Thursday, January 31, 2013
இலங்கை::எதிர்வரும் பெப்ரவரி மாதம் ஆரம்பமாகவுள்ள கச்சைத்தீவு அந்தோனியார் ஆலய திருவிழாவில் கலந்துகொள்ள இந்தியாவிலிருந்து ஆறாயிரம் யாத்திரிகர்கள் வருகை தர அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கச்சைத்தீவு உற்சவத்தினை முன்னிட்டு அதன் ஏற்பாடுகள் கடற்படையினரால் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருவதாக யாழ். மாவட்ட உதவி பொலிஸ் அத்தியட்சகர் ஹேரத் தெரிவித்தார்.
இந்த உற்சவம் தொடர்பான விசேட கலந்துரையாடலொன்று யாழ். மாவட்ட செயலகத்தில் எதிர்வரும் 6ஆம் திகதி நடைபெறவுள்ளதாகவும் அவர் கூறினார்.
திருவிழாவில் கலந்துகொள்ளும் இந்திய, இலங்கை யாத்திரிகர்களுக்கு வழங்கப்பட வேண்டிய வசதிகள், பாதுகாப்பு நடவடிக்கைகள் உள்ளிட்ட மேலும் பல விடயங்கள் தொடர்பாக இந்தக் கலந்துரையாடலின் போது ஆராயப்படவுள்ளதாகவும் யாழ். மாவட்ட உதவி பொலிஸ் அத்தியட்சகர் குறிப்பிட்டார்.
எதிர்வரும் 22,23ஆம் திகதிகளில் கச்சைத்தீவு அந்தோனியார் ஆலய உற்சவத்தினை நடத்துவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
No comments:
Post a Comment