு டாஸ்மாக் கடைகளும் மூடப்பட்டன. அதை தொடர்ந்து கொரோனா தொற்று குறைந்து வருவதால் ஊரடங்கில் சில தளர்வுகளை தமிழக அரசு அறிவித்து வந்தது. இந்நிலையில் ஊரடங்கில் மேலும் சில தளர்வுகளை தமிழக அரசு அறிவித்துள்ளது. அதில் கொரோனா தொற்று குறைந்துள்ள 27 மாவட்டங்களில் டாஸ்மாக் கடைகள் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை டாஸ்மாக் கடைகள் திறக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. : 'டாஸ்மாக் கடைகளை மூடுக' : போராட்டம் அறிவித்த தமிழக பா.ஜ.க! இந்த நிலையில், தமிழக பாஜக திமுக அரசுக்கு எதிராக போராட்டம் அறிவித்துள்ளது. இது பாஜக தலைவர் கூறுகையில், "டாஸ்மாக் கடைகளை திறக்கக் கூடாது என்றும் மேலும் டாஸ்மாக் கடைகளை நிரந்தரமாக மூட வேண்டும் என்றும் தமிழக அரசை வலியுறுத்தி நாளை காலை 10 மணிக்கு பாரதிய ஜனதா கட்சியின் நிர்வாகிகள் தொண்டர்கள் அவரவர் வீடுகளின் முன்பு நின்று ஆர்ப்பாட்டம் நடத்துவார்கள்", என்று அறிவித்துள்ளார். இதனை அடுத்து, தி.மு.க அரசை கடுமையாக விமர்சனம் செய்துள்ளார் பாஜக மூத்த தலைவர் ஹெச். ராஜா. இது குறித்து அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், "3 மே 2020 அன்று தொற்று பாதிப்பு 759 இறப்பு 103 என்று இருந்த போது TASMAC திறப்பிற்கு எதிராக இன்றைய முதல்வர் ஆர்பாட்டம் நடத்தினார்.ஆனால் நேற்று மட்டும் பாதிப்பு 15759 இறப்பு 378 இருக்கும்போது TASMAC திறந்திருப்பது எவ்வளவு மோசமான செயல். இதை பா.ஜ.க வன்மையாக கண்டிக்கிறது" என்று பதிவிட்டுள்ளார்.