Monday, October 31, 2011

தமிழ் மக்களின் காணிகளை அபகரிக்கும் திட்டம் எதுவும் அரசுக்கு கிடையாது-பசில் ராஜபக்ஷ!

Monday, October 31, 2011
கேள்வி: அரசாங்கத்தின் “திவிநெகும” திட்டத்தின் முதலாவது கட்டம் வெற்றிகரமாக நிறைவடைந்து இரண்டாவது கட்டம் அண்மையில் ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில் வடபகுதி மக்களின் காணிகளைப் பதிவு செய்யும் திட்டத்தை ஆரம்பிக்கும் நடவடிக்கைக்கு எதிராக குரல் எழுப்புவதற்கு சிலர் எத்தனித்து வருகின்றமை தொடர்பாக நீங்கள் கூறும் கருத்தென்ன....?

பதில்: அரசாங்கம் என்ற வகையில் மூன்று தசாப்தங்களாக புரையோடிப்போயிருந்த பயங்கரமான மிகக் கொடூரமான யுத்தத்தை முடிவுக்குக் கொண்டு வருவதற்காகப் பாடுபட்டோம். அன்று நாம் மனித உரி மைகளை மீறுவதாக நமக்கெதிராக குற் றஞ்சுமத்தினர். இதேபோன்று இடம்பெயர்ந்த மக்களுக்கு வீடுகள், வீதிகள் மற்றும் அவர் களது பொதுத் தேவைகளைச் செய்து கொடுக்கவில்லையென்றும் குறைகளைக் கூறினர். மீள்குடியேறிய மக்களுக்கும் எவ்வித செயற்திட்டங்களையும் மேற்கொள்ளவில்லை யென்றும் புகார் செய்தனர். எனினும் இவ்வாறான அனைத்து குற்றங்களுக்கும், முறைப்பாடுகளுக்கும் நாம் செயற்பாடுகளின் மூலம் பதில ளித்துள்ளோம். இன்று வட, கிழக்கு வாழ் மக்களை குடியமர்த்தியுள் ளோம். எந்தவிதப் பிரச்சினைகளும் ஏற்படவில்லை. இவ்வாறு நாம் நடவடிக்கைகளை மேற்கொண்டு வரும்போது தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வுகளைப் பெற்றுக்கொடுக்கும் போது சில சந்தர்ப்பவாத அரசியல்வாதிகளுக்கு இதனைப் பொறுத்துக் கொள்ள முடியாமல், அவர்கள் ஏதாவதொரு பிரச்சினையைக் கிண்டிக் கிளறிக் கொண்டேயிருப்பார்கள். அத்துடன், தேவையற்ற ஏதாவதொன்றைப் பிடித்துக்கொண்டு மக்களுக்கு எங்களால் வழங்கப்படும் சேவைகளை நிறுத்தப்பார்க் கிறார்கள். எனவே இவ்வாறான காணிகளைப் பதிவு செய்யும் நடவடிக்கைக்கு அவர்கள் முட்டுக்கட்டையாக இருப்பது மிகவும் கவலைக்குரிய விடயமாகும்.

கேள்வி: வடக்கு, கிழக்கு மாகாணங்களில் புதிய சிங்களக் குடியேற்றங்களை நிறுவும் எண்ணம் அரசாங்கத்திடம் இருப்பதாகவும் சிலர் கூறி வருகின்றனரே. இது தொடர்பில் நீங்கள் கூறவிரும்புவதென்ன?

பதில்: உண்மையில், வடக்கு, கிழக்கு மாகாணங்களில் புதிய சிங்களக் குடியேற்றங்களை நிறுவும் எண்ணம் அரசாங்கத்திடம் இல்லை. அத்துடன் வடக்கு, கிழக்கு மக்களின் காணிகளை அபகரிக்கும் திட்டமும் அரசாங்கத்திற்கு இல்லை. மக்களின் காணிகள் மக்களிடம் மீண்டும் செல்வதை உறுதிப்படுத்தவே காணிப்பதிவுகள் அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்படுகின்றன. இவ்வாறான விடயங்களைக் கொண்டு தவறான பிரசாரங்களை முன்னெடுத்து மக்களைக் குழப்பத்தில் ஆழ்த்த வேண்டாம் என்றும் கேட்டுக் கொள்கின்றேன்.

வடக்கு, கிழக்கில் முன்னெடுக்கப்பட்டு வரும் காணிப் பதிவு நடவடிக்கைகளை எந்தவிதத்திலும் தப்பான விதத்தில் மேற்கொள்ள மாட்டோம். இதேபோல் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் புதிய சிங்களக் குடியேற்றங்களை மேற்கொள்ளும் எண்ணமும் அரசாங்கத்திடம் இல்லை என்பதையும் திட்டவட்டமாக அரசாங்கம் சார்பில் கூறிக்கொள்ள விரும்புகின்றேன்.

கிழக்கை நாம் மீட்டபோதும் அப் பிரதேசங்களிலும் சிங்களக்குடியேற்றங்களை அரசாங்கம் செய்யப் போவதாகவும் பிரசாரம் செய்து வந்தனர். ஆனால் வாகரையிலோ அல்லது வேறு எங்காவது பகுதியிலோ அரசாங்கம் சிங்களக் குடி யேற்றங்களைச் செய்யவில்லை. இதேபோன்று தான் தற்போது வடக்கிலும் அரசாங்கம் சிங்களக் குடியேற்றங்களை மேற்கொள்ளப் போவதாக பொய்ப்பிரசாரங்கள் செய்யப்பட்டு வருகிறன. ஆனால் அவ்வாறு சிங்களக் குடியேற்றங்களைச் செய்யும் எண்ணம் அரசாங்கத்திற்கில்லை. வடக்கு, கிழக்கு மாகாணங்களில் அரசாங்கம் பாரிய அபி விருத்தி வேலைத்திட்டங்களை முன்னெடுத்து வருகின்ற இன்றைய சூழ்நிலையில், மக் களின் காணி எது என்பதும், அரசாங்கத்திற்குச் சொந்தமான காணிகள் எவை என்பதும் அடையாளம் காணப்பட வேண்டிய நிலையில் இருக்கின்றோம். இவ்வாறு நாம் காணிகளை அடையாளம் காணாவிட்டால் எவ்வாறு அபிவிருத்தி வேலைத்திட்டங்களை முன்னெடுக்க முடியும். எனவே, இவற்றைக் குழப்பும் வகையில் யாரும் இத்தருணத்தில் நடந்துகொள்ள வேண்டாம்.

கேள்வி: இன்று மரக்கறி பழவகைகள் விலை அதிகரித்துள்ளன. மக்களின் வாழ்க்கைச் செலவும் உயர்ந்து கொண்டே போகிறது. அரசாங்கத்திடம் முறையான செயற்றிட்டமொன்று இவைகள் தொடர்பில் இல்லை. இந்நிலையில், “திவிநெகும” நிகழ்ச்சித் திட்டத்தின் முதலாவது கட்டம் நிறைவடைந்து இரண்டாம் கட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. “திவிநெகும” முதலாவது கட்ட நடவடிக்கைக ளின் முன்னேற்றம் குறித்து சற்று கூற முடியுமா?

பதில்: அரசியல் மேடைகளில் அரசாங்கத்தைப் பற்றி விமர்சிக்கும் எண்ணங்களை எதிர்க் கட்சிகள் இன்னும் கைவிடவில்லை. இன்னும் இதுவரையிலும் அரசாங்கத்தை விமர்சித்தே வருகிறார்கள். “திவிநெகும” பயிர் நடும் திட்டத்தை நாம் ஆரம்பிக்க முன் மரக்கறி மற்றும் பழ வகைகளின் விலையேற்றத்தைப் பற்றி பேசாத எதிர்க் கட்சிகள், தற்போது தான் அதைப்பற்றிப் பேசுகிறார்கள். இதிலிருந்து நமது “திவிநெகும” பயிர் நடும் திட்டத்தின் முதலாவது கட்டம் மிகவும் முன்னேற்றகரமாக முடிந்துள்ளது என்பதைக் குறிப்பிட்டுச் சொல்ல முடியும். ஜனாதிபதியின் ஆலோச னைக்கமையவே “திவிநெகும” வேலைத்திட் டம் ஆரம்பிக்கப்பட்டது. இத்திட்டம், தற்போது எவ்விதத் தடங்கலுமின்றி முன்னெடுக்கப்பட்டு வருகிறது. இதில் எவ்வித சந்தேகங்களுமில்லை. இது இவ்வாறிருக்க, எதிர்க்கட்சியினர் எம்மைப் பற்றியோ, அரசாங்கத்தைப் பற்றியோ, அல்லது நமது “திவிநெகும” திட்டத்தைப் பற்றியோ விமர்சனம் செய்வதில் எதுவித பயனு மில்லை.

கேள்வி: அரசாங்கம் வீட்டுத்தோட்ட திட்டங்களை மரக்கறி வகைகளினதும் பழவகைகளினதும் விலைகள் அதிகரித்துள்ள வேளைகளிலேயே மேற்கொள்கிறது. இத்திட்டத்திற்கு மிக நீண்டகாலம் செல்லும். அப்படியானால் இத்திட்டம் முடிவுறும் போது மரக்கறி வகைகளினதும், பழவகைகளினதும் விலை கணிசமான அளவு குறையும். இதிலிருந்து, மக்களின் அபிலாஷைகளையும், தேவைகளையும் நிறைவேற்ற அரசாங்கம் தயாரில்லை என சிலர் கருதும் இவ்வேளை யில், இது குறித்து உங்கள் கருத்தென்ன?

பதில்: அரசாங்கம் என்ற வகையில் எமக்கு மக்களின் தேவைகளை நிறைவேற்ற முடியாதுள்ளது என்பது ஒரு கட்டுக்கதையும், விஷமப் பிரசாரமுமாகும். இப்படியே தான் எதிர்க் கட்சியினர் அடிக்கடி கூறி வருகிறார்கள்.

ஒரு நாளைக்கு ஏழு அல்லது எட்டு மணித்தியாலங்களை இருளில் கழிக்க வேண்டிய நிலை ஒரு காலத்தில் மக்களு க்கு இருந்தது. பாதைகளில் செல்ல முடி யாது குண்டும் குழியுமாக, கற்கள் கழன்று, பாதையில் தார் வெடித்து, மண் பாதைகளில் நீர் நிரம்பி வழிந்தோடிய காட்சிகள் நிறைந்த ஒரு யுகத்தை, சுகாதாரத்துறையில் பல்வேறு சீர்கேடுகள், மருந்தில்லை, நோயாளிக்கு வார்ட் இல்லை. வைத்தியம் செய்ய வைத்தியசாலைக் கட்டடங்கள் இல்லை. தேவைகளை சரியான முறையில் பூர்த்தி செய்ய வைத்திய உபகரணங்கள் இல்லை. இவ்வாறான இருள் நிறைந்த யுகத்தை மக்கள் அன்று அனுபவித்து வந்தனர். ஆனால், இன்று மக்களுக்குத் தேவையான மின்சாரம் கிராமங்கள் தோறும் தொடர் விநியோக சேவையாக எவ்விதத் தடங்கலுமில்லாமல் வழங்கப்படுகிறது.


சந்திப்பு: எஸ்.என்.எம். இப்றாஹீம்.

அனைவரும் ஏற்கும் அதிகார பகிர்வு: TNA க்கு ரணில் புத்திமதி தானும் ஒத்துழைப்பு நல்குவாராம்

Monday, October 31, 2011
அனைவரும் ஏற்றுக்கொள்ளும் அதிகாரப் பகிர்விற்கு தமிழ்த் தேசிய கூட்டமைப்பு இணக்கம் தெரிவிக்க வேண்டியதன் அவசி யத்தை எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க வலியுறுத்தியுள்ளார். இதனை அடிப்படையாகக் கொண்ட எந்தவொரு திட்டத்தினையும் முன்னெடுப்பதற்கான ஒத்துழைப்பை ஐக்கிய தேசியக் கட்சி வழங்குமென அவர் தெரிவிக்கிறார்.

சர்வதேச நடவடிக்கைகளுக்கான பாராளுமன்ற உறுப்பினர்களுக்கான 33 அமர்வில் பங்கேற்கும் முகமாக கொழும் பிற்கு வருகை தந்துள்ள வெளிநாட்டு பிரதிநிதிகள் குழுவொன்று எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவை சந்தித்தது.

உலகிலுள்ள அனைத்து பாராளு மன்றங்களுக்கும் இதனைவிட அதிகமான அதிகாரங்கள் வழங்கப்பட வேண்டும் என்பதே தனதும் தமது கட்சியினதும் எண்ணமென ரணில் விக்கிரமசிங்க தெரிவிக்கிறார்.

நாட்டின் பிரச்சினைகளுக்கு பாராளு மன்றத்தினூடாக தீர்வினைப் பெற வேண்டிய அவசியம் தமக்குள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். அனைவராலும் ஏற்றுக்கொள்ளக்கூடிய அடிப்படையில் தமிழ் கூட்டமைப்பிற்கான அதிகாரப் பகிர்வினை வழங்குவதனை தம்மால் ஏற்றுக்கொள்ள முடியுமென ரணில் விக்கிரமசிங்க மேலும் தெரிவிக்கிறார்.

திருச்செந்தூர் முருகன் கோயிலில் சூரசம்ஹாரம் கோலாகலம்!.

Monday, October 31, 2011
திருச்செந்தூர் : திருச்செந்தூர் முருகன் கோயில் கந்தசஷ்டியின் முக்கிய நிகழ்ச்சியான சூரசம்ஹாரம், இன்று மாலை நடைப்பெற்றுகொண்டிருக்கிறது. இதனால் திருச்செந்தூரில் ஏராளமானபக்தர்கள் குவிந்துள்ளனர். இங்கு சிறப்புவாய்ந்த கந்தசஷ்டி திருவிழா அக்.,26ம்தேதி யாகசாலை பூஜையுடன் துவங்கியது. தினமும் காலை,மாலை யாகசாலை பூஜை, தீபாராதனை, சுவாமி வீதியுலா நடந்தது. ஆறாம் நாளான இன்று காலை 6.30 மணியளவில், கடைசி கால யாகசாலை பூஜை நடப்பெற்றது. சூரசம்ஹாரம் முடிந்தபின், ஆறு நாட்கள் சஷ்டி விரதமிருக்கும் ஏராளமான பக்தர்கள், கடலில் புனித நீராடி விரதத்தை முடிப்பர். இதனால் நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி, மதுரை உள்ளிட்ட முக்கிய ஊர்களில் இருந்து அரசு சிறப்பு பேருந்துகளும், நெல்லையிலிருந்து சிறப்பு ரயில்களும் திருச்செந்தூருக்கு இயக்கப்படுகின்றன.

நீதிமன்ற அறிவித்தலை புறக்கணித்த பிரதிவாதிகளை பிரத்தியோகமாக ஆஜராகுமாறு உத்தரவு!

Monday, October 31, 2011
மேல் மாகாணத்தில் வெள்ளப்பெருக்கை கட்டுப்படுத்தும் முறையான வேலைத்திட்டம் தயாரித்து நீதிமன்றத்தில் சமர்ப்பிக்குமாறு விடுக்கப்பட்ட அறிவித்தலை புறக்கணித்ததாக கூறப்படும் பிரதிவாதிகளை, நீதிமன்றத்தில் பிரத்தியோகமாக ஆஜராகுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

சமூக நியாயங்களுக்கான கேந்திர நிலையத்தால் தாக்கல் செய்யப்பட்ட மனுவை ஏழாவது முறையாகவும் இன்று விசாரணைக்கு எடுத்துக்கொண்ட சந்தர்ப்பத்தில் மேல் மாகாண மேல் நீதிமன்றத்தில் நீதவான் டப்ளியூ.எம். ரி.பி.வாரவெவ இந்த உத்தரவைப் பிறப்பித்தார்.

மேல் மாகாணத்தில் வெள்ளப்பெருக்கை கட்டுப்படுத்துவதற்காக முறையான வேலைத்திட்டத்தை சமர்ப்பிக்குமாறு பிரதிவாதிகளுக்கு கட்டளை பிறப்பிக்குமாறு கோரி கடந்த வருடம் நவம்பர் மாதம் 29 ஆம் திகதி மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

இதனை மக்கள் நலன்கருதிய மனுவாக எடுத்துக்கொண்ட நீதிமன்றம், பாரம்பரிய நீதிமன்ற நடைமுறைகளின் பிரகாரம், மனு மீதான விசாரணைக்கு நீண்ட காலம் செலவிடுவது அநாவசியமாகும் என சுட்டிக்காட்டியுள்ளது.

இதற்கமைய வெள்ளப் பெருக்கினைக் கட்டுப்படுத்துவதற்கான திட்டங்களை சமர்ப்பிக்குமாறு, இதற்கு முன்னர் பிரதிவாதிகளுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது.

எனினும் கடந்த பத்து மாதங்களாக இதற்கு எதிர்மனு தாக்கல் செய்வதற்காக கால அவகாசம் கோரி, நீதிமன்ற உத்தரவை பிரதிவாதிகள் புறக்கணித்துள்ளனர்.

எதிர்மனு தாக்கல் செய்வதற்காக பிரதிவாதிகள் தரப்பு சட்டத்தரணி இன்றைய தினம் நீதிமன்றத்தில் மீண்டும் கால அவகாசம் கோரியதை அடுத்து நீதவானின் விமர்சனத்திற்கும் ஆளாகியுள்ளனர்.

இதன் பிரகாரம் இடர் முகாமைத்துவ அமைச்சர், மேல் மாகாண சுற்றாடல் அமைச்சர், கொழும்பு நகர மேயர், காணி நிரப்பு மற்றும் அபிவிருத்திக் கூட்டுத்தாபனத்தின் தலைவர், நகர அபிவிருத்தி அதிகார சபையின் தலைவர் ஆகியோரை டிசம்பர் 29 அம் திகதி நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு இன்று உத்தரவிடப்பட்டது.

ஜ.தே.கூ தாக்கல் செய்த மனுவை விசாரணைக்கு எடுத்துக்கொள்ள தீர்மனம்!

Monday, October 31, 2011
காலியில் இடம்பெற்ற எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் மீதான தாக்குதலுக்கு தலைமை வகித்த பாராளுமன்ற உறுப்பினர்களை பொலிஸார் கைதுசெய்தமைக்கு எதிர்ப்பு தெரிவித்து ஜனநாயக தேசிய கூட்டமைப்பு தாக்கல் செய்த அடிப்படை உரிமை மனுவை விசாரணைக்கு எடுத்துக்கொள்ள நீதிமன்றம் தீர்மானித்துள்ளது.

நீதியரசர்கள் நிமல் காமினி அமரதுங்க, சலீம் மர்சூக் மற்றும் ப்ரியசாத் டெப் ஆகியோர் முன்னிலையில் இது தொடர்பான மனு இன்று பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேக்காவை விடுதலை செய்யுமாறு ஜனநாயக தேசியக் கூட்டமைப்பினால் கடந்த வருடம் ஓகஸ்ட் மாதம் 12 அம் திகதி காலியில் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

மனுதாரர்கள் சார்பாக நீதிமன்றத்தில் பிரசன்னமாகி விளக்கமளித்த சட்டத்தரணி ஜே.சி.வெலியமுன, சரத் பொன்சேக்காவை விடுதலை செய்யுமாறும், நாட்டின் சட்ட ஆதிக்கத்தை உறுதிசெய்யுமாறு வலியுறுத்தும் சுலோகங்களுடனும் எதிர்ப்பு ஆர்ப்பாட்டப் பேரணி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தாகவும் கூறினார்.

இந்த எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களுக்கு இடமளிக்க முடியாது எனக்கூறி, பிரதிவாதிகள் அதற்கு இடையூறு விளைவித்ததை அடுத்து பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும், பொலிஸாருக்கும் இடையில் வாக்குவாதம் நிலவியதாக சட்டத்தரணி குறிப்பிட்டார்.

மேலிட உத்தரவிற்கு அமைய எதிர்ப்பு ஆர்ப்பாட்டப் பேரணிக்கு இடமளிக்க முடியாது எனத் தெரிவித்து பொலிஸார் கண்ணீர்ப்புகை பிரயோகம் நடத்தியதாகவும் சட்டத்தரணி தெரிவித்தார்.

இதன் பின்னர் இரண்டு பாராளுமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட கைதான ஐந்து பேரையும், பிணையில் விடுவித்ததுடன், வழக்கு தொடர்ந்ததாகவும், அந்த வழக்கில் பாராளுமன்ற உறுப்பினர்கள் விடுவிக்கப்பட்டதாகவும் சட்டத்தரணி வெலியமுன நீதிமன்றத்தில் சுட்டிக்காட்டினார்.

ஜனநாயக தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களான விஜித்த ஹேரத், அஜித் குமார, அர்ஜூண ரணத்துங்க ஆகியோரும் மேலும் மூவரும் இந்த மனுவைத் தாக்கல் செய்திருந்தனர்.

காலி பொலிஸ் அத்தியட்சகர், காலி பொலிஸ் நிலைய தலைமைப் பொலிஸ் இன்ஸ்பெக்டர், பொலிஸ் மா அதிபர், சட்ட மா அதிபர் உள்ளிட்ட சிலர் மனுவில் பிரதிவாதிகளாக பெயரிடப்பட்டுள்ளனர்.

மனுவிலுள்ள விடயங்களை ஆராய்ந்த நீதிமன்றம் விசாரணைகளை 2012 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 28 ஆம் திகதிக்கு ஒத்திவைத்தது.

சிரியாவில் தலையிட்டால் பூகம்பத்தை சந்திக்க நேரிடும் : சிரிய அதிபர் பஷார் அல் ஆசாத்!.

Monday, October 31, 2011
எங்கள் நாட்டில் ஐரோப்பிய நாடுகள் தலையிட்டால் பூகம்பத்தை சந்திக்க நேரிடும் என்று சிரிய அதிபர் பஷார் அல் ஆசாத் கடுமையாக எச்சரித்துள்ளார்.
சிரியாவில் கடந்த மார்ச் முதல் அதிபர் ஆசாத்துக்கு எதிராக மக்கள் கிளர்ச்சியில் ஈடுபட்டுள்ளனர். அதிபர் பதவி விலக்கோரி ஆர்ப்பாட்டங்கள் நடந்து வருகின்றன. கிளர்ச்சியை ஒடுக்க ராணுவத்தை அதிபர் பயன்படுத்தி வருகிறார். இதுவரையில் 3,000 பேர் ராணுவத்தால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர். கடந்த சனிக்கிழமை கிளர்ச்சியாளர்கள் மீது ராணுவம் சுட்டதில் 50 பேர் பலியானார்கள். வரலாற்று புகழ்மிக்க ஹோம்ஸ் நகரில் ஆர்ப்பாட்டம் செய்த மக்கள் மீது ராணுவ வீரர்கள் கண்மூடித்தனமாக சுட்டனர்.

இதில் 21 பேர் இறந்தனர். இதற்கிடையில், அரசுக்கு எதிரான கிளர்ச்சியாளர்கள் தாக்குதலில் 20 ராணுவ வீரர்கள் பலியானதாகவும் இட்லிப் மாகாணத்தில் பாதுகாப்பு படையினர் சென்ற பஸ் மீது கிளர்ச்சியாளர் நடத்திய திடீர் தாக்குதலில் 10 வீரர்கள் இறந்ததாகவும் சிரிய அரசு தெரிவித்துள்ளது. சிரியாவில் ஐனநாயக ஆட்சி கோரி மக்கள் கிளர்ச்சியில் ஈடுபட்டுள்ளனர். அவர்களை ராணுவ நடவடிக்கை மூலம் ஒடுக்குவதை நிறுத்திவிட்டு, அரசியலமைப்பு சட்டத்தில் தேவையான திருத்தங்களை செய்து ஜனநாயக ஆட்சியை ஏற்படுத்த வேண்டும் என்று அதிபர் பஷார் அல் ஆசாத்துக்கு ஐ.நா. பொதுச் செயலாளர் பான் கி மூன் சமீபத்தில் கடிதம் எழுதியிருந்தார்.

ராணுவ நடவடிக்கை மூலம் அப்பாவி மக்கள் படுகொலை செய்யப்படுவதற்கு அமெரிக்கா, இங்கிலாந்து உட்பட பல்வேறு நாடுகள் கண்டனம் தெரிவித்திருந்தன. இந்த சூழ்நிலையில், லண்டனில் இருந்து வெளிவரும் Ôசண்டே டெலிகிராப்Õ என்ற பத்திரிகைக்கு சிரிய அதிபர் பஷார் அல் ஆசாத் பேட்டியளித்தார். அதில், “சிரியாவின் உள்விவகாரங்களில் மேற்கத்திய நாடுகள் (ஐரோப்பிய நாடுகள்) தலையிடுகின்றன.

இந்த பிராந்தியத்தில் சிரியா தனிமைப்படுத்தப்பட்டு உள்ளது. இந்த சூழ்நிலையை பயன்படுத்தி சிரியாவில் தலையிட ஐரோப்பிய நாடுகள் முயற்சி செய்தால், பூகம்பம் போன்ற கடும் விளைவுகளை அவை சந்திக்க நேரிடும். சிரியாவில் ஏதாவது ஒரு பிரச்னை ஏற்பட்டால் அது இந்த பிராந்தியத்தையே பற்றி எரிய வைக்கும். சிரியாவை துண்டாட அவை திட்டமிட்டால், இந்த பிராந்தியமும் பல்வேறு துண்டுகளாக சிதறும். மற்றொரு ஆப்கானிஸ்தானை அவர்கள் பார்க்க விரும்புகிறார்களா? அல்லது பல ஆப்கானிஸ்தான்களை பார்க்க நினைக்கிறார்களாÓ என்று ஆசாத் கடுமையக எச்சரித்துள்ளார்.

சிரியாவின் தலைநகர் டமாஸ்கஸில் அதிபர் பஷார் அல ஆசாத்க்கு ஆதரவு தெரிவித்து கடந்த வாரம் ஆயிரக்கணக்கானோர் பேரணி நடத்தினர்.
அரசுக்கு எதிரான கிளர்ச்சியில் மக்கள் ஈடுபட்ட ஆரம்ப கால கட்டங்களில் மக்கள் மீது நடவடிக்கை என்ற பெயரில் பல தவறுகளை ராணுவம் செய்தது என்பதை ஒப்புக் கொண்ட ஆசாத், தற்போது தீவிரவாதிகள் மீது மட்டும் தான் குறிவைத்து நடவடிக்கை எடுக்கப்படுகிறது என்றார்.

பஷார் அல் ஆசாத் தனது ஆட்சியில் பெரும் சவால்களை சந்திக்க வேண்டிய நிலையில் இருக்கிறார். நாடு முழுவதும் அரசுக்கு எதிராக அரசியல் கிளர்ச்சி பரவி வருகிறது. கடந்த 2000&ம் ஆண்டில் அதிபர் பதவியை ஏற்றபோது, அரசியல், பொருளாதார சீர்திருத்தங்கள் செய்வார் என்ற நம்பிக்கை மக்களிடம் இருந்தது. அரசியல் சீர்திருத்தங்களைவிட பெருளாதார சீர்திருத்தங்களுக்கு ஆசாத் முன்னுரிமை தந்தார். பஷார் அல் ஆசாத் அவரது தந்தை ஹபிஸ் அல் ஆசாத் கடந்த 2000ம் ஆண்டில் இறந்ததும் அதிபர் பதவியை ஏற்றார். இறப்பது வரையில் சிரிய அதிபராக ஹபிஸ் அல் ஆசாத் 30 ஆண்டுகள் பதவி வகித்தார்.

நடிகை மர்ஜியா வபாமெஹர் விடுதலை : 90 கசையடியும் ரத்து!.

Monday, October 31, 2011
டெஹ்ரான்: ஆபாசமாக நடித்ததற்காக 1 ஆண்டு சிறையும், 90 கசையடியும் விதிக்கப்பட்ட ஈரான் நடிகை மர்ஜியா வபாமெஹர் கடந்த திங்கட்கிழமை விடுதலை செய்யப்பட்டார். 90 கசையடியும் ரத்து செய்யப்பட்டது. 'மை டெஹ்ரான் ஃபார் சேல்' என்ற படத்தில் ஆபாசமாக நடித்ததற்காக நடிகை மர்ஜியா வபாஹெர் கடந்த ஜூலை மாதம் கைது செய்யப்பட்டார். இந்த படம் கடுமையான விமர்சனத்திற்குள்ளானது. இந்த படம் ஆஸ்திரேலியாவுடன் கூட்டாக சேர்ந்து எடுக்கப்பட்டது. டெஹ்ரானில் உள்ள ஒரு நாடக நடிகையை அதிகாரிகள் நடிக்கவிடாமல் தடை செய்கிறார்கள்.

இதையடுத்து அந்த நடிகை தலைமறைவாக வாழ்கிறார். பின்னர் நாடு கடத்தப்பட்ட ஒருவரின் உதவியோடு ஈரானை விட்டு வெளியேறுகிறார் என்பது தான் கதை. இதில் மர்ஜியா இஸ்லாமிய சட்டத்தை மீறி ஆபாசமாக நடித்ததாக குற்றம்சாட்டப்பட்டு கடந்த ஜூலையில் கைது செய்யப்பட்டார். பின்னர் ஜூலை மாத இறுதியில் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். இந்நிலையில் தான் அவருக்கு 90 சவுக்கடியும், 1 ஆண்டு சிறை தண்டனையும் விதிக்கப்பட்டது. இந்த படத்தில் மர்ஜியா ஒரு காட்சியில் தலையில் துணியில்லாமலும், இன்னொரு காட்சியில் மது அருந்துவது போலவும் வந்ததற்காகத் தான் இந்த தண்டனை.

மர்ஜியாவின் ஓராண்டு தண்டனையை 3 மாதங்களாக குறைத்த நீதிமன்றம் கசையடியை ரத்து செய்தது. அதன்படி அவர் கடந்த திங்கட்கிழமை விடுதலை செய்யப்பட்டார். 'மை டெஹ்ரான் ஃபார் சேல்' படத்தை ஈரானில் திரையிட அனுமதி வழங்கப்படவில்லை. ஆனால் சட்டவிரோதமாக அந்த படம் வினியோகிக்கப்பட்டுள்ளது என்று பார்ஸ் நியூஸ் ஏஜென்சி தெரிவித்துள்ளது. பிபிசியுடன் சேர்ந்து பணியாற்றியதற்காக ஈரானில் கடந்த மாதம் மட்டும் 6 இயக்குனர்கள் கைது செய்யப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது

மட்டு. சிவானந்தாவில் சாதனைபடைத்த மாணவர்கள் கௌரவிப்பு!

Monday, October 31, 2011
முத்தமிழ் வித்தகர் சுவாமி விபுலானந்தரினால் ஸ்தாபிக்கப்பட்ட மட்டக்களப்பு கல்லடி சிவானந்தா தேசிய பாடசாலையில் இவ்வாண்டு ஐந்தாம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சையில் சாதனை படைத்த மாணவர்கள் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.

இன்று காலை பாடசாலையின் நடராஜாநந்தா மண்டபத்தில் அதிபர் கே.ரவீந்திரமூர்த்தி தலைமையில் நடைபெற்ற கௌரவிப்பு விழாவை சிவானந்தா பாடசாலையின் 1994ஆம் ஆண்டு உயிரியல் விஞ்ஞானப்பிரிவு மாணவர்கள் ஒழுங்கு செய்திருந்தனர்.

கல்லடி விவேகானந்தா வித்தியாலய அதிபர் திருமதி திலகவதி ஹரிதாஸ் உட்பட பலர் கலந்து கொண்டனர். இதன்போது கவிஞர் ரீ.எல்.ஜவ்பர்கான் சிறப்புரையாற்றினார்.

டைரக்டர் பி.வாசு மகன் நடிகர் ஷக்தி திருமணம் : நடிகர்-நடிகைகள் வாழ்த்து!

Monday, October 31, 2011
சென்னை: டைரக்டர் பி.வாசுவின் மகன் ஷக்தி. இவர் “தொட்டால் பூ மலரும்” என்ற படம் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார். ஆட்டநாயகன் படத்திலும் நடித்துள்ளார்.

ஷக்திக்கும், சென்னையை சேர்ந்த முரளி-துஷிதா தம்பதி மகள் ஸ்மிருதிக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டது. ஷக்தி-ஸ்மிருதி திருமணம் இன்று காலை சாந்தோமில் உள்ள மேயர் ராமநாதன் திருமண மண்டபத்தில் நடந்தது.

மணமக்களை தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் நேரில் வாழ்த்தினார். நடிகர்கள் பிரபு, ராதாரவி, சத்யராஜ், பரத், நரேன், கன்னட நடிகர் உபேந்திரா, நடிகை குஷ்பு, கவிஞர் வாலி, நா.முத்துக்குமார், இயக்குனர் ஆர்.கே.செல்வமணி, ரோஜா, தயாரிப்பாளர் சத்யஜோதி தியாகராஜன், சந்தானபாரதி, பி.வி.ராஜேந்திரன், ஆகியோரும் வாழ்த்தினார்கள்.

திருமண வரவேற்பு நிகழ்ச்சி நேற்று மாலை நடந்தது. இதில் தி.மு.க. தலைவர் கருணாநிதி, மு.க.ஸ்டாலின், நடிகர்கள் ரஜினிகாந்த், கமலஹாசன், விஜய், சூர்யா, கார்த்தி உள்ளிட்ட பலர் நேரில் வாழ்த்தினர்.

சென்னை தி.நகரில் பிரபலமான 25 கடைகளுக்கு சீல்!.

