Thursday, January 31, 2013

காட்டுப்பள்ளி துறைமுகம்: முதல்வர் ஜெயலலிதா திறந்து வைத்தார்!

Thursday, January 31, 2013
சென்னை::திருவள்ளூர் மாவட்டத்திலுள்ள காட்டுப்பள்ளியில் ரூ.3,375 கோடியில் கட்டப்பட்டுள்ள கப்பல் கட்டுமானத் திட்டம் மற்றும் துறைமுகத்தினை முதல்வர் ஜெயலலிதா நேற்று தலைமைச் செயலகத்தில் காணொலிக் காட்சி மூலம் திறந்துவைத்தார். இதுதொடர்பாக தமிழக அரசின் செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:-

தமிழ்நாடு முதலமைச்சர் ஜெயலலிதா நேற்று (30.1.2013) தலைமைச் செயலகத்தில், திருவள்ளுர் மாவட்டம் பொன்னேரி வட்டம், காட்டுப்பள்ளி கிராமத்தில், எல் ேடி மற்றும் டிட்கோ நிறுவனத்தின் கூட்டு முயற்சியில் 3 ஆயிரத்து 375 கோடி ரூபாய் முதலீட்டில் கட்டப்பட்டுள்ள எல் ேடி கப்பல் கட்டுமானத் தளம் மற்றும் துறைமுகத்தினை காணொலிக் காட்சி மூலமாக திறந்து வைத்தார்.

திருவள்ளுர் மாவட்டம் பொன்னேரி வட்டம், காட்டுப்பள்ளி கிராமத்தில், எல் ேடி மற்றும் டிட்கோ நிறுவனத்தின் கூட்டு முயற்சியில் 3 ஆயிரத்து 375 கோடி ரூபாய் முதலீட்டில் கட்டப்பட்டுள்ள எல் ேடி கப்பல் கட்டுமானத் தளம் மற்றும் துறைமுகம் 1143 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது. இதில் 810 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள கப்பல்கட்டும் தளமானது இந்தியாவிலேயே மிகப்பெரியதாகும். இதில் மிகப்பெரிய சரக்கு கப்பல்கள், பெட்ரோல் மற்றும் இயற்கை எரிவாயுவினை பெருமளவில் கொண்டு செல்லும் சிறப்பு வடிவினைக்கொண்ட கப்பல்கள், கடலிலிருந்து கச்சா எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு எடுப்பதற்கான ஆய்வு கட்டுமானங்கள் வடிவமைத்தல் மற்றும் கப்பல் கட்டுவதற்கான கனரக இயந்திரங்கள் வடிவமைத்தல் ஆகிய வசதிகள் உள்ளன. சுமார் 1.9 கிலோ மீட்டர் நீளமுள்ள கடல்பகுதி இந்நிறுவன துறைமுகத்தின் முகப்புப் பகுதியாக அமைக்கப்பட்டுள்ளது. இந்த எல் ேடி கப்பல் கட்டுமானத் தளம் மற்றும் துறைமுகத்தினை காணொலிக் காட்சி மூலமாக தமிழ்நாடு முதலமைச்சர் ஜெயலலிதா நேற்று திறந்து வைத்தார்.

முன்னதாக தமிழ்நாடு உப்பு நிறுவனம் 2011-​12ஆம் ஆண்டு 21 கோடியே 88 லட்சம் ரூபாய்க்கு உப்பு விற்பனை செய்து மொத்த லாபமாக 4 கோடியே 36 லட்சம் ரூபாய் ஈட்டியுள்ளது. இதன் அடிப்படையில் 25 லட்சத்து 36 ஆயிரம் ரூபாய் லாப ஈவுத்தொகையாகவும், கூடுதல் உரிமைத் தொகையான 1 கோடியே 47 லட்சம் ரூபாய், என மொத்தம் 1 கோடியே 72 லட்சத்து 36 ஆயிரம் ரூபாய்க்கான காசோலைகளை தமிழ்நாடு முதலமைச்சர் ஜெயலலிதாவிடம் நேற்று தொழில்துறை அமைச்சர் வழங்கினார்.

விழுப்புரம் மாவட்டம், கச்சிராயப்பாளையத்தில் அமைந்துள்ள கள்ளக்குறிச்சி கூட்டுறவு சர்க்கரை தொழிற்சாலை, 2010-​11ஆம் ஆண்டு 6 கோடியே 36 லட்சம் ரூபாய் லாபம் ஈட்டியுள்ளது. இதில் தமிழக அரசின் மூலதனத்திற்கான ஈவுத்தொகை 1 கோடியே 86 லட்சம் ரூபாய்க்கான காசோலையினை தமிழ்நாடு முதலமைச்சர் ஜெயலலிதாவிடம் நேற்று தலைமைச் செயலகத்தில் தொழில்துறை அமைச்சர் வழங்கினார்.

இந்த நிகழ்ச்சியில் நெடுஞ்சாலை மற்றும் சிறுதுறைமுகங்கள் துறை அமைச்சர், பால்வளத் துறை அமைச்சர், சுற்றுச்சூழல் துறை அமைச்சர், தொழில் துறை அமைச்சர், வணிகவரி மற்றும் பத்திரப் பதிவுத் துறை அமைச்சர், தலைமைச் செயலாளர், தொழில்துறை முதன்மைச் செயலாளர், டிட்கோ நிறுவன முதன்மைச் செயலாளர்/தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குநர், தமிழ்நாடு சிமெண்ட் நிறுவன தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குநர், எல் ேடி நிறுவனத்தின் முதுநிலை செயல் துணைத் தலைவர் எஸ்.என். சுப்ரமணியன் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இவ்வாறு அந்த செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment