Tuesday, January 29, 2013
சென்னை::கமலஹாசன் இயக்கி நடித்துள்ள விஸ்வரூபம் திரைப்படத்திற்கு தமிழக அரசு விதித்த தடையை நீக்கி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழகம் முழுவதும் விஸ்வரூபம் திரைப்படத்தை நாளை வெளியிடலாம் என உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. இந்த வழக்கு தொடர்பான இறுதி கட்ட விசாரணை பிறகு நடைபெறும் என உயர்நீதிமன்ற நீதிபதி அறிவித்துள்ளார்..
கமலஹாஸனின் விஸ்வரூபம் படத்திற்கு தமிழக அரசு விதித்த தடையை நீக்கி உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்தது. படத்தை உடனடியாக வெளியிடலாம் என்று தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது. கமல் ரசிகர்கள் இதனை பட்டாசு வெடித்து கொண்டாடி மகிழ்கின்றனர்.
தீர்ப்பை நாளை வரை ஒத்தி வைக்குமாறு அரசு தரப்பு வக்கீல் நவநீதகிருஷ்ணன் விடுத்த கோரிக்கையும் நிராகரிக்கப்பட்டது. மேலும் அரசு மேல்முறையீடு வேண்டுமானால் செய்து கொள்ளலாம் என்று நீதிபதி வெங்கட்ராமன் தனது தீர்ப்பில் கூறியுள்ளார்.
தணிக்கை துறை அனுமதி அளித்த பிறகு தமிழக அரசு தடை விதிக்க முடியாது என்று நீதிபதி வெங்கட்ராமன் கூறியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.
அரசு தரப்பு வழக்கறிஞர் நவநீத கிருஷ்ணன், மற்றும் கமல் சார்பு வழக்கறிஞர் ராமன் ஆகியோர் வாதங்களை நாள் முழுதும் கேட்டறிந்த, படத்தை நேரில் பார்த்த, நீதிபதி வெங்கட்ராமன், படத்தில் முஸ்லிம்களுக்கு எதிரான காட்சிகள் இடம்பெற்றதாக கருத இடமில்லை என்று கூறியுள்ளார்.
இதனையடுத்து நாளையே அதாவது 30ஆம் தேதியே படத்தை வெளியிடலாம் என்று சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.
மேலும் 144 தடை உத்தரவை நிறுத்தி வைக்கவும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
சரி ஐய்யா நமது கேள்வி: தணிக்கைத் துறை அனுமதி அளித்த பிறகு தடை விதிக்க முடியாது என்பதைக் கூற இவ்வளவு கால தாமதம் தேவையா என்பதே. இவ்வளவு நீண்ட வழக்கு விசாரணை தேவையா என்பதே.
எனினும் நல்ல தீர்ப்பு, கமல் ரசிகர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர். இனி படம் பார்த்து விட்டு உண்மையான விமர்சனங்கள் வெளிவரட்டும்
No comments:
Post a Comment