Monday, October 31, 2011
சென்னை: சென்னை தி.நகரில் அனுமதியின்றி கட்டிடங்கள் கட்டியதாக கூறி பிரபலமான 25 கடைகளுக்கு இன்று சீல் வைக்கப்பட்டது. சிஎம்டிஏ மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தி இந்த நடவடிக்கையை எடுத்தனர். இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. சென்னை நகரின் வர்த்தக பகுதியாக விளங்குவது தி.நகர். இங்குள்ள ரங்கநாதன் தெரு, உஸ்மான் சாலையில் நூற்றுக்கணக்கான ஜவுளி மற்றும் நகைக்கடைகள் உள்ளன. சாதாரண நாட்களிலேயே தினமும் ஆயிரக்கணக்கான மக்கள் இங்கு ஷாப்பிங் செய்ய வருவார்கள்.

பண்டிகை நாட்களில் சென்னை மட்டுமின்றி வெளியூர்களில் இருந்தும் லட்சக்கணக்கான மக்கள் ஜவுளி மற்றும் பொருட்கள் வாங்க வந்து செல்வர். இதனால், தி.நகரில் எந்நேரமும் மக்கள் கூட்டம் அலைமோதும். போக்குவரத்து நெரிசலும் ஏற்படும். தி.நகரில் உள்ள பெரும்பாலான கடைகள், விதிமுறைகளை மீறி கட்டப்பட்டிருப்பதாகவும், பல கடைகள் சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமம் (சிஎம்டிஏ) மற்றும் மாநகராட்சி அனுமதி பெறாமல் நடத்தப்படுவதாகவும் ஏராளமான புகார்கள் எழுந்தன. அதிலும் ஜவுளிக்கடைகள் மீதான புகார்கள்தான் அதிகம்.

புகார் வந்த கடைகளின் கட்டிடங்கள் குறித்து அதிகாரிகள் ஆய்வு செய்தனர். சம்பந்தப்பட்ட கடைகளுக்கு சிஎம்டிஏ சார்பிலும் மாநகராட்சி சார்பிலும் நோட்டீஸ்கள் அனுப்பப்பட்டன. அதன்பிறகும் அவர்கள் முறையான அனுமதியை பெற எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இந்நிலையில் சிஎம்டிஏ மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் இன்று காலை 6 மணிக்கு தி.நகர் வந்தனர். அவர்கள் தலைமையில் 15 கார்களில் 100-க்கும் அதிகமான ஊழியர்களும் வந்தனர். தி.நகர் துணை கமிஷனர் அசோக்குமார், உதவி கமிஷனர் தமிழ்செல்வன் ஆகியோர் தலைமையில் ஏராளமான போலீசாரும் குவிக்கப்பட்டிருந்தனர்.

உஸ்மான் சாலை, ரங்கநாதன் சாலையில் அனுமதியின்றி கட்டப்பட்டிருந்த கடைகளை அதிகாரிகள் ஆய்வு செய்து சீல் வைக்கத் தொடங்கினர். உஸ்மான் சாலையில் உள்ள சென்னை சில்க்ஸ், ஸ்ரீகுமரன் தங்க மாளிகை, பாலு ஜுவல்லர்ஸ், ரத்னா ஸ்டோர்ஸ் மற்றும் நகைக்கடை ஆகியவற்றுக்கு சீல் வைக்கப்பட்டன. ரங்கநாதன் தெருவில் ரத்னா ஸ்டோர்ஸ், டெக்ஸ்டைல் இன்டியா, சரவணா இனிப்பகம், சண்முகம் டெக்ஸ்டைல்ஸ், ஜெயச்சந்திரன் டெக்ஸ்டைல்ஸ், அன்பழகன் பழக்கடை, அர்ச்சனா ஸ்வீட்ஸ், மாடர்ன் டிரேடர்ஸ், ஹாட் மெயில்ஸ், அம்பிகா அப்பளம், பேஷன் இன்டியா, ராயல் புட்வேர், மாடர்ன் டிரேடர்ஸ், ஸ்ரீராம் மருந்தகம், சாம்சனைட் பேக், நேஷனல் பாஸ்ட் புட், லெதர் பேலஸ், எஸ்மிஸ் (நகைக்கடை), ஸ்ரீதேவி கோல்டு கவரிங் உள்பட 25 கடைகளுக்கு சீல் வைக்கப்பட்டது.

காலையில் கடைக்கு வந்த உரிமையாளர்களும் ஊழியர்களும் அதிகாரிகளின் அதிரடி நடவடிக்கையை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். கடைக்கு வந்த பொதுமக்களும் வெளியிலேயே நின்றிருந்தனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இது குறித்து தகவல் கிடைத்ததும் கடையின் உரிமையாளர்கள், ஊழியர்கள் வந்தனர். அதிகாரிகளிடம் கடை உரிமையாளர்கள் விளக்கம் கேட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அதை அதிகாரிகள் கண்டுகொள்ளவில்லை. ‘சீல் வைத்தது வைத்ததுதான். நீங்கள் வேண்டுமானால் கோர்ட்டுக்கு செல்லுங்கள்’ என்று திட்டவட்டமாக கூறிவிட்டனர்.

சிஎம்டிஏ அனுமதி பெறாமல் கட்டப்பட்டிருந்த 7 கடைகளில், 6 கடைகளுக்கு சீல் வைக்கப்பட்டது. ஒரு கடை உரிமையாளர் கோர்ட்டில் தடை வாங்கியிருந்ததால் அங்கு மட்டும் சீல் வைக்கவில்லை. அதேபோல மாநகராட்சி அனுமதி பெறாத 21 கடைகளில் 19 கடைகளுக்கு சீல் வைக்கப்பட்டது. 2 கடைகள் கோர்ட்டில் தடை உத்தரவு பெற்றிருந்தன. அதிகாரிகள் தொடர்ந்து சீல் வைத்துக் கொண்டிருந்ததால் மற்ற கடைகளும் திறக்கப்படவில்லை. நம் கடைக்கும் சீல் வைக்கப்படலாம் என்ற பயத்தில் அவர்கள் திறக்காமல் இருந்தனர்.

போலி நாணயத் தாள்களுடன் நபர் கைது

Monday, October 31, 2011
ஒரு தொகை போலி நாணயத் தாள்களுடன் இளைஞர் ஒருவர் மாத்தளை நகரில் வைத்து பொலிஸ் குற்றத்தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

அவரிடம் இருந்த மூன்று இலட்ச ரூபா பெறுமதியான நாணயத் தாள்கள் போலியானவையாக இருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

குறித்த நபர் புத்தளம் உடப்பு பகுதியைச் சேர்ந்தவர் எனவும், அவரிடம் தொடர்ந்து விசாரணைகள் இடம்பெற்று வருவதாகவும் பொலிஸார் குறிப்பிடுகின்றனர்.



போலி அனுமதிப் பத்திரங்களைத் தயாரித்த சந்தேகநபர் கைது!

மணல் ஏற்றிச் செல்வதற்கென போலி அனுமதிப் பத்திரங்களை அச்சிட்ட சந்தேகநபர் ஒருவர் மஹியங்கனையில் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

மாவட்ட செயலாளரின் கையொப்பத்தை போலியாக இட்டு அனுமதிப் பத்திரங்கள் அச்சிடப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிடுகின்றனர்.

இந்தப் போலி அனுமதிப் பத்திரங்களை பயன்படுத்தி நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கும் மணல் ஏற்றிச் செல்லப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

சந்தேகநபர் பதுளை கந்தேகெட்டிய பிரதேசத்தை சேர்ந்தவர் எனக் கூறப்படுகின்றது.

இந்திரா காந்தியின் 27 ஆவது நினைவு தினம்!

Monday, October 31, 2011
இந்தியாவின் முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் 27 ஆவது நினைவு தினத்தினை நாடாளாவிய ரீதியில் மக்கள் அனுஷ்டித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்திராகாந்தியின் சமாதிக்கு ஜனாதிபதி பிரதீபா பட்டேல் இன்று காலை மலர் அஞ்சலி செலுத்தியதாக இந்திய தகவல்கள் குறிப்பிட்டுள்ளன.

பிரதமர் மன்மோகன் சிங், பாராளுமன்ற சபாநாயகர் மீரா குமார், ஆளும் காங்கிரஸ் கட்சி தலைவர் சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்தி ஆகியோரும் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர்.

அத்துடன் டெல்லி ஆளுநர், மத்திய அமைச்சர்கள் மற்றும் காங்கிரஸ்சின் சிரேஷ்ட தலைவர்களும் கலந்து கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

1984 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 31 ஆம் திகதி தனது பாதுகாவலர் ஒருவரால் முன்னாள் இந்திய பிரதமர் இந்திரா காந்தி சுட்டுக் கொல்லப்பட்டிருந்தார்.

புத்மநாபா ஈ.பி.ஆர்.எல்.எப் செயலாளர் சிறிதரன், க.சுப்பு அவர்களின் அஞ்சலி கூட்டத்தில் உரையாற்றினார்!

Monday, October 31, 2011
க.சுப்பு அவர்களின் இறுதிக்கிரியை இன்று(30.10.11) மயிலாப்பூரில் உள்ள மயானத்தில் நடைபெற்றது. லாயிட்ஸ் காலனியில் உள்ள அவரது வீட்டில் இருந்து புறப்பட்ட மரண ஊர்வலமானது. மயிலாப்பூரில் உள்ள மயானத்தை வந்தடைந்தது. அங்கு அவரது உடல் எரியூட்டப்பட்டது.
தகன கிரியைக்குப் பின்னர், அஞ்சலி; கூட்டம் நடைபெற்றது. இதில் தி.மு.க பாராளுமன்ற உறுப்பினர் திருச்சி சிவா,தி.மு.க முக்கியஸ்தர்கள்,நக்கீரன் காமராஜ் ஐக்கிய பொது உடமைக் கட்சியைச் சேர்ந்த தோழர்சங்கர், ஊடகவியலாளர் ரி.எஸ்.மணி தோழர்பத்மநாபாவின் ஆத்மாத்த நன்பர்களும் பத்மநாபா ஈ.பி.ஆர்.எல்.எப் அனுதாபிகளுமான தோழர்கள் பாஸ்கர்,தோழர்பாவல்,தோழர்குலைகாதன் பத்மநாபா ஈ.பி.ஆர்.எல்.எப் செயலாளர்சிறிதரன், தோழர்ஸ்ரனிஸ் மற்றும் கு.சுப்பு அவர்களின் நன்பர்,அனுதாபிகள் என பலர் கலந்து கொண்டனர்.
அஞ்சலி கூட்டத்தில் பேசிய சிறிதரன், “சுப்பு அவர்கள் எமது கட்சியுடன் இறுதிவரை உறவினை வைத்திருந்ததுடன்,அவரை சந்திக்கும் போதேல்லாம் எம்மை இம்முகத்துடன் வரவேற்று, உபசரிப்பார். அவரது இழப்பால் தவிக்கும் குடும்பத்தாரின் சோகத்தில் நாமும் பங்கு கொள்கிறோம”; என் கூறினார். திருச்சி சிவா பேசும் போது “இங்கு இந்த சடங்கிற்கு வந்தவர்கள் எண்ணிக்கை குறைவாக உள்ளது. மனிதர்களுக்கான உறவுகளின் விரிசல் ஏற்பட்டதை இது காட்டுகிறது. சுப்பு அவர்களின் பேச்சால் நான் கவரபட்டவன்,அவரை நான் சந்திக்கும் போதெல்லாம் என்னை அவர் சிறியவனாக நினைக்காமல், எனக்கு மிகவும் மரியாதை கொடுப்பார். அவர் பலருக்கு உதவிகள் செய்துள்ளார். அவரது குடும்பத்துக்கு நாம் உதவவேண்டும்” என கூறினார்.

இரண்டு நமிட மௌன அஞ்சிலியுடன் அஞ்சலிக் கூட்டம் நிறைவு பெற்றது.

தமிழ் மக்களின் பிரச்சனைகளைத் தீர்த்து வைப்பதில் சர்வதேசம் மிகுந்த ஆர்வத்துடன் செயற்படுகின்றது-கனடாவில் இரா சம்பந்தன்!

Monday, October 31, 2011
ஈழத்தமிழ் மக்களின் பிரச்சனைகளைத் தீர்த்து வைப்பதில் சர்வதேசம் மிகுந்த ஆர்வத்துடன் செயற்படுகின்றது என கனடா ஸ்காபுறோ கூட்டத்தில் தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா சம்பந்தன் தெரிவித்துள்ளார்.

'தற்போதைய சூழ்நிலையில் எமது தாயகத் தமிழ் மக்களின் பிரச்சனை ஒரு உலகம் சார்ந்த பிரச்சனையாக கணிக்கப்படுகின்றது. அவர்கள் அந்த மண்ணில் படுகின்ற துன்பக் குரல் அல்லது அவர்கள் எழுப்புகின்ற அவலக் குரல் உலகின் காதுகளுக்கு கேட்கின்றது.

இதேவேளை தாயகத்தில் தமிழ்த் தேசிய கூட்டமைப்பினராகிய நாங்களும் புலம் பெயர்ந்த நாடுகளில் வாழும் உங்களைப் போன்ற உறவுகளும் நடத்திவரும் பல்வேறு வகையான போராட்டங்களும் சந்திப்புக்களுமே தற்போது சர்வதேச அளவில் பல மாற்றங்களை ஏற்படுத்தியுள்ளன. எமது அவதானிப்பின்படி நமது ஈழத்தமிழ் மக்களின் பிரச்சனைகளைத் தீர்த்து வைப்பதில் சர்வதேசம் மிகுந்த ஆர்வத்துடன் செயற்பட்டுவருகின்றது' என நேற்று ஞாயிற்றுக்கிழமை (30.10.11) இரவு கனடாவின் ஸ்காபுறோ நகரில் உள்ள பீற்றர் அன்ட் போல் மாநாட்டு மண்டபத்தில் தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு அளிககப்பட்ட இராப்போசன விருந்தின்போது உரையாற்றிய தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான இரா.சம்பந்தன் தெரிவித்தார்.

அமெரிக்காவில் இராஜாங்க திணைக்கள அதிகாரிகளோடு பேச்சுவார்த்தைகளை நடத்திவிட்டு கனடாவின் ஸ்காபுறோ நகருக்கு சென்றுள்ள தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்கள் இரா சம்பந்தன் மாவை சேனாதிராஜா என். ஏம். சுமந்திரன் ஆகியோர் நேற்று ஸ்காபுறோவில் இரண்டு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு உரையாற்றினர். முதலில் ஸ்காபுறோ ஸ்ரீ ஐயப்பன் தேவஸ்தான விழா மண்டபத்தில் மேற்படி மூவரும் உரையாற்றினர்.

அங்கு தொடர்ந்து உரையாற்றிய இரா. சம்பந்தன் சர்வதேசம் நமது பிரச்சனையை தீர்த்து வைக்க தயாராக உள்ள போது நமது நாட்டு ஜனாதிபதி அதற்கு விருப்பம் உள்ளவராகத் தெரியவில்லை. அவரது விரும்பத்தகாத நடவடிக்கைகளினால் அவர் பல இடங்களில் அவமானப்பட வேண்டியுள்ளது. உதாரணமான சில தினங்களுக்கு முன்னர் அவுஸ்த்திரேலியாவில் தற்போது நடைபெற்று வரும் பொதுநலவாய மாநாட்டில் கலந்து கொண்ட கனடிய பிரதமரின் புறக்கணிப்புக்கு மகிந்தா இராஜபக்ச உள்ளாக வேண்டி வந்துவிட்டது. இது அவருக்கு ஒரு பாடமாக அமைய வேண்டும். கனடாவின் பிரதமர் ஏற்கெனவே பல விண்ணப்பங்களை இலங்கை அரசிற்கும் அதன் ஜனாதிபதிக்கும் விடுத்துள்ளார். ஆனால் அவைகளுக்கு தகுந்த பதில் தராத மகிந்த இராஜபக்சவின் உரைகளை தான் செவிமடுக்கப்போவதில்லை என்ற செய்தியையே கனடியப் பிரதமர் நமது ஜனாதிபதிக்கு தந்துள்ளார். எனவே இலங்கை அரசு உடனடியாக நமது தமிழ் மக்களின் அரசியல் பிரச்சனைகளை தீர்த்து வைக்க வேண்டிய ஒரு கடப்பாடு உள்ளது.

எனவே கடந்த காலங்களைப் போல நமது புலம் பெயர்ந்த உறவுகளாகிய நீங்கள் எதிர்காலத்திலும் நமது தாயக மக்களை பாதுகாக்கும் வகையில் இங்கு குரல் எழுப்ப வேண்டும். அவ்வாறு செய்தால் நாம் தீர்வுகள் பெற்ற ஒரு சமூகமான அந்த மண்ணில் நிம்மதியுடன் வாழ முடியும் என்றார்.

அங்கு மாவை சேனாதிராஜா மற்றும் சுமந்திரன் ஆகியோரும் உரையாற்றினார்கள். குகதாசன் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கினார்.

திருகோணமலையில் அமைக்கப்பட்டுள்ள எஸ் ஜே.வி.செல்வநாயகத்தின் உடைப்பு!

