Wednesday, January 30, 2013
திண்டுக்கல்::தமிழகத்தில் உள்ள இலங்கை அகதிகளை அவுஸ்திரேலியாவிற்கு அனுப்பி வைப்பதாகக் கூறி நிதி மோசடி செய்த ஒருவரை தமிழக காவல்துறையினர் தேடி வருகின்றனர்.
திண்டுக்கல்லை சேர்ந்த அகதிகளை அவுஸ்திரேலியாவிற்கு அழைத்து செல்வதாக கூறி 6 லட்சம் இந்திய ரூபாய்களை பெற்று அவர் மோசடி செய்துள்ளதாக முறையிடப்பட்டுள்ளது.
அவரினால் அழைத்துச் செல்லப்பட்ட அகதிகள் நடுக்கடலில் விட்டுச் செல்லப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
திண்டுக்கல் அடியனூத்து அகதிகள் முகாமைச் சேர்ந்த 6 இலங்கையர்களே இந்த சம்பவத்துக்கு முகம்கொடுத்துள்ளனர்.
கடந்த வருடம் நவம்பர் மாதம் தொடக்கம் இலங்கை அகதிகள் தமது பணத்தினை படிப்படியாக வழங்கி வந்ததாக தமிