Wednesday, January 30, 2013

'விஸ்வரூபம்' வெளியாகவில்லை என்றால் இந்தியாவைவிட்டே வெளியேறிவிடுவேன் : கமல்ஹாசன் உறுக்கம்!!!

Wednesday, January 30, 2013
சென்னை:: 'விஸ்வரூபம்' படம் தொடர்பான நீதிமன்ற வழக்கு தனக்கு சாதகமாக வரவில்லை என்றால், தான் தமிழகம் மட்டும் இன்றி இந்தியாவை விட்டே வெளியேறும் நிலைக்கு தள்ளப்பட்டு இருக்கிறேன் என்று நடிகர் கமல்ஹாசன் கூறியுள்ளார்.

விஸ்வரூபம் படத்திற்கு எதிராக தமிழக அரசு மற்றும் பல தரப்பினர் பல்வேறு வழக்குகளை போட்டு வருகிறார்கள். இந்த நிலையில் கமல்ஹாசன் தாக்கல் செய்த விஸ்வரூபம் படத்திற்கு விதித்த தடையை நீக்க கோரிய மனு மீது விசாரணை நடத்திய நீதிபதி தடையை நீக்கி உத்தரவிட்டார். இருப்பினும் தமிழக அரசு மேல் முறையீடு மனு ஒன்றை இன்று தாக்கல் செய்தது. அந்த மனு மீதானா விசாரணை நண்பகல் 2 மணிக்கு மேல் வெளியாகும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.

நேற்று படத்திற்கு இருந்த தடையை நீக்கி உத்தரவிட்ட நீதிபதி, படம் திரையிடப்படும் திரையரங்குகளில் அசம்பாவிதம் ஏதாவது நடந்தால் அபோது தடை விதிக்கப்படும் என்று கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் விஸ்வரூபம் திரையிடுவதாக இருந்த சென்னை, ஆல்பர் திரையரங்கில் வைக்கப்பட்டிருந்த விஸ்வரூபம் படத்தின் போஸ்டரை இன்று சிலர் எரித்துள்ளார்கள்.

இந்த நிலையில் இன்று தனது சென்னை, ஆல்வார்பேட்டை அலுவலகத்தில் பத்திரிகையாளர்களை சந்தித்து பேசிய கமல்ஹாசன், "இந்த சிறிய வீட்டில் இவ்வளவு பெரிய கூட்டத்தை கூட்டி ஏன் இந்த சந்திப்பு என்று நீங்கள் நினைக்கலாம் அதற்கு காரணம் இருக்கிறது. எனக்கு சொத்துக்கள் என்று சொல்லும் அளவுக்கு ஏதும் இல்லை என்பது தமிழக மக்களுக்கு நன்றாகவே தெரியும். இருப்பினும் சென்னையில் இந்த ஆல்வார்பேட்டை வீடு உள்ளிட்ட சில சொத்துக்கள் இருக்கிறது. ஆல்வார்பேட்டை வீடு உட்பட.

தற்போது நீதிமன்றத்தின் தீர்ப்பு எனக்கு சாதகமாக வரவில்லை என்றால், இந்த வீடு உள்ளிட்ட அனைத்துமே எனது இல்லை. ஏனென்றால் இவற்றையெல்லாம் வைத்துதான் விஸ்வரூபம் படத்தை நான் எடுத்திருக்கிறேன். படம் வெளியாக ஏற்பட்ட தாமதத்தினால் கடன் கொடுத்தவர்கள் அவர்களுடைய பெயர்களுக்கு மாற்றி எழுதிகொள்கிறார்கள். இனி இங்கு உங்களை என்னால் சந்திக்க முடியாமல் போய்விடுமோ என்ற எண்ணத்தினால் தான் இந்த சந்திப்பை இங்கு வைத்திருக்கிறேன்.

அப்படி இவற்றையெல்லாம் நான் இழந்தால், மத சார்பற்ற ஒரு மாநிலத்தை தேடி சென்று விடுவேன். கேரளா முதல் காஷ்மீர் வரை எந்த இடத்தில் மத சார்பற்ற மாநிலம் இருக்கிறதோ அங்கு நான் குடிபெயர்வேன். அப்படி ஒரு மாநிலம் இந்தியாவில் இல்லை என்றால், மத சார்பற்ற நாட்டை தேடிச் செல்வேன். எனக்கு மதம் இல்லை, அரசியல் இல்லை, இப்போது பணமும் இல்லை என்ற நிலையில் கடல் கடந்து திரவியம் தேடு என்ற நிலைதான். ஆனால், என்னிடம் திறமை இருக்கிறது. என்னை தனி மனிதன் தானே வீழ்த்திவிடலாம் என்று தமிழக அரசு நினைக்கிறது. வீழ்ந்தாலும் நான் மறுபடியும் மரமாக வலருவேன். தனி மரம் தோப்பாகாது என்று நினைத்தால், பல சுதந்திர பறவைகள் அமறும் மரமாவேன்.

நீதிபதி என்னிடம், தனி மனிதனின் சொத்து முக்கியமா அல்லது நாட்டின் ஒற்றுமை முக்கியமா என்று கேட்டார். எனக்கு நாட்டின் ஒற்றுமை தான் முக்கியம். அதற்காக நான் வீழவும் தயார் என்பதை இப்போது சொல்லிக்கொள்கிறேன்." என்று கூறினார்...

விஸ்வரூபம் பட விவகாரம் குறித்து சென்னையில் நடிகர் கமலஹாசன் செய்தியாளர்களிடம் பேசினார். தனது சொத்து முழுவதும் வைத்து விஸ்வரூபம் படத்தை தயாரித்துள்ளதாகவும், படம் வெளியாக தாமதமானால், தன் வீடு உட்பட தான் அனைத்து சொத்துக்களையும் இழக்க நேரிடும் என்றும் கமல் நெகிழ்ச்சியாக தெரிவித்துள்ளார். நாட்டின் ஒற்றுமை தான் எனக்கு முக்கியம் என்று கூறிய அவர், என் சொத்து முழுவதும் இழக்க தயார் எனவும் நான் நஷ்டப்பட்டாலும் பரவாயில்லை என்றும் நெகிழ்ச்சியாக கூறியுள்ளார்.

விஸ்வரூபம் படம் இந்திய முஸ்லீம்களை கேலி செய்யும் வகையில் இல்லை என்று கூறியுள்ள கமல், படத்தின் தளம் ஆப்கானிஸ்தான் அமெரிக்காவை மையமாக கொண்டுள்ளதாகவும் விளக்கம் அளித்துள்ளார். மேலும் தமது ரசிகர்கள் திரையரங்கில் இருந்து போலீசார் வெளியேற்றப்பட்டுள்ளதாகவும் கமல் குற்றம்சாட்டியுள்ளார். எனக்கு மதம் கிடையாது, மனிதம் தான் முக்கியம் என்று கூறிய கமல், மத சார்பற்ற மாநிலம் உள்ளதா என்பதை கண்டு அங்கு குடி அமர்வேன் என்று உருக்கமாக கூறியுள்ளார்.

தனி மனிதன் என்பதை விட எனக்கு நாட்டின் ஒற்றுமை தான் முக்கியம் என்று கூறியுள்ள கமல், நான் வீழ்ந்தாலும் மீண்டும் எழுந்து விதையாக மாறுவேன் என்று கூறியுள்ளார்.

No comments:

Post a Comment