Monday, November 18, 2019

புதிய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ விடுத்துள் கோரிக்கை!

இலங்கை ஜனநாயக சோஷலிசக் குடியரசின் ஏழாவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக கோட்டாய ராஜபக்ஷ சற்றுமுன்னர் பதவிப் பிரமாணம் செய்துக் கொண்டார்.

இந்த பதவிப் பிரமாண நிகழ்வு அனுராதபுரம் ருவான்வெலிசாய மண்டபத்தில் இடம்பெற்று வருகிறது.

இந்நிலையில், இன்னும் சற்று நேரத்தில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ ருவான்வெலி மண்டபத்தில் இருந்து இந்நாட்டு மக்களுக்கு உரையாற்றவுள்ளார்.

இந் நிகழ்வில் சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் தலைவரும் முன்னாள் ஜனாதிபதியும், எதிர்கட்சி தலைவருமான மகிந்த ராஜபக்ஸ உள்ளிட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டுள்ளனர்.


தமிழ் மற்றும் முஸ்லிம் மக்கள் தமது பயணித்தில் பங்களர்களாக மாற வேண்டும் என்று, புதிய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ கோரிக்கைவிடுத்துள்ளார்.

அனுராதபுரம் - ருவென்வெளி சேயவில் நடைபெற்ற அவரது பதவி ஏற்பு நிகழ்வில், நாட்டுக்காக ஆற்றிய தேசிய உரையில் அவர் இதனைக் கூறியுள்ளார்.

தேர்தல் பெறுபேற்றில் தாம் எதிர்பார்த்தவகையில் தமிழ் மக்கள் முஸ்லிம்களது செயற்பாடு அமைந்திருக்கவில்லை.

ஆனாலும் நாட்டின் பிரஜைகள் என்ற அடிப்படையில் தமிழ் மற்றும் முஸ்லிம்களுக்கான நலன்கள் தொடர்பி;ல் அவர்களையும் அரவணைத்து பயணிக்கவிருப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.

அனைத்தின மக்களும் அவர்களது அடையாளங்களுடன் கௌரவமாக வாழ்வதற்கான சூழ்நிலை உருவாக்கப்படும்.

தாம் பௌத்த தர்மத்தை சார்ந்தே வாழ்ந்து வருகின்றவர் என்ற அடிப்படையில், ஆயிரமாயிரம் ஆண்டுகால பௌத்த பாரம்பரியம் மற்றும் கலாசாரங்களை பாதுகாப்பதற்கு அரசாங்க அனுரசனை வழங்கப்படும்.

நாட்டின் தேசிய பாதுகாப்பை பலப்படுத்துவதே தமது முதன்மை நோக்கமாக இருக்கிறது.

சர்வதேச அளவில் அணிசேரா கொள்கையுடன் இலங்கை செயற்படும்.

சகல நாடுகளும் இலங்கையின் இறையான்மையயும், கௌரவத்தையும் மதித்து செயற்பட வேண்டும் என்று, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தமது உரையில் குறிப்பிட்டார்.

அதேநேரம், தமது வெற்றிக்காக உழைத்த எதிர்கட்சித் தலைவர் மகிந்த ராஜபக்ஷ, பசில் ராஜக்ஷ உள்ளிட்ட அனைவருக்கும் நன்று கூறுவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

No comments:

Post a Comment