Monday, October 31, 2011
திருகோணமலையில் அமைக்கப்பட்டுள்ள அமரர் தந்தை எஸ் ஜே.வி.செல்வநாயகத்தின் சிலை நேற்றிரவு சேதமாக்கப்பட்டுள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன. இனந்தெரியாத நபர்களே அமரர் செல்வநாயகத்தின் சிலையின் தலைப்பகுதியைச் சேதப்படுத்தியுள்ளனர் என்றும் அந்த் தகவல்கள் தெரிவிக்கின்றன.

பாரிசில் புலிகளின் தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் முக்கியஸ்த்தர் பருதி மீது கத்திக் குத்து!

Monday, October 31, 2011
புலிகளின் தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் (TCC) முக்கியஸ்த்தரான பரிதி பிரான்சில் இனந்தெரியாத நபர்களினால் கத்திக் குத்துக்கு உள்ளாகியுள்ளார். நேற்றைய தினம் (ஞாயிறு) இரவு இவர் அலுவலகத்தில் இருந்து வெளியே வரும் வேளை அங்கே காத்திருந்த சிலர் இவரை கத்தியால் வெட்டியும் குத்தியும் உள்ளனர். மிகவும் ஆபத்தான நிலையில் அவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளன.

அண்மையில் புலிகளின் இரு தரப்பினரிடையே உருவாகியிருக்கும் முரண்பாடுகளின் உச்சக்கட்டமாகவே இக் கொலை முயற்சி இடம்பெற்றுள்ளதாகக்; கூறப்படுகிறது. புலம்பெயர் நாடுகளில் புலிகளின் தமிழர் ஒருங்கிணைப்புக் குழு என்னும் கடந்த பல வருடங்களாக இயங்கிவருகின்றது. அதில் பணி புரியும் தமிழ் செயற்பாட்டாளர்கள் பலர் கடந்த சில மாதங்களாகத் தாக்கப்பட்டு வருகின்றனர். பிரித்தானியாவின்; செயல்பாட்டாளர்களில் ஒருவரான தனம் சில மாதங்களுக்கு முன்னர் தாக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

கூட்டமைப்புக்கும் ஐ.நா.பொதுச் செயலாளர் பான் கீமூனுக்கும் இடையிலான சந்திப்பு திட்டமிட்டபடி நாளை நியூயோர்க்கில் இடம்பெறும் என தகவல்கள் வெளியாகி உள்ளன!

Monday, October 31, 2011
தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் ஐ.நா. பொதுச் செயலாளர் பான் கீமூனுக்கும் இடையிலான சந்திப்பு திட்டமிட்டபடி நாளை முதலாம் திகதி நியூயோர்க்கில் இடம்பெறும் என தகவல்கள் வெளியாகி உள்ளன. இலங்கை அரசாங்கம் இந்தச் சந்திப்புக்கு தனது அதிர்ப்த்தியை தெரிவித்தபோதும் திட்டமிட்ட சந்திப்பை இரத்துச் செய்ய முடியாது என்று பான் கீமூன் இலங்கை அரச பிரதிநிதிகளிடம் தெரி வித்திருப்பதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் தற்போது கனடாவில் தங்கியுள்ள கூட் டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் பான் கீமூனைச் சந்தித்துப் பேச்சு நடத்துவார் என கூட்டமைப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த சந்திப்புக்கள் தொடர்பாக இலங்கை வெளிவிவகார அமைச்சருக்கோ ஐ.நாவின் இலங்கைக்கான தூதுவர் பாலித கொஹன்னவுக்கோ இந்தச் சந்திப்புத் தொடர்பாக தெரிவிக்கப்பட்டு இருக்கவில்லை.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை பான் கீ மூன் சந்திப்பதற்கு ஐ.நாவுக்கான இலங்கைத் தூதுவர் பாலித கொஹன்ன எதிர்ப்புத் தெரிவித்துள்ளார். கடந்த வாரம் ஐ.நா பொதுச்செயலர் பான் கீ மூனைச் சந்தித்த இலங்கை ஜனாதிபதியின் சிறப்புத் தூதுவர் அமைச்சர் மகிந்த சமரசிங்கவும் இது தொடர்பான நிலைப்பாட்டை முன்கூட்டியே தெளிவுபடுத்தியுள்ளார்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தமிழ் மக்களின் ஒரே பிரதிநிதிகள் அல்லர் என்றும் ஏனைய தமிழ்க் கட்சிகளும் அங்கிருப்பதாகவும் அவர் பான் கீமூனுக்கு எடுத்துக் கூறி இதன் காரணமாகத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைப் பான் கீமூன் சந்திக்கக் கூடாது எனவும் வலியுறுத்தி இருந்தார்.

இதேவேளை, நியூயோர்க்கில் ஐ.நா.மனித உரிமைகள் ஆணையாளர் நவிப்பிள்ளை (நவநீதம்பிள்ளை) உட்பட ஐ.நா. உயரதிகாரிகள் பலரையும் கூட்டமைப்புப் பிரதிநிதிகள் சந்தித்துத் தமிழ்மக்களின் தற்போதைய நிலை தொடர்பில் விரிவாக விளக்குவர் என உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் தெரிவிக்கின்றன.

சென்னை வங்கிக் கொள்ளை - இலங்கைத் தமிழர்களைப் பிடிக்க இன்டர் போலை நாடியது தமிழக காவற்துறை!

Monday, October 31, 2011
சென்னையில் பல்வேறு தனியார், அரசு வங்கிகள் ஏடிஎம் மையங்களை அமைத்துள்ளன. இந்த மையங்களில் பணம் எடுக்கும் வாடிக்கையாளர்களின் பாஸ்வேர்ட்களை திருடி போலி அட்டைகளைத் தயாரித்து பண மோசடி செய்வது தொடர்பாக தமிழக போலீஸ் இரண்டு தனிப்படைகளை அமைத்து குற்றவாளிகளைத் தேடிவருகின்றனர். நவீன முறையில் நடந்து வரும் இந்த சைபர் குற்றச் செயலால் வங்கிகளில் போட்டு வைத்திருக்கும் பணத்திற்கு உத்தரவாதம் இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது. இந்த திருட்டால் வங்கிகளில் பணம் போட்டு வைத்திருப்போர் அவற்றைப் பறி கொடுக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.இந்த கும்பலைச் சேர்ந்த 3 பேரை இதுவரை போலீஸார் கைது செய்துள்ளனர். இதில் ஒருவர் இலங்கையைச் சேர்ந்தவர்.

கைது செய்யப்பட்டர்களிடம் நடத்திய விசாரணையில் இந்தக் குழுவினர் உலக நாடுகள் பலவற்றிலும் குறிப்பாக ஐய்ரோப்பிய நாடுகளில் உள்ள வங்கிகளிலும், பெட்ரோல் நிலையங்கள் உள்ளிட்ட பல இடங்களில் இம்மாதிரியான மோசடிகளைச் செய்வது கண்டறியப்பட்டுள்ளது. இந்த கும்பலிடம் பணம் பறிகொடுத்த வகையில் சுமார் 150 பேர் வரை புகார் கொடுத்துள்ளனர். ஆனால் புகார்களின் எண்ணிக்கை தினசரி அதிகரித்து வருவதால் ஏடிஎம் கொள்ளைக் கும்பல் பெருமளவில் நகரில் நடமாடுவதாக காவற்துறையினர் அஞ்சுகிறார்கள்.

இதையடுத்து வாடிக்கையாளர்கள் தங்களது கார்டுகளை ஏடிஎம் மையங்களில் பயன்படுத்தும்போது மிகவும் கவனமாக இருக்குமாறு அவர்கள் எச்சரித்துள்ளனர். இந்தக் கும்பலின் தலைவனாக செயல்படுபவர் ஒரு இலங்கைத் தமிழர் என்று நம்பப்படுகிறது. இவர் ஐரோப்பிய நாடொன்றில் இருந்து இக்குழுவை இயக்குவதாக செய்திகள் கசிந்துள்ள நிலையில் இவரைப் பிடிக்க இண்டர்போலின் உதவியை நாடியுள்ளனர் தமிழக காவற்துறையினர்.

நெல்லை கோவில்களில் ராஜபக்சேவின் சகோதரி கணவர் வழிபாடு!

Monday, October 31, 2011
நெல்லை: நெல்லை மாவட்டத்திற்கு வந்துள்ள ராஜபக்சேவின் சகோதரி கணவர் திருக்குமரன் நடேசன் அங்குள்ள கோவில்களுக்குச் சென்று பயபக்தியுடன் சாமி கும்பிட்டார்.

ராஜபக்சேவின் ஒன்று விட்ட சகோதரி நிரூபமா. இவரது கணவர்தான் திருக்குமரன் நடேசன். இவர் தனது குடும்பத்தினர், நண்பர்கள், உறவினர்களோடு அவ்வப்போது தமிழகம் வந்து சாமி கும்பிட்டுச் செல்வது வழக்கம்.

அதன்படி தற்போதும் அவர் நெல்லை வந்துள்ளார். பாபநாசம் சிவன்கோவில் மற்றும் அகஸ்தியர் தீர்த்த அருவிப் பகுதியில் உள்ள முருகன் கோவிலுக்கு அவர் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த பெண்கள் உள்ளிட்ட நண்பர்களுடன் வந்து சாமி கும்பிட்டார். சிறப்பு ஆராதனை மற்றும் அபிஷேகம் செய்யப்பட்டது.

பின்னர் வெளியே வந்த அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், கடந்த 25 வருடமாக திருச்செந்தூரில் நடைபெறும் கந்த சஷ்டி விழாவில் நாங்கள் பங்கேற்று வருகிறோம். மேலும் இது அரசியல் பயணமல்ல, ஆன்மீக பயணம் மட்டுமே என்று கூறிவிட்டுக் கிளம்பினார்.

புலிகள் கூட்டம் பண்ணும் அட்டகாசம்! ராஜீவ் கொலையாளிகள் சாந்தன், பேரறிவாளன், முருகன் ஆசைகள் என்ன? ருசிகர தகவல்கள்!

Monday, October 31, 2011
ராஜீவ் கொலை வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்ட முருகன், சாந்தன், பேரறிவாளன். ஆகிய 3 பேரும் வேலூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்கு கடந்த மாதம் 9-ந்தேதி தண்டனையை நிறைவேற்ற முடிவாகி இருந்தது.

ஆனால் சென்னை ஐகோர்ட்டில் மனுதாக்கல் செய்யப்பட்டு, தண்டனையை நிறைவேற்ற தடை பெறப்பட்டது. கருணை மனு மீது முடிவு எடுக்க நீண்ட காலதாமதம் ஆகியுள்ளது. சிறையில் 20 ஆண்டுகளை கழித்து விட்டோம். எனவே எங்களுக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனையை ரத்து செய்ய வேண்டும் என்று இவர்கள் தரப்பில் கோரப்பட்டுள்ளது.

இந்த மனு மீது ஐகோர்ட்டில் விசாரணை நடந்து வருகிறது. இந்த வழக்கில் தங்களுக்கு சாதகமாக தீர்ப்பு வரும். சிறையில் இருந்து வெளியேறி சமூகத்துடன் இணைந்து மகிழ்ச்சியாக வாழப்போகிறோம் என்ற நம்பிக்கையில் அவர்கள் உள்ளனர். இவர்களிடம் இப்போது எந்த சலனமும் காணப்படவில்லை.

வேலூர் சிறையில் இவர்கள் 3 பேருக்கும் தனித்தனியே வேலைகள் ஒதுக்கப்பட்டுள்ளன. சிறை வளாகத்தில் உள்ள கோவிலில் சாந்தன் பூசாரியாக உள்ளார். மற்ற கைதிகளுக்கு யோகாவும், தியானமும் கற்றுத் தருகிறார். சிறையில் இருந்தபடியே எம்.சி.ஏ. படித்து முடித்துள்ள பேரறிவாளன், கைதிகளுக்கு கம்ப்யூட்டர் பாடம் நடத்துகிறார். அங்குள்ள லைப்ரரியையும் பராமரித்து வருகிறார்.

முருகன் விளையாட்டு வீரர் என்பதால், சக கைதிகளுடன் சேர்ந்து கைப்பந்து மற்றும் பிற விளையாட்டுகளை விளையாடி வருகிறார்.

சிறையில் இருந்து விடுதலை கிடைத்து விடும் என்ற நம்பிக்கை கொண்டுள்ள இவர்கள், ஆளுக்கொரு ஆசையை வைத்துள்ளனர்.

முருகன் கூறியதாவது:-

எங்களுக்கு செப்டம்பர் 9-ந்தேதி தூக்கு தண்டனை நிறைவேற்றுவதாக இருந்தது. இதற்கு சென்னை ஐகோர்ட்டு தடை விதித்தது. இதன் மூலம் எங்களுக்கு புதிய நம்பிக்கை பிறந்துள்ளது. நாங்கள் மூவரும் விடுதலை ஆவோம் என்ற நம்பிக்கை உள்ளது.

எங்களுக்கு நிறைவேற்றப்பட இருந்த தூக்கு தண்டனைக்கு சென்னை ஐகோர்ட்டு தடை விதித்ததும், சக கைதிகள் எங்களை கட்டிப்பிடித்து ஆனந்த கண்ணீர் படித்து, மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். நாங்கள் இப்போது உயிர் பிழைத்துள்ளோம். ஒருநாள் எங்களுக்கு விடிவு பிறக்கும். நாங்கள் சுதந்திர காற்றை சுவாசிப்போம் என்று உறுதியாக நம்புகிறோம்.

நான் இலங்கை பிரஜை என்ற போதிலும், மதுரை மீனாட்சி அம்மனின் பக்தன் ஆவேன். சிறையில் இருந்து விடுதலை ஆனதும் மனைவி நளினியுடன் மதுரை சென்று மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவிலுக்கு சென்று சாமி கும்பிடுவேன். யாழ்ப்பாணத்தில் உள்ள எங்களது குல தெய்வம் கோவிலுக்கு செல்லவும் விருப்பம் உள்ளது.

ஒரு பெண்ணுக்கு கணவனாகவும், குழந்தைக்கு தந்தையாகவும் இருப்பதால் நிறைவேற்ற வேண்டிய கடமைகள் நிறைய உள்ளன. கடந்த 20 வருடங்களாக பெற்றோரின் பாசமும், பராமரிப்பும் இன்றி எங்கள் மகள் வளர்கிறாள். விரைவில் நாங்கள் ஒன்றாக இணைவோம் என்ற நம்பிக்கை உள்ளது. இவ்வாறு முருகன் கூறினார்.

சாந்தன் கூறியதாவது:- சிறையில் உள்ள கோவிலில் பூசாரியாக இருக்கும் நான், ஆன்மீகத்தில் அதிக நாட்டம் கொண்டுள்ளேன். விடுதலை கிடைத்ததும், நேராக இமயமலை செல்வேன். ஆன்மீக வழியை தேர்வு செய்து மக்களுக்கு ஆன்மீகப் பணியாற்றுவேன். மரண பயத்தை போக்கி மன உறுதியை எனக்கு தந்தது ஆன்மீகம்தான்.

ஷீரடி சாய்பாபாவின் பக்தன் நான். முதலில் ஷீரடிதான் செல்வேன். எனக்கு குடும்பம் என்று எதுவும் கிடையாது. எனது பெற்றோரும் எங்கு இருக்கிறார்கள்? உயிருடன் உள்ளார்களா? என்று எனக்கு உறுதியாக தெரியவில்லை. எனவே சொந்த நாட்டுக்கு (இலங்கை) செல்லும் திட்டம் எதுவும் இல்லை.

இவ்வாறு சாந்தன் தெரிவித்தார்.

பேரறிவாளன் கூறுகையில், நான் வீடு திரும்ப வேண்டும் என்று என்னைவிட என் அம்மாதான் மிகவும் ஆவலுடன் எதிர்பார்ப்புடன் உள்ளார். அவரது ஆசை நிறைவேறும் என்ற நம்பிக்கை உள்ளது. வெளியில் வந்த உடன் சிறையில் கற்ற கல்வியை கொண்டு ஏழைகளுக்கு உதவி செய்ய ஆசைப்படுகிறேன்.

உலகில் மரண தண்டனை ஒழிக்கப்பட வேண்டும். இதற்காக போராட்டங்கள் நடந்து வருகின்றன. இந்த இயக்கத்தில் இணைந்து மரண தண்டனைக்கு எதிராக நானும் போராடுவேன் என்றார்.

எங்கள் விடுதலைக்கும், மரண தண்டனை ஒழிப்புக்கும் முதல்-அமைச்சர் ஜெயலலிதா நடவடிக்கை எடுப்பார் என்று நம்புகிறோம் என்று 3 பேரும் கூறினார்.

Monday, October 31,2011 ஆனந்த் said:

நீங்கள் செய்த பாக்கியம் இந்தியாவில் சிறை பெற்றதுதான் இதே அரபு நாடுகளாக இருந்திருந்தால், இன்று புத்தன் போல பேச நீங்கள் இருந்து இருக்க மாட்டீர்கள். நீங்கள் செய்தது இமாலய தவறு அதற்கு மரணம் ஒன்றே தீர்வு. இத்தனை நாள் நீங்கள் சிறையில் இருந்தேன் என்பது உங்கள் அதிர்ஷ்டம் நீங்கள் சிறையில் என்ன கிழித்தீர்கள் என்பது தான் உங்கள் வாயாலேயே சொல்லிவிட்டீர்களே ! இதில் வெளியே வந்து வேறு கிழிக்கனுமா ?
இவர்களை தூக்கிலிட என் ஆவி துடிக்கிறது .....

7 இலட்சம் ரூபாய் பெறுமதியான மூக்குக்ண்ணாடிகள் யுத்தப்பாதிப்பு மக்களுக்கு வினியோகம்!

Monday, October 31, 2011
போர்ச்சூழல் மற்றும் இயற்கை அனர்த்தங்கள் காரணைமாகப்பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுக்கு ஸ்ரீலங்காசுதந்திரகட்சியின் அனுசரணையுடன் கொழும்பு 306 லயன்ஸ் கழகத்தின் ஏற்பாட்டில் இலவச மூக்குக்கண்னாடிகள் இன்று காலை வினியோகிக்கப்பட்டன.

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் கல்குடா தொகுதி அமைப்பாளர் கலாநிதி டி.எம்.சந்திரபாலவின் வேண்டுகோளின் பேரில் 150 பேருக்கு சுமார் 7 இலட்சம் ரூபாய் பெறுமதியான மூக்குகண்ணாடிகள் பகிர்ந்தளிக்கப்பட்டன.

மட்டக்களப்பு வந்தாறுமூலை வெம்பு அரசினர் தமிழ் கலவன் பாடசாலையில் கலாநிதி டி.எம்.சந்திரபால தலைமையில் நடைபெற்ற வைபவத்தில் கொழும்பு 306 லயன்ஸ் கழக தலைவர் பிரியந்த ஜெயசிங்க பொருளாளர் ஸ்ரீநாத் ரணதுங்க இலங்கை மனித உரிமைகள் சமாதான நீதவான்கள் அமைப்பின் கிழக்கு மாகாண அமைப்பாளர் ரீ.எல் ஜவ்பர்கான் உட்பட பலர் கலந்து கொண்டனர். தலா 4500 ரூபாய் பெறுமதியான மூக்குக்கண்ணாடிகளே இவ்வாறு பகிந்தளிக்கப்படமை குறிப்படத்தக்கது.

பிலிப்பைன்ஸில் 700வது கோடி குழந்தை பிறப்பு!.

Monday, October 31, 2011
உலகின் 700வது கோடி குழந்தை இன்று உத்திர பிரதேச தலைநகர் லக்னோ அருகே பிறக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், பிலிப்பைன்ஸ் நாட்டில் அது பிறந்துள்ளது. மணிலாவில் உள்ள அரசு மருத்துவமனையில் இந்த பெண் குழந்தை இன்று பிறந்தது. இக்குழந்தைக்கு டேனிகா மே கமாச்சோ என்று பெயரிட்டுள்ளனர் இக்குழந்தைப் பிறப்பையடுத்து மருத்துவமனையில் பத்திரிக்கையாளர்கள் திரண்டனர்.

குழந்தை பிறந்ததும் ஐ.நா. அதிகாரிகள் குழு ஒன்று டேனிகாவின் பெற்றோரை சந்தித்து முறைப்படி இது 700வது கோடி குழந்தை என்று கூறி பரிசாக ஒரு சின்ன கேக்கையும் வழங்கி வாழ்த்தினர். மேலும் உத்திர பிரதேச மாநிலம் பக்பத் மாவட்டத்திலும் இதே சமயத்தில் ஒரு குழந்தை பிறந்துள்ளது. பக்பத் மாவட்டத்தில் உள்ள சுன்ஹேதா என்ற கிராமத்தைச் சேர்ந்த சச்சின், பிங்கி சர்கார் தம்பதிக்கு இன்று இக்குழந்தை பிறந்துள்ளது. இந்தக் குழந்தையும், பிலிப்பைன்ஸில் பிறந்த குழந்தையும் உலகின் 700வது கோடி குழந்தைகள் என்ற பெருமையைப் சமமாக பெறுகின்றன.

மனிதன் தோன்றி பல ஆயிரம் ஆண்டுகள் ஆகின்றன. எனினும், கடந்த 1805ம் ஆண்டில்தான் உலக மக்கள் தொகை 100 கோடியை எட்டியது. ஆனால், அடுத்த 122 ஆண்டில் (1927) 200 கோடியை எட்டியது. அதன்பிறகு 32 ஆண்டில் (1959) 300 கோடியையும்,14 ஆண்டில் (1974) 400 கோடியையும், 13 ஆண்டில் (1987) 500 கோடியையும், 12 ஆண்டில் (1999) 600 கோடியையும் எட்டியது. கடந்த 100 ஆண்டில் மட்டும் 5 மடங்கு அதிகரித்துள்ளது. இந்நிலையில், இன்று உலக மக்கள் தொகை 700 கோடியை எட்டும் என ஐ.நா.சபை தெரிவித்துள்ளது. தினமும் சராசரியாக குழந்தை பிறக்கும் அளவை கருத்தில் கொண்டு இந்த மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது.

700 கோடியாவது குழந்தை எங்கு பிறக்கும் என்பதை துல்லியமாக சொல்ல முடியாது. எனினும், இந்தியாவின் உத்தரப் பிரதேச மாநிலத்தில் பிறக்க வாய்ப்பு உள்ளதாக பிளான் இன்டர்நேஷனல் தெரிவித்துள்ளது. நாட்டின் அதிக மக்கள் தொகை கொண்ட மாநிலமாக இது விளங்குகிறது. அதாவது பிரிட்டன், பிரான்ஸ் மற்றும் ஜெர்மனி ஆகிய மூன்று நாடுகளின் மக்கள் தொகைக்கு சமம் ஆகும்.

மக்கள் தொகை பெருக்கத்தைக் குறைக்க உலக நாடுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருவதால் இனி மக்கள் தொகை வளர்ச்சி வேகம் குறையும் என ஐ.நா. சபை மதிப்பீடு செய்துள்ளது. அந்த வகையில் 800 கோடியை தொட 14 ஆண்டுகள் (2025) ஆகும். 900 கோடியை தொட 25 ஆண்டுகளும் (2050) 1000 கோடியை தொட 50 ஆண்டுகளும் (2100) ஆகும் என கணிக்கப்பட்டுள்ளது.

இராணுவத்தைச் சேர்ந்த இருவர் கைது!

Monday, October 31, 2011
மாத்தளை தொடகமுவ பகுதியில் ஏழு இலட்ச ரூபா பணத்தை கொள்ளையிட்ட சம்பவத்துடன் தொடர்புடையதாகக் கூறப்படும் இரணுவத்தைச் சேர்ந்த இருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

தொடகமுவ பகுதியிலுள்ள ஹோட்டல் ஒன்றில் தங்கியிருந்த பெண்ணொருவர் வங்கியிலிருந்து பணத்தை எடுத்துக்கொண்டு வரும்போது சந்தேகநபர்களால் குறித்த பணம் கொள்ளையிடப்பட்டதாக பொலிஸார் குறிப்பிடுகின்றனர்.

சந்தேகநபர்கள் குறித்த பெண்ணை அச்சுறுத்தி பணத்தை கொள்ளையிட்டுச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

21 ஆவது நூற்றாண்டில் பயங்கரவாதத்தை முழு அளவில் தோல்வியடையச் செய்த ஒரே இராணுவம் இலங்கை இராணுவமேயாகும்-ஜகத் ஜயசூரிய!

Monday, October 31, 2011
பன்னாட்டு இராணுவங்களின் சவால்களுக்கு முகம் கொடுக்கும் வகையில் இலங்கை இராணுவமும் வலுப்படுத்தப்பட வேண்டும். அப்போது தான் நாட்டினதும் பொது மக்களினதும் பாதுகாப்பை எதிர்வரும் காலங்களில் உறுதிப்படுத்த முடியும் என்று இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் ஜகத் ஜயசூரிய தெரிவித்தார்.

சர்வதேசத்தின் சவால்கள் எப்பெரிதாயினும் அதனை எதிர்கொள்ளக் கூடிய திறனும் ஆளுமையும் எமக்கு உண்டு. ஏனெனில் 21 ஆவது நூற்றாண்டில் பயங்கரவாதத்தை முழு அளவில் தோல்வியடையச் செய்த ஒரே இராணுவம் இலங்கை இராணுவமேயாகும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

இராணுவ கற்கைகளுக்கான டிப்ளோமா சான்றிதழ் வழங்கும் நிகழ்வு நேற்று முன்தினம் தியத்தலாவை இராணுவ பயிற்சி முகாமில் நடைபெற்றது. இதன் போது உரையாற்றுகையிலேயே இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் ஜகத் ஜயசூரிய மேற்கண்டவாறு கூறினார். இவர் இங்கு தொடர்ந்தும் உரையாற்றுகையில்,

சிறந்த நெறியாக்களுடன் வடக்கில் மனிதாபிமான நடவடிக்கைகளை முன்னெடுத்து உலகத்தில் மிகவும் ஆபத்தானதாக கருதப்பட்ட பயங்கரவாதத்தை முழு அளவில் தோல்வியடையச் செய்தோம். இதனூடாக இலங்கை இராணுவம் உலகத்தின் ஏனைய இராணுவங்களை விட சிறந்ததாகவே உள்ளது. அது மட்டுமன்றி 21 ஆவது நூற்றாண்டில் பயங்கரவாதத்தை ஒழித்த முதல் இராணுவமும் இலங்கை இராணுவமேயாகும்.

எவ்வாறாயினும் தற்போதைய தேவைகள் மற்றம் இலக்குகளுக்காக இராணுவத்தை பல் துறைகளிலும் தேர்ச்சியடையச் செய்ய வேண்டியதுள்ளது. நாட்டின் பொருளாதார அபிவிருத்தி மற்றும் கட்டுமாணப் பணிகள் உட்பட பல வேளைகளில் இராணுவம் சிறந்த பங்களிப்புக்களை மேற்கொண்டு வருகின்றது. புதிய சவால்களுக்கு முகம் கொடுக்கும் வகையில் விஷேடமாக பயிற்சிகளை இலங்கை இராணுவத்திற்கு வழங்கப்பட வேண்டும். இதற்கான நடவடிக்கைகள் தற்போது முன்னெடுக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக பன்னாட்டு இராணுவங்களின் சவால்களை ஏற்கக் கூடியளவிற்கும் அவர்களுடன் சரி நிகராக, செயற்படக் கூடியளவிற்கும் எமது இராணுவம் தேர்ச்சியடைய வேண்டும். ஏனெனில் எதிர்கால சவால்களும் உலக சூழலும் அவ்வாறே அமைந்துள்ளது. எப்போதும் நாட்டினதும் பொதுமக்களினதும் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் நிலையில் இராணுவம் காணப்பட வேண்டும்.

சவால்கள் எப்பெரிதாயினும் உயிரை இரண்டாவதாக நினைத்து நாட்டிற்கும் மக்களிற்கும் முதலிடம் கொடுக்கும் மகத்தான இராணுவமே இலங்கையில் உள்ளது. இதனால் தான் ஏனைய நாடுகளின் இராணுவம் இலங்கை இராணுவம் மீது மரியாதையுடன் உள்ளது என்றும் கூறினார்.

லிபியாவில் ஏற்பட்டது போன்ற அசாதாரண சூழ்நிலையை இலங்கையிலும் கூட்டமைப்பு முயற்சி முன்னெடுத்து வருகின்றது-எல்லாவல மேதானந்ததேரர்!

Monday, October 31, 2011
லிபியாவில் ஏற்பட்டது போன்ற அசாதாரண சூழ்நிலையை இலங்கையிலும் தோற்றுவித்து அதனால் ஏற்படும் பாதகமான விளைவுகளைத் தனது கோரக்கண்களால் பார்த்து ரசிப்பதற்கான சதிமுயற்சிகளை தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு முனைப்புடன் முன்னெடுத்து வருகின்றது.

இவ்வாறு குற்றம்சாட்டியுள்ளார் ஜாதிக ஹெல உறுமயவின் முன்னாள் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான எல்லாவல மேதானந்ததேரர்.எமது சகோதரர்களான தமிழ் மக்களை நேசக்கரம் நீட்டி நாம் அரவணைக்க முயற்சி க்கையில், எம்மிடமிருந்து அவர்களைப் பிரித்து மீண்டும் இருண்ட யுகத்துக்கு அழைத்துச் செல்வதற்குத் தமிழ்த் தேசியக் கூட்ட மைப்பினர் முயற்சிக்கின்றனர் என்றும் அவர் கூறினார்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எம்.பிக்களின் வெளிநாட்டு விஜயம், சமகால அரசியல் விவகாரம் என்பன தொடர்பாகக் கருத்து வெளியிட்டபோதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் மேலும் கூறியவை வருமாறு:

வடக்கு, கிழக்கு மாகாணங்களில் வாழும் மக்கள் ஜனநாயகக் காற்றைச் சுதந்திரமாக சுவாசிப்பதற்கு அரசு வழிசமைத்துக் கொடுத்துள்ளது. அதேபோன்று, தீவிரவாதிகளிடமிருந்து எம் சகோதரர்களை மீட்டு நல்வழியில் இட்டுச்செல்லும் நடவடிக் கைகளையும் அரசு இதய சுத்தியுடன் முன்னெடுத்துள்ளது.வடக்கு, கிழக்கில் சுதந்திரமாக இன்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அரசியல் நடவடிக்கைகளை முன்னெடுக்கின்றது.ஆனால், அவ்வாறானதொரு சூழ்நிலையை சுதந்திரத்தை யார் பெற்றுக்கொடுத்தனர் என்பதை அவர்கள் மறந்துவிட்டனர். உள்நாட்டில் பேசித்தீர்க்க வேண்டிய விடயங்களை சர்வ தேசமயப்படுத்துவதற்கு கூட்டமைப்பினர் முயற்சிக்கின்றனர்.

அவர்கள் இலங்கைக்கு எதி ரானவர்களுடன் இணைந்து செயற்படுகின்றனர். இவர் களின் இந்தக் குரோதப்போக்கு டைய நடவடிக்கைகளை உற்று நோக்கிப் பார்த்தால் லிபியாவில் ஏற்பட்டதொரு அசாதாரண சூழ்நிலையை இலங்கையிலும் தோற்றுவிக்கவே முயற்சிக் கின்றனர் என்பது தெட்டத் தெளிவாகத் தென்படுகின்றது.இலங்கைக்கு எதிராக இன்று சர்வதேச ரீதியில் சூழ்ச்சிகள் மேற் கொள்ளப்பட்டு வருகின்றன.இலங்கையில் மீறப்பட்டதா கக் கூறப்படும் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் அறிக்கை தயாரித்த தருஸ்மன் குழுவி னர், அதேபோன்று போலி ஆதா ரங்களை வைத்துக்கொண்டு கற்பனையில் ஆவணப்படம் தயாரித்த சனல் 4 தொலைக் காட்சி நிறுவனப் பிரதிநிதிகள் ஆகியோர் லிபிய நாட்டு ஜனாதி பதி கடாபிபோல் சுட்டுப் படு கொலை செய்யப்பட்ட சம்பவத் தைப் பார்த்ததும் மௌனிப்பது ஏன்? இலங்கைக்கு ஒரு சட்டமும், லிபியாவுக்கு இன்னு மொரு சட்டமுமா? இதிலிருந்தே சர்வதேச சூழ்ச்சிகள் அம்பலமா கியுள்ளன.

லிபிய ஜனாதிபதி கடாபி, தீவிரவாதி ஒஸாமா பின்லேடன் அல்லர் என்பதைப் புரிந்து கொண்டு நேட்டோப் படைகள் செயற்பட்டிருக்க வேண்டும். அவர்கள் அவ்வாறு செய்ய வில்லை. இவ்வாறு இலங்கைக்கு எதிராக சதித்திட்டங்களை வகுப் பவர்களுக்கு கூட்டமைப்பினர் வால் பிடிக்கின்றனர். இதனால் எந்தவித மாற்றமும் ஏற்படப்போவதில்லை. என்றார் அவர்.

புலிகளின் சர்வதேச செயல்பாட்டாளர்களின் மற்றுமொரு காணொளியை இலங்கைப் பாதுகாப்பு அமைச்சு வெளியிட்டுள்ளது!

Monday, October 31, 2011
புலிகளின் சர்வதேச செயல்பாட்டாளர்களின் மற்றுமொரு காணொளியை இலங்கைப் பாதுகாப்பு அமைச்சு வெளியிட்டுள்ளது:

www.defence.lk/new.asp?fname=20111027_ABC

புலிகளின் சர்வதேச செயல்பாட்டாளர்கள் குறித்து இலங்கைப் பாதுகாப்பு அமைச்சு மற்றுமொரு காண் ஒளிப்படத்தை வெளியிட்டுள்ளது.

அஸ்திரேலியாவில் வாழும் மீனா கிருஸ்ண மூர்த்தி அல்லது ஈழநதி என்பவரை மையப்படுத்தி இந்தக் காணொளி உருவாக்கப்பட்டுள்ளது.

12 நிமிட காட்சிகளை கொண்ட இந்தக் காணொளி புலி ஆதரவாளர்களும் புலிகளின் செயற்பாட்டாளர்களும் சர்வதேச மட்டத்தில் இலங்கை அரசிற்கு எதிராக போலியான பிரச்சாரங்களையும் சதித் திட்டங்களையும் மேற்கொள்வதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கைக்கு எதிராகச் செயற்படுவதனையும் கண்டனங்கள் தெரிவிப்பதனையும் கனேடிய அரசு உடனடியாக நிறுத்திக் கொள்ள வேண்டும்-ஜீ. எல்.பீரிஸ்!

Monday, October 31, 2011
இலங்கைக்கு எதிராகச் செயற்படுவதனையும் கண்டனங்கள் தெரிவிப்பதனையும் கனேடிய அரசு உடனடியாக நிறுத்திக் கொள்ள வேண்டும் என்று இலங்கை வெளிவிவகார அமைச்சர் ஜீ. எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.அடுத்த பொதுநலவாய நாடுகளின் உச்சி மாநாட்டை நடத்துவதற்கு முன்னர் இலங்கை தன்மீதான குற்றச்சாட்டுகளுக்குப் பதிலளிக்க வேண்டுமென கனேடியப் பிரதமர் ஸ்டீபன் ஹார்ப்பர் வலியுறுத்தியதனையடுத்தே அமைச்சர் ஜீ.எல். பீரிஸ் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இலங்கையில் போர் குற்றம் இடம்பெற்றதாக அபத்தமான குற்றச்சாட்டை முன்வைத்துள்ள ஐநா நிபுணர் குழு அறிக்கைக்கும் கண்டனத்தை தெரிவித்துள்ள பீரிஸ், எது எப்படியிருப்பினும் அடுத்த பொதுநலவாய நாடுகளின் உச்சிமாநாடு இலங்கையில் இடம்பெறும் என்பதை உறுதிப்படுத்தியுள்ளார்.

இதேவேளை, 2013ஆம் ஆண்டு பொது நலவாய நாடுகளின் 23 ஆவது அரச தலைவர்களின் மாநாடு இலங்கையில் நடைபெறுமென உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

பொதுநலவாய உச்சிமாநாடு இலங்கைக்கு மும்முனைகளில் பாரிய இராஜதந்திர வெற்றியைப் பெற்றுக்கொடுத்துள்ளது-ஜீ.எல். பீரிஸ்!

Monday, October 31, 2011
பொதுநலவாய உச்சிமாநாடு இலங்கைக்கு மும்முனைகளில் பாரிய இராஜதந்திர வெற்றியைப் பெற்றுக்கொடுத்துள்ளது. உச்சிமாநாட்டில் இலங்கைக்கு எதிராகக் கொண்டுவரப்பட்ட பல்வேறு நெருக்கடிகளும் சாதூர்யமாக முறியடிக்கப்பட்டு பாரிய இராஜதந்திர ரீதியிலான வெற்றியை நிலைநாட்டியுள்ளதென அமைச்சர் ஜீ.எல். பீரிஸ் தெரிவித்தார்.

பொதுநலவாய உச்சிமாநாடு நேற்று அவுஸ்திரேலியாவின் பேர்த் நகரில் நிறைவு பெற்றது.

அடுத்த இந்த மாநாட்டில் பொதுநலவாய உச்சிமாநாட்டை 2013 ஆம் ஆண்டு இலங்கையில் நடத்துவதற்குத் தீர்மானிக்கப்பட்டது. ஏற்கனவே எடுக்கப்பட்டிருந்த தீர்மானத்திற்கு மாநாட்டுத் தலைவர்கள் நேற்று அங்கீகாரம் வழங்கினர். அதேநேரம், 2015 ஆம் ஆண்டு மாநாட்டை மொaசியசிலும் 2019 ஆம் ஆண்டு மாநாட்டை மலேசியாவிலும் நடத்துவதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளது. மாநாட்டின் முடிவில் மூன்று பத்திரிகைகளின் ஆசிரியர்களைச் சந்தித்த அமைச்சர் ஜீ.எல். பீரிஸ் மேலும் கூறியதாவது: இலங்கையின் நட்புறவு நாடுகளின் ஒத்துழைப்புக்கள் எங்கள் நாட்டின் நற்பெயருக்கு தீங்கிழைப்பதற்கு எடுத்த முயற்சிகள் அனைத்தும் முறியடிக்கப்பட்டன என்று கூறினார். இலங்கையின் கருத்துக்களை செவிமடுத்த பொதுநலவாய அமைப்பு நாடுகளின் தலைவர்கள், இலங்கையின் உண்மை நிலையைப் புரிந்துகொண்டதோடு நாட்டுத் தலைவருக்கு பெரும் மதிப்பையும், கெளரவத்தையும் வழங்கியிருப்பது நாம் பெற்ற பெரும் வெற்றியென்று பேராசிரியர் பீரிஸ் தெரிவித்தார்.

இலங்கையின் மனித உரிமை நிலவரம் குறித்து கனடா அரசாங்கம் எழுப்பிய கேள்விகளுக்கு எங்கள் நாட்டை ஆதரிக்கும் 15 நாடுகளின் உதவியுடன் பொதுநல அமைப்பு அமைச்சர்கள் நடவடிக்கைக் குழுக்கூட்டத்தில் நாம் தக்க பதிலடியை கொடுத்தோம் என்று அவர் கூறினார்.

உச்சிமாநாட்டின் இறுதி மூன்றாவது கூட்டத்தொடரில் பொதுநலவாய நாடு களின் வெளிவிவகார அமைச்சர்கள் கூட் டத்தில் கனடிய வெளிவிவகார அமைச்சர் ஜோன் பேர்ட், மனித உரிமைகள் விட யத்தில் இலங்கைக்கு எதிராக கண்டனக் குரல் எழுப்ப எத்தனித்தார். அதற்கு நான் கண்டனத்தையும், எதிர்ப்பையும் தெரிவித்தேன் என்று பேராசிரியர் பீரிஸ் மேலும் தெரிவித்தார்.

கனடிய வெளிவிவகார அமைச்சர் பொதுநல அமைப்பு உச்சிமாநாட்டை அரசியல் மயப்படுத்துவதற்கு எடுத்த முயற்சிக்கு பேராசிரியர் பீரிஸ் எதிர்ப்புத் தெரிவிக்கையில், இந்த உயர்மட்டக் கூட்டத்தில் இத்தகைய விடயங்களை எடுப்பது பொருத்தமற்ற செயலென்றும் அவர் தெரிவித்தார்.

யதார்த்தமான நவீன செயற்பாடுகளை நோக்கி பொதுநல அமைப்பு நாடுகள் முன்னேறிக்கொண்டுவரும் இவ்வேளையில் கனடா இவ்விதம் நடந்துகொள்வது வேதனையளிக்கிறது என்று இலங்கை கண்டனக்குரல் எழுப்பியுள்ளது. ஒரு அங்கத்துவ நாட்டில் உள்ளூர் விவகாரங்கள் குறித்து உச்சிமாநாட்டில் கேள்வியெழுப்பு வது சம்பிரதாயத்துக்கு முரணான செயலென்றும் இலங்கை கண்டனத்தை வெளியிட்டுள்ளது.

அதேவேளையில் இலங்கை எந்தவொரு நாட்டுடனும் இத்தகைய விடயங்கள் குறித்து பரஸ்பர பேச்சுவார்த்தைகளை நடத்தத் தயாராகவிருக்கின்றது என்ற யதார்த்தையும் நாம் இந்த உச்சிமாநாட்டில் கலந்துகொண்ட நாடுகளுக்குப் புரியவைத்தோம் என்று பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் மேலும் தெரிவித்தார்.

இந்த சூழ்நிலையிலேயே இலங்கையை ஆதரிக்கும் மற்றப் பதினைந்து நாடுகள் இலங்கையின் நிலைப்பாட்டை ஆதரித்தனர். அவ்வேளையில் அமைச்சர்கள் மாநாட்டுக்குத் தலைமைதாங்கிய அவுஸ்திரேலியாவின் வெளிவிவகார அமைச்சர் கெவின் ரட், அங்கத்தவர்களின் மனோநிலை தமக்கு நன்கு புரிந்திருப்பதனால் இலங்கை பற்றிய இந்த சர்ச்சையை இங்கு எடுத்து ரைக்கத் தாம் இடமளிக்கப்போவதில்லை யென்று அறிவித்தார்.

தெற்காசியாவில் பயங்கரவாதத்தை முறியடித்து சாதனைபுரிந்த ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்குக் கிடைத்த வெற்றியானது இலங்கைக்கு மட்டும் கிடைத்த வெற்றியல்ல; சார்க் நாடுகளுக்குக் கிடைத்த மாபெரும் வெற்றியென்று பல தெற்காசிய நாடுகளின் தலைவர்கள் மகிழ்ச்சி தெரிவித்தனர். தெற்காசியப் பிராந்தியத்தில் சமாதானத்தையும், ஸ்திர நிலைமையையும் நிலைபெறச் செய்வதற்கு இலங்கை அரசாங்கம் பயங்கரவாதிகளுக்கு எதிரான போரில் வெற்றியடைந்தது ஒரு முக்கிய நிகழ்வாகுமென்றும் அவர்கள் கூறினார்.

எல்.ரி.ரி.ஈ. ஆதரவாளர் ஒருவர் மெல் பேர்ன் நீதிமன்றத்தில் இலங்கைக்கு எதிராகத் தாக்கல் செய்துள்ள மனித உரிமை மீறல் வழக்குக் குறித்து தகவல் தெரிவித்த பேராசிரியர் பீரிஸ், அவுஸ்ரேலிய ஊடகங்கள் மேற்கொண்ட அச்சுறுத்தல் நடவடிக்கைகளின் ஒரு செயற்பாடாகவே இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருக்கிறது என்று கூறினார். ஒரு நாட்டுக்கு வரும் வெளிநாட்டுத் தலைவருக்கு இராஜதந்திரி களுக்கான முழு உரிமைக்கும் உத்தரவாத மளிக்கப்பட வேண்டுமென்று இலங்கைத் தரப்பில் தெரிவிக்கப்பட்ட எதிர்ப்பை ஏற்றுக்கொண்டே அவுஸ்ரேலிய சட்டமா அதிபர் அந்த வழக்கை விசாரணைக்கு எடுத்துக்கொள்ள முடியாது என்று அறிவித்தார் எனவும் அமைச்சர் கூறினார்.

2013ஆம் ஆண்டின் பொதுநல வாய நாடுகளின் அரசாங்கத் தலைவர்களின் உச்சிமாநாட்டை இலங்கையில் நடத்துவ தென்ற 2009இல் எடுத்த தீர்மானத்தை உறுதிப்படுத்தியமை இலங்கை அடைந்த மூன்றாவது வெற்றியாகும். பலர் இந்த உச்சிநாட்டை வேறொரு நாட்டில் நடத்து வதற்கு எடுத்த முயற்சியும் இலங்கையின் நேசநாடுகளின் உதவியுடன் முறியடிக்கப் பட்டது.

இலங்கைத் தூதுக்குழுவினர் சர்வதேச சமூகத்துக்கு நாட்டில் பயங்கரவாதம் 2009 மே மாதத்தில் முறியடிக்கப்பட்ட பின்னர் இடம்பெற்றுவரும் அபிவிருத்தி நடவடிக்கைகள் பற்றி முழுமையான விளக்கத்தை அளித்தமை குறிப்பிடத்தக்கது.

அமைதி ஏற்பட்டுள்ள எங்கள் நாட்டில் அரசு மக்களிடையே நல்லிணக்கப்பாட்டை ஏற்படுத்தும் அதேவேளையில், மீள்குடியேற் றப் பணிகள் மற்றும் அபிவிருத்திப் பணிகள் சிறப்பாக நடைபெறுகிறது என்பதை தெளிவாக எடுத்துக்கூறியதாகவும் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் மேலும் தெரிவித்தார்.

பயங்கரவாதிகளுக்கு நிதியுதவி: தடை செய்ய காமன்வெல்த் நாடுகள் உறுதி!

Monday, October 31, 2011
பெர்த்/ஆஸ்திரேலியா, அக். 30: பயங்கரவாதத்துக்கு எதிராகப் போராடுவதென காமன்வெல்த் நாடுகள் கூட்டாக ஞாயிற்றுக்கிழமை இன்று உறுதி மேற்கொண்டன.
பயங்கரவாதச் செயலுக்கு தங்கள் நாடுகளைப் பயன்படுத்த விடாமல் தடுப்பது, பயங்கரவாதிகளுக்கு நிதியுதவி சென்று சேராமல் தடுப்பது ஆகியவற்றின் மூலம் பயங்கரவாதத்துக்கு எதிராகப் போராடுவதென காமன்வெல்த் நாடுகள் உறுதி எடுத்துக்கொண்டன.

கடற்கொள்ளைக்கு எதிரான முயற்சிகளை விரைவுபடுத்தவும் இந்தியக் கடல் பகுதியில் கடலோரப் பாதுகாப்பை வலுப்படுத்தவும் காமன்வெல்த் நாடுகள் ஒப்புக்கொண்டன.
காமன்வெல்த் நாடுகளின் தலைவர்கள் கூட்டத்துக்குப் பிறகு வெளியிடப்பட்ட அறிக்கையில் இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதில் மேலும் கூறப்பட்டிருப்பது:
பயங்கரவாதிகளின் செயல்கள் மற்றும் அவர்களுக்கான ஆதரவுக்கு தங்கள் நாடுகளைப் பயன்படுத்திக் கொள்ளாமல் பார்த்துக் கொள்வது என உறுதி மேற்கொண்டுள்ளோம்.
பயங்கரவாதிகளுக்குக் கிடைத்து வரும் நிதி ஆதாரத்தை ஒடுக்கவும், நிதியுதவியைப் பெறுவது அவற்றைப் பயன்படுத்துவது ஆகியவற்றைத் தடுக்கவும் தேவையான சட்ட அணுகுமுறையை அமல்படுத்த அனைத்து நாடுகளும் ஒப்புக்கொண்டுள்ளன.
சர்வதேச பயங்கரவாதம் குறித்து விரிவான மாநாடு நடத்துவது பற்றி பேச்சு நடத்த வேண்டும்.

சர்வதேச பாதுகாப்பு பற்றி விவாதித்தபோது அண்மைக்காலமாக அதிகரித்துவரும் கடற்கொள்ளை பற்றி விரிவாக விவாதிக்கப்பட்டது. சோமாலியாவில் அரசியல் நிலைத் தன்மையும் பாதுகாப்பும் இல்லாத நிலையில் கடற்கொள்ளையை முழுமையாகத் தடுக்க முடியாது. பாதுகாப்பான நிலையான தேசிய சர்வதேசிய சூழலை உருவாக்குவதில் தங்களுக்குள்ள கடமையை உறுப்பு நாடுகள் வெளிப்படுத்தின.

காமன்வெல்த் அமைப்பில் உள்ள 54 நாடுகளின் தலைவர்கள் ஆஸ்திரேலியாவில் உள்ள பெர்த் நகரில் கடந்த மூன்று நாள்களாக பல்வேறு விவகாரங்கள் குறித்து விவாதித்தனர். இம்மாநாடு ஞாயிற்றுக்கிழமை நிறைவடைந்தது. இந்தியாவின் சார்பில் துணைக் குடியரசுத் தலைவர் ஹமீது அன்சாரி பங்கேற்றார்.

Sunday, October 30, 2011

இந்திய காங்கிரஸ் கட்சியின் பிரதிநிதியும் பாராளுமன்ற உறுப்பினருமான நாச்சியப்பனுடன்- டக்ளஸ் தேவானந்தா தலைமையிலான உயர்மட்ட பிரதிநிதிகள் சந்திப்பு!

Sunday, October 30, 2011
ஈபிடிபி கட்சியின் செயலாளர் நாயகமும் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா தலைமையிலான உயர்மட்ட பிரதிநிதிகள் ஆளும் இந்திய காங்கிரஸ் கட்சியின் பிரதிநிதியும் பாராளுமன்ற உறுப்பினருமான நாச்சியப்பனுடன் சந்திப்பு ஒன்றை நிகழ்த்தியிருந்ததோடு தமிழ் பேசும் மக்கள் முகங்கொடுத்து வரும் அரசியல் மற்றும் பல்வேறு பிரச்சினைகள் குறித்தும் விரிவானதொரு பேச்சுவார்த்தையினை நடத்தியுள்ளனர்.

இது குறித்து ஈபிடிபி விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

இலங்கைக்கான உத்தியோகபூர்வ விஐயத்தினை மேற்கொண்டிருக்கும் சுதர்சன நாச்சியப்பனுடனான இச்சந்திப்பானது நேற்றைய தினம் (29) கொழும்பு ஹில்டன் ஹோட்டலில் நடைபெற்றது.

இச்சந்திப்பின் போது பிரதானமாக தமிழ் பேசும் மக்களுக்கான அரசியல் தீர்வு குறித்து விரிவாக பேசப்பட்டது. இலங்கை இந்திய அரசுகளுக்கு இடையில் ஏற்படுத்தப்பட்ட ஒப்பந்தத்தின் பயனாக உருவாக்கப்பட்ட 13வது திருத்தச்சட்டத்தை முழுமையாக நடைமுறைப்படுத்தி, அதை மேலும் வளர்த்தெடுத்து அதற்கு மேலதிக அதிகாரங்களை வழங்குவதன் மூலம் தமிழ் மக்கள் விரும்பும் அரசியல் அபிலாசைகளுக்கு தீர்வு காண முடியும் என்பதையே தாம் தொடர்ந்தும் வலியுறுத்தி வருவாதாக ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் உயர் மட்ட பிரதிநிதிகள் வலியுறுத்திக் கூறியுள்ளனர்.

இதன் அடிப்படையில் அண்மையில் பல்வேறு தமிழ் கட்சிகளையும் அழைத்து புதுடில்லியில் சுதர்சன நாச்சியப்பன் நடத்தியிருந்த மாநாட்டு முயற்சிகளை பாராட்டியும் இருந்தனர். ஆனாலும் அதில் கலந்து கொண்ட சக தமிழ்க் கட்சிகளால் தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வு விடயத்தில் ஒருமித்த நிலைப்பாட்டிற்கு வரமுடியாமல் போனமை கவலை தரும் விடயமாக இருப்பினும், தமக்கு இது ஆச்சரியமானதொரு விடயம் அல்ல என்றும் வெறும் தேர்தலுக்காக மட்டும் கூட்டுச் சேர்ந்திருக்கும் இவர்களால் கடந்த காலங்களிலும் பல்வேறு சந்தர்ப்பங்களில் ஒருமித்த முடிவிற்கு வர முடியாமல் போன வரலாற்றுத் தவறுகள் உண்டு என்றும் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி தரப்பில் எடுத்து விளக்கப்பட்டது.

இதன் போது கருத்துத் தெரிவித்திருந்த சுதர்சன நாச்சியப்பன் தாம் முன்னெடுத்திருந்த புதுடில்லி மாநாடு தமிழ் மக்களுக்கு மறுபடியும் கிடைத்திருந்த அரிய சந்தர்ப்பம் என்றும் ஆனாலும், அதில் கலந்து கொண்ட சக தமிழ்க் கட்சிகள் ஒருமித்த நிலைப்பாட்டை எடுக்கத் தவறியமை துரதிஷ்ட வசமானது எனவும் தனது மனத்துயரத்தை வெளிப்படுத்தியிருந்தார்.

இச்சந்திப்பின் போது வழமைபோல் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பால் சுயலாப அரசியலுக்காக புதிதாக கிளப்பி விடப்பட்டிருக்கும் காணி உரித்துப்பதிவு குறித்த திட்டமிட்ட புரளிகள் விடயமாக ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி தரப்பில் விரிவாக எடுத்து விளக்கப்பட்டதோடு காணி உரித்து பதிவுச் சட்டமானது தமிழ் மக்களுக்கு எதிரானதொரு விடயமாக இருந்திருந்தால் அதை நிச்சயம் எதிர்த்திருப்பதோடு, அது குறித்து அரசாங்கத்தோடு நியாயம் கேட்டு பேசியிருப்போம் என்றும் எடுத்து விளக்கப்பட்டது.

இலங்கை இந்திய மீனவர்களுக்கிடையிலான பிரச்சினை, தமிழ் மக்களின் வாழ்விடங்களுக்கான துரித அபிவிருத்திப் பணிகள், இடம்பெயர்ந்து மீளக்குடியேறிய மக்களுக்கான வாழ்வாதார வசதிகள், மற்றும் இந்திய அரசால் முன்னெடுக்கப்பட்டு வரும் வீடமைப்புத்திட்டம் என பல்வேறு விடயங்கள் குறித்தும் மேலும் ஆற்றப்பட வேண்டிய பணிகள் மற்றும் தேவைகள் குறித்தும் ஈ.பி.டி.பி. தரப்பினரால் விரிவாக எடுத்து விளக்கப்பட்டது.

இதன் போது ஈழத்தமிழர்களின் துயர்களை துடைப்பதற்கு தாம் ஒரு போதும் பின்நிற்கப் போவதில்லை என்று சுதர்சன நாச்சியப்பன் உறுதிபடத் தெரிவிக்கப்பட்டது.

இதேவேளை, அடைய முடியாததும், நடைமுறைக்குச் சாத்தியமற்றதுமான வெற்றுக் கோஷங்களால் தமிழ் மக்களே அவலங்களை சந்திக்க வேண்டிய துயரங்கள் இங்கு நிகழ்ந்தன என்பன குறித்த கருத்து பரிமாற்றங்களும், அடைய முடிந்த நடைமுறைக்குச் சாத்தியமான வழிமுறையான 13வது திருத்தச் சட்டத்தில் இருந்து தொடங்கும் வழிமுறையே சாத்தியமானது எனவும், அதை விரைவாக முன்னெடுப்பதே தமிழ் மக்களின் அரசியல் அபிலாசைகளை தீர்ப்பதற்கான ஒரேயொரு வழிமுறை என்றும் இச்சந்திப்போது பரஸ்பரம் இணக்கம் காணப்பட்டது.

இந்திய ஆளும் காங்கிரஸ் கட்சியின் பிரதிநிதியாகிய சுதர்சன நாச்சியப்பனுடனான இச்சந்திப்பின் போது ஈ.பி.டி.பி.யின் செயலாளர் நாயகமும் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா தலைமையில் யாழ் மாநகர முதல்வர் திருமதி யோகேஸ்வரி பற்குணராஜா, அமைச்சரின் பிரத்தியேகச் செயலாளர் தயானந்தா, அமைச்சரின் இணைப்புச் செயலாளர் றொபின் ராஜ்குமார் ஆகியோரும் கலந்து கொண்டனர்.

இலங்கை யுவதிகளை விபசார நடவடிக்கைகளுக்காக மாலைதீவுக்கு அனுப்பிய குழுவொன்றை அந்நாட்டுப் பொலிஸார் கைது செய்துள்ளனர்!

Sunday, October 30, 2011
இலங்கை யுவதிகளை விபசார நடவடிக்கைகளுக்காக மாலைதீவுக்கு அனுப்பிய குழுவொன்றை அந்நாட்டுப் பொலிஸார் கைது செய்துள்ளனர். அத்துடன் விபசார நடவடிக்கையில் ஈடுபடுவதற்காகச் சென்ற ஐந்து இலங்கைப் பெண்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

விபசாரத்துக்காக இலங்கை யுவதிகளை மாலைதீவுக்கு அனுப்பி வைத்தமை தொடர்பில் கைது செய்யப்பட்ட நபர்களில் ஒருவர் தனது 19 வயதான மனைவியையும் அதே தொழிலுக்கு அனுப்பி வைத்திருந்தமையையும் விசாரணைகளின் போது தெரிய வந்தது.

மாதாந்தம் பல தடவைகள் இலங்கையிலிருந்து மாலைதீவுக்கு யுவதிகளை இவர்கள் அனுப்பி வைத்திருந்தமையும் சுற்றுலா விசா ஊடாக அங்கு செல்லும் இவர்கள் சாதாரண மற்றும் ஐந்து நட்சத்திர ஹோட்டல்களில் விபச்சார நடவடிக்கைகளில் ஈடுபடுத்தப்பட்டனர் என்பதும் விசாரணைகளிலிருந்து தெரிய வந்துள்ளது. அத்துடன் இவர்கள் சுமார் ஐந்து வருடங்களாக இந்த நடவடிக்கையில் ஈடுபட்டமையும் அவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளிலிருந்து மேலும் தெரிய வந்துள்ளது.

ராணுவ ஆராய்ச்சி மையம் சாதனை தீவிரவாதிகளை சுட்டுக் கொல்ல அதிநவீன ரோபோ கண்டுபிடிப்பு-புனே ராணுவ ஆராய்ச்சி மையம் அமைப்பின் இயக்குனர் குருபிரசாத்!

Sunday, October 30, 2011
புனே : தீவிரவாதிகளை துப்பாக்கியால் சுட்டுக் கொல்லும் ரோபோக்களையும், வெடிகுண்டுகளை செயல் இழக்கச் செய்யும் ரோபோக் களையும் புனே விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். ராணுவத்துக்கு தேவையான ஆயுதங்கள், ஏவுகணைகள், போர் விமானங்களை உள்நாட்டு தொழில்நுட்பத்தில் ராணுவ ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு மையம் தயாரித்து கொடுத்து வருகிறது.

இந்த மையத்தின் ஒரு பிரிவான ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு பொறியியல் அமைப்பு புனேயில் செயல்பட்டு வருகிறது. இ¢ந்த அமைப்பை சேர்ந்த விஞ்ஞானிகள் 2 ரோபோக்களை கண்டுபிடித்துள்ளனர். ஒரு ரோபோ தனது தலையில் பொருத்தப்பட்டுள்ள துப்பாக்கியால் தீவிரவாதிகள சுட்டுக் கொல்லும் திறன் படைத்தது. சிறிய ரக துப்பாக்கி மற்றும் சிறிய ரக ஆயுதங்களை பயன்படுத்தும் வகையில் இந்த ரோபோ உருவாக்கப்பட்டு உள்ளது. கையெறி குண்டுகளை வீசக்கூடிய திறனும் இதற்கு உள்ளது. இரண்டாவது ரோபோ வெடிகுண்டுகளை செயல் இழக்க செய்யும் ஆற்றல் கொண்டது.

இந்த ரோபோக்களின் சோதனைகளும் முடிந்து விட்டன. அவற்றை தயாரிக்கும் பணி விரைவில் தொடங்கும். இந்த ரோபோக்களை வாங்குவதற்கு ராணுவம், துணை ராணுவம் மற்றும் தேசிய பாதுகாப்பு படைகள் ஆர்வம் காட்டியுள்ளன’’ என்று புனே அமைப்பின் இயக்குனர் குருபிரசாத் கூறினார்

தீவிரவாதிகள் பெரும்பாலும் பதுங்கியிருந்து தாக்குதல் நடத்துகின்றனர். அதுபோன்ற நேரங்களில் ராணுவ வீரர்கள் பதிலடி கொடுக்கும்போது, உயிர் இழப்புகள் ஏற்படுகின்றன. அதுபோன்ற நேரங்களில், இந்த ரோபோக்களை பயன்படுத்தினால் தீவிரவாதிகளை தேடிச் சென்று கொல்வதுடன், ராணுவத்துக்கு உயிர் இழப்பு ஏற்படுவதும் தவிர்க்கப்படும் என விஞ்ஞானிகள் கூறினர்.

உண்மையைக் கண்டறியும் ஆணைக்குழு அறிக்கை பகிரங்கப்படுத்தப்பட மாட்டாது – லக்ஸ்மன் விக்ரமசிங்க!

Sunday, October 30, 2011
உண்மையைக் கண்டறியும் ஆணைக்குழுவின் அறிக்கை பகிரங்கப்படுத்தப்பட மாட்டாது என ஆணைக்குழுவின் ஊடக ஆலோசகர் லக்ஸ்மன் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

உண்மையைக் கண்டறியும் ஆணைக்குழுவின் அறிக்கை தயாரிப்பு பணிகள் இறுதிக் கட்டத்தை அடைந்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.

எதிர்வரும் நவம்பர் மாதத்தின் இரண்டாம் வாரமளவில் இறுதி அறிக்கை ஜனாதிபதியிடம் ஒப்படைக்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.

ஐக்கிய நாடுகளின் நிபுணர்குழு அறிக்கை பொதுமக்களுக்கு அம்பலப்படுத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. இந்த நடவடிக்கைக்கு அரசாங்கம் கடும் எதிர்ப்பை வெளியிட்டிருந்தது.எனினும், உண்மையைக் கண்டறியும் ஆணைக்குழுவின் இறுதி அறிக்கையை பொதுமக்களுக்கு அம்பலப்படுத்துவதா இல்லையா என்பதனை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவே தீர்மானிக்க வேண்டுமென லக்ஸ்மன் விக்ரமசிங்க குறிப்பிட்டுள்ளார்.

கடந்த ஆண்டு மே மாதம் எட்டு பேர் அடங்கிய உண்மையைக் கண்டறியும் ஆணைக்குழுவினை ஜனாதிபதி நியமித்திருந்தார். 2002ம் ஆண்டுக்கும் 2009ம் ஆண்டுக்கும் இடைப்பட்ட காலத்தில் இடம்பெற்ற நிகழ்வுகள் தொடர்பில் ஆய்வு நடத்தி பரிந்துரைகளை செய்யும் நோக்கில் ஆணைக்குழு நிறுவப்பட்டது.

சர்வதேச பெண்கள் அமைப்பு உறுப்பினராக நந்திதா சேர்ப்பு!

Sunday, October 30, 2011
கொல்கத்தா : பெண்கள் அவலத்தை சினிமா மூலம் எடுத்துக் காட்டும் நடிகை நந்திதா தாஸ், சர்வதேச பெண்கள் அமைப்பில் உறுப்பினராக சேர்க்கப்பட்டுள்ளார்.
உலகம் முழுவதும் உள்ள பெண் தலைவர்கள் இணைந்து சர்வதேச பெண்கள் கூட்டமைப்பை உருவாக்கியுள்ளனர். இவர்கள் பல துறைகளில் சாதனை படைக்கும் பெண்களை தேர்ந்தெடுத்து கவுரப்படுத்தி தங்கள் அமைப்பில் சேர்க்கின்றனர்.

அதன்படி, பெண்களின் அவலத்தை தனது நடிப்பால் சினிமா மூலம் வெளிப்படுத்திய நடிகை நந்திதா தாஸ், சர்வதேச பெண்கள் கூட்டமைப்பின் உறுப்பினராக சேர்க்கப்பட்டு உள்ளார். சர்ச்சைக்குரிய படங்களான எர்த், பயர், பவாந்தர் போன்றவற்றில் வித்தியாசமான கேரக்டரில் நடித்து பெண்களின் வாழ்க்கை நிலையை வெளியுலகத்துக்கு இவர் வெளிப்படுத்தி இருக்கிறார்.

அமெரிக்காவின் வாஷிங்டன் நகரில் உள்ள தேசிய மீயூசியம் கட்டிடத்தில் நேற்று முன்தினம் இரவு நடந்த நிகழ்ச்சியில் நடிகை நந்திதாஸ் கவுரவிக்கப்பட்டார். சர்வதேச பெண்கள் அமைப்பு உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் இந்தியர் நந்திதாஸ் என்பது குறிப்பிடத்தக்கது. நடிகையாக மட்டும் அல்லாமல், இந்திய குழந்தைகள் சினிமா அமைப்பின் தலைவர் பதவி உட்பட பல பொறுப்புகளில் நந்திதா தாஸ் இருக்கிறார்.

காக்க காக்க.. கனகவேல் காக்க! : நாளை சூரசம்ஹாரம்!

Sunday, October 30, 2011
முருகன், குமரன், கந்தன், சரவணன், ஆறுமுகன், கார்த்திகேயன், சுப்ரமணியன், வடிவேலன், சுவாமிநாதன், செந்தில்நாதன் என்று பல்வேறு பெயர்களால் போற்றப்படுபவர் தமிழ்க் கடவுள் முருகப் பெருமான். சிவனின் நெற்றிக்கண்ணில் இருந்து தோன்றியவர். கொடுமைகள் பல புரிந்துவந்த சூரபத்மனை அவர் சம்ஹாரம் செய்த நாள் கந்த சஷ்டி என்று அழைக்கப்படுகிறது. முருகனின் அவதார நோக்கமே சூரனை வதைத்ததுதான். இதை கொண்டாடும் வகையில் அனைத்து முருகன் கோயில்களிலும் கந்த சஷ்டி விழாவும் சூரசம்ஹாரமும் நடைபெறுகின்றன.

ஐப்பசி மாதத்தில் அமாவாசைக்கு அடுத்த நாளான பிரதமை தொடங்கி சஷ்டி திதி வரையிலான 6 நாட்கள் விரதம் இருப்பது சஷ்டி விரதம் எனப்படுகிறது. 6 நாட்களும் விரதம் இருக்க முடியாதவர்கள் சஷ்டி தினத்தில் மட்டுமாவது விரதம் இருந்து வழிபடலாம். ‘சட்டியில் இருந்தால்தான் அகப்பையில் வரும்’ என்பார்கள். இந்த சொற்றொடர் கந்த சஷ்டி விரதத்தின் சிறப்பை உணர்த்துகிறது. சஷ்டி விரதம் இருந்தால் சற்புத்திர யோகம் உண்டாகும். கல்வி, கேள்வியில் சிறந்து விளங்கும் குழந்தைகள் பிறப்பார்கள் என்பது இதன் பொருள்.

சிவபெருமானின் நெற்றிக் கண் தீப்பொறியில் இருந்து உருவானவன் கந்தப் பெருமான். நெற்றிக் கண்ணில் இருந்து புறப்பட்ட தீப்பொறி சரவணப் பொய்கையில் 6 பகுதியாக விழுந்தது. அவை ஒவ்வொன்றும் ஒரு குழந்தையாக உருப்பெற்றது. 6 கார்த்திகைப் பெண்களால் வளர்க்கப்பட்ட குழந்தைகளை பார்வதி தேவி இணைத்து ஆறுமுகனாக மாற்றினாள் என்கிறது புராணம். தேவர்களை அடக்கி பஞ்ச பூதங்களின் செயல்பாட்டையும் தன்வசப்படுத்தியிருந்தனர் சூரபத்மன், சிங்கமுகன், தாரகாசுரன் ஆகிய அசுரர்கள். அவர்களை அழிப்பதற்காக தோன்றியவன் முருகப் பெருமான். சூரபத்மனை அழிக்க 6 நாள் போர் நடக்கிறது. சிங்கமுகன், தாரகாசுரன் ஆகியோரை முருகப் பெருமான் முதலில் வதம் செய்கிறார். 6 நாள் நடந்த போரின் முடிவில் முருகனை ஏமாற்றும் விதத்தில் மாமரமாக மாறி நிற்கிறான் சூரன். அன்னை பார்வதி தேவி கொடுத்த வேலால் மரத்தை பிளக்கிறார் முருகன். பிளவுபட்ட மாமரமானது சேவலாகவும் மயிலாகவும் மாறுகிறது. சேவலை தனது கொடியாகவும் மயிலை தனது வாகனமாகவும் ஏற்றுக் கொள்கிறார் முருகப் பெருமான்.

அசுரர்களுக்கு மோட்சம் அளிக்கும் முருகப் பெருமான், தேவலோகத்தை தேவேந்திரனிடம் ஒப்படைக்கிறார். சூரனை சம்ஹாரம் செய்த கந்தனுக்கு தன் மகள் தெய்வானையை மணமுடித்து தருகிறார் தேவேந்திரன். தேவசேனா, தேவயானை, தேவயானி, ஜெயந்தி ஆகிய பெயர்கள் தெய்வானையையே குறிக்கிறது. இதை கொண்டாடும் வகையில் சூரசம்ஹாரத்துக்கு அடுத்த நாள், முருகன் கோயில்களில் சுவாமி திருக்கல்யாண உற்சவம் நடக்கிறது.
சிங்கமுகன், தாரகாசுரன், சூரபத்மன் ஆகியவை நமக்குள் இருக்கும் ஆணவம், கன்மம், மாயை என்னும் மூன்று தீய குணங்களின் அடையாளங்கள். அவற்றை நாம் வெற்றி கொண்டால் உயர் நிலையை அடையலாம் என்பது சூரசம்ஹாரம் காட்டும் நெறியாகும்.

முருகனுக்கு கிழமை, நட்சத்திரம், திதி ஆகிய மூன்றிலும் விரதங்கள் இருக்கின்றன. கிழமைகளில் செவ்வாய், நட்சத்திரத்தில் கிருத்திகை, திதியில் சஷ்டி ஆகியவை முருகனுக்கு உகந்தவை. வெறுமனே தண்ணீர் மட்டுமே குடித்து விரதம் இருப்பது, பால் மட்டும் குடிப்பது, மவுன விரதம் இருப்பது என விரதத்தில் பல வகைகள் இருக்கின்றன. அவரவர் குடும்ப வழக்கப்படி இதை அனுசரிப்பார்கள். அறுபடை வீடுகள் உள்பட முருகன் கோயில்கள் அனைத்திலும் கந்த சஷ்டியை முன்னிட்டு சிறப்பு வழிபாடுகள், காவடி எடுத்தல், அலகு குத்துதல், பால்குடம் எடுத்தல் போன்ற வழிபாடுகள் நடக்கும். சஷ்டி விரத காலத்திலும் சூரசம்ஹார தினத்தன்றும் கந்தசஷ்டி கவசம், கந்தகுரு கவசம், சண்முக கவசம், திருப்புகழ், கந்தர் கலிவெண்பா போன்றவற்றை பாராயணம் செய்யலாம். விரதம் இருந்து, உடலையும் மனதையும் தூய்மைப்படுத்தி மனதார பிரார்த்தித்து வழிபட்டால் நமக்கு எதிராக வரும் அனைத்து தடைகள், தடங்கல்கள், பிரச்னைகளையும் முருகப் பெருமான் தகர்த்தெறிந்து வளமான வாழ்வு அருள்வார் என்பது நம்பிக்கை. முருகனை கந்தசஷ்டியன்று வழிபட்டு சகல நலன்களும் பெறுவோம்.
புலிகள் இருந்த காலத்தில் பேசியது போன்று வீரவசனங்களைப் பேசி விதண்டாவாத
அறிக்கைகளை மட்டுமே விட்டுவரும் தமிழ்க் கூட்டமைப்பு:அமெரிக்காவீல் தமிழர் பிரச்சினையை எடுத்துக் கூறி நீதி கேட்பது ஒருபுறமிருக்க இங்கு வந்து அரசுடன் பேசி ஒரு இணக்கப்பாட்டிற்கு வந்து ஒன்றுபட்டு வாழ்வதே சிறப்பாக அமையும்!

Sunday, October 30, 2011
நாட்டில் புரையோடிப் போயிருக்கும் இனப்பிரச்சினைக்கு கடந்த முப்பது வருடகாலத்தில் பல்வேறு கோணங்களில் தீர்வுகளைக் காண முற்பட்ட போதிலும் இன்றுவரை அதற்கு உரிய தீர்வு கிடைக்கவில்லை. மாறி மாறி ஆட்சிக்கு வந்த அரசாங்கங்கள் ஏதோவொரு வகையில் அதனைத் தட்டிக்கழித்து வந்துள்ளமையே வரலாற்றுப் பதிவுகளாக உள்ளன.

அதேபோன்று வட்டுக்கோட்டைத் தீர்மானம் முதல் புலிகளைத் தோற்றுவித்து முள்ளிவாய்க்காலில் அவர்கள் முடங்கிப் போகும்வரை தமிழ் அரசியல்வாதிகளும் தீர்வினை ஆயுதம் மூலமாகக் காணலாம் எனும் நம்பிக்கையில் இருந்துவந்ததையும் மறுப்பதற்கில்லை.

இந்நிலையில் சமாதானம் மூலமாகவும் பின்னர் யுத்தம் மூலமாகவும் முடிவிற்கு வராத தீர்வு காணும் விடயம் இன்று அரசாங்கத்திற்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்குமிடையில் நடைபெற்றுவரும் பேச்சுவார்த்தை மூலமாக வரும் என்பதே தமிழர் தரப்பினதும், தமிழ் மக்களினதும் இறுதி எதிர்பார்ப்பாக உள்ளது.

ஆனால் அதிலும் எத்தனை இழுபறி? விட்டுக்கொடுக்காத் தன்மை, புறம் சொல்லும் பண்பு, மறைமுக வசைபாடல் என்று காலம் கடத்தும் கபடத்தனங்கள் அரங்கேறி வருகின்றன. வெறுப்படைந்தாலும் மக்களால் எதுவுமே செய்ய முடியாது. நடப்பதைக் காண வேண்டியதுதான் என்பது தமிழ் மக்களது தலை எழுத்தாக அமைந்துள்ளது.

இந்நிலையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அமெரிக்காவுக்கு நீதி கேட்டுச் சென்றுள்ளது. அமெரிக்கா உலகுக்கே பொலிஸ்காரன் வேலை பார்க்கும் பெரிய வல்லரசு. இலங்கைத் தமிழருக்கு நிச்சயம் வழியொன்று சொல்லும் என்பது பலரதும் எதிர்பார்ப்பாக உள்ளது.

அமெரிக்காவிற்கு நாம் செல்வது அரசாங்கத்தைக் குறை கூறுவதற்காக அல்ல. மாறாக தமிழர் பிரச்சினையை எடுத்துக் கூறுவது மட்டுமே எமது செயற்பாடாக அமையும் என கூட்டமைப்பினர் தெரிவித்திருப்பது அவர்களது பெருந்தன்மையைக் காட்டுகிறது. ஐக்கிய தேசியக் கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க அல்லது ஜே.வி.பி தலைவர் சோமவன்ச அமரசிங்க போன்று வெளிநாட்டவருக்கு அரசைக் காட்டிக் கொடுப்பதிலிருந்து விலகி தமிழ்க் கூட்டமைப்பு உயர்ந்துள்ளது.

முள்ளிவாய்க்காலில் இடம்பெற்ற இறுதி யுத்தத்தின் தாக்கங்கள் தமிழர் மனங்களிலிருந்து மாறாத நிலையில் அதனைச் சர்வதேசத்தின் கவனத்திற்குக் கொண்டுவருவதில் தமிழ்க் கூட்டமைப்பு குறியாகவே உள்ளது. நடந்த உண்மைகளை மூடி மறைத்தாலும் தனது மக்களின் மனக்குமுறலுக்கும், அவலக் குரலுக்கும் கூட்டமைப்பு செவிமடுத்துச் செயற்படுவதில் எவ்விதத் தவறும் இருப்பதாகத் தெரியவில்லை.

உள்ளூரில் பேச்சுவார்த்தையை நடத்தி இனப்பிரச்சினைக்குத் தீர்வினைக் காண்பதை ஏற்றுக் கொண்டாலும் அதற்குச் சர்வதேசங்களின் அனுசரணையையும், மேற்பார்வை மற்றும் பங்குபற்றுதல்களை தமிழ்க் கூட்டமைப்பு விரும்புகிறது என்பது அவர்களது செயற்பாடுகளிலிருந்து நன்கு புலனாகிறது.

இது தவறல்ல. தவறு என்று எவராலும் கூறவும் முடியாது. காரணம் தமிழ்த்தரப்பு கடந்த காலங்களில் கண்ட அனுபவங்கள் யாவும் ஏமாற்றப்பட்ட வரலாறுகளாகவே உள்ளன. அதனால்தான் தமிழ்க் கூட்டமைப்பின் முரண்டுபிடிப்பு வலுவான எச்சரிக்கையாக உள்ளது.

எனினும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான அரசாங்கத்துடன் அவர்கள் இத்தகைய மனப்பயமின்றி இதய சுத்தியுடன் பேசலாம் என்பதைப் புரிந்து கொள்ளாமை வேதனை தருவதாக உள்ளது. ஜனாதிபதி துணிந்து பல விடயங்களைச் செய்து சாதித்துள்ளார் என்பதை கூட்டமைப்பு உணரவேண்டும்.

அமெரிக்கா செல்லும் அவர்கள் அங்கு தமிழர் பிரச்சினையை எடுத்துக் கூறி நீதி கேட்பது ஒருபுறமிருக்க இங்கு வந்து அரசுடன் பேசி ஒரு இணக்கப்பாட்டிற்கு வந்து ஒன்றுபட்டு வாழ்வதே சிறப்பாக அமையும்.

உதட்டளவில் தமிழ்த் தேசியம் பற்றிப் பேசி வரும் சிலர் உள்ளத்தால் அரசாங்கத்துடன் இணைந்து சென்று தமிழ் மக்களுக்கு விமோசனத்தைப் பெறுவதையே தமிழ்க் கட்சிகள் மேற்கொள்ள வேண்டுமெனும் விருப்புக் கொண்டுள்ளமையை தற்போது உணர முடிகிறது. இதற்குக் காரணம் புலிகளின் அழிவிற்குப் பின்னரும் தமிழ்த் தேசியம், தமிbழம் பற்றிப் பேசுவதில் எவ்விதமான அர்த்தமும் இல்லை என்பதை நன்கு புரிந்துகொண்டமையே.

அத்துடன் புலிகள் இல்லாது போன தன் பின்னர் அவர்களது இடத்தில் வைத்து தமிழ் மக்களால் மதிக்கப்பட்ட தமிழ் தேசியக் கூட்டமைப்பும் இன்று தடம்மாறிப் பயணிக்கப் புறப்பட்டமை தமிழருக்கு ஒரு சாபக்கேடு என்றே கூறவேண்டும்.

புலிகள் இருந்த காலத்தில் பேசியது போன்று வீரவசனங்களைப் பேசி, விதண்டாவாத அறிக்கைகளை மட்டுமே விட்டுவரும் தமிழ்க் கூட்டமைப்பு, அரசுடன் ஆக்கபூர்வமாகப் பேச்சுக்களை நடத்தி அணைந்து சென்றால் பல வெற்றிகளைக் காணலாம் என்பது தமிழ் மக்களது தற்போதைய கருத்தாக எழுந்துள்ளது.

வடக்கு கிழக்கில் அரசாங்கம் மேற்கொள் ளும் ஒவ்வொரு அபிவிருத்திப் பணிகளை யும் விமர்சிப்பதுவும், பேச்சுவார்த்தை நடத் துவதும் கூட்டமைப்பின் இப்போதைய நிகழ்ச்சி நிரலாக உள்ளது. இதனை விடுத்து அபிவிருத்திப் பணிகளில் அரசு டன் தானும் கைகோர்த்து செயற்பட்டால் அர சிடமிருந்து மேலும் பலவற்றைக் கேட்டுப் பெறலாம் என்பதை தமிழ்க் கூட்டமைப்பு விளங்கிக் கொள்வதாக இல்லை.

சர்வதேசத்திடம் சென்று அரசாங்கத்தைப் பற்றிக் குறைகூறுவதை விடுத்து இங்கு அரசுடன் உண்மையுடன் பேசி தீர்வைக் காண்பதே மேலானது என்பதை ஏன் தமிழ்க் கூட்டமைப்பு இன்னமும் புரிந்து கொள் ளாமலுள்ளது என் பது கேள்விக்குறியாகவே உள்ளது. புலிகளின் மறைவிற்குப் பின்ன ரும் இதனை விளங்காதிருப்பது தமிழ் மக்களிடையே ஆச்சரியத் தையே தோற்று வித்துள்ளது.

இதுவரை காலமும் தமக்கிடையே ஓரளவு ஒற்றுமையைக் கடைப்பிடித்து வந்த தமிழ்க் கூட்டமைப்பு இப்போது பிரிந்து செயற்பட ஆரம்பித்துள்ளது. அதில் பல குழுக்கள் ஏற்பட்டுள்ளன. அக்குழுக்கள் சேர்ந்து கூட்டணிகளையும் அமைத்துள்ளன. அதிலும் ஆனந்தசங்கரி ஐயாவினுடைய கூட்டணி தமிழ்க் கூட்டமைப்பின் தலைமைக்குப் பெரும் தலையிடியாக அமைந்துள்ளது.

இவ்வாறு தமக்குள்ளே மோதி மேலும் பல பிரிவுகள் ஏற்பட்டு பிளவுபட்டுச் செயற்படுவதை விடுத்து ஓரளவு ஒற்றுமை யாக இருக்கும் இச்சந்தர்ப்பத்திலாவது அர சாங்கத்துடன் பேச்சு நடத்தி ஒரு நல்ல தீர்வினைக் காண்பது உசிதமானது. ஆனால் தமிழ்க் கூட்டமைப்பின் தலைமை இதனைப் புரிந்து கொள்வதாக இல்லை.

வடக்கு, கிழக்கிலுள்ள தமிழ் மக்களில் பெரும்பாலானோர் தம்மையே ஆதரிக்கிறார்கள் எனும் மமதையில் அம்மக்களின் கருத்துக்களுக்குக் கூடச் செவி சாய்க்காது தமதிஷ்டப்படி தமிழ்க் கூட்டமைப்பின் தலைமை நடந்து வருகிறது. வடக்கு கிழக்கில் பல உள்ளூராட்சி சபைகளின் ஆட்சியை மக்கள் இவர்களுக்கு வழங்கியிருந்தாலும் அவற்றைச் சிறந்த முறையில் நிர்வகிக்கும் திறமையற்றவர்களாகவே இவர்கள் காணப்படுகிறார்கள். நாட்டிலுள்ள ஏனைய உள்ளூராட்சிச் சபைகள் தமது பணிகளை முன்னெடுத்து மக்களுக்குச் சேவையாற்றி வருகின்றன. ஆனால் இவர்களால் கைப்பற்றப்பட்ட சபைகளிலோ இன்னமும் தலைவரை, தவிசாளரைத் தெரிவு செய்வதில் காணப்படும் பிணக்குகள் முடிவிற்கு வரவில்லை. இந்நிலையில் இவர்களிடம் வடக்கு மாகாண சபையையும் கொடுத்தால் நிலைமை எப்படியிருக்கும்?

எனவே தமிழ்க் கூட்டமைப்பு தனக்கு வாக்களித்த மக்களை ஏமாற்றாது சேவையாற்ற வேண்டும். அதற்கு அரசுடன் இணைந்து பணியாற்ற முன்வர வேண்டும். அரசுடன் இணைந்து செயற்படுவதால் ஒருபோதும் கெளரவம் குறைந்துவிடாது மாறாக இதுவரை காலமும் யுத்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு விமோசனமே கிடைக்கும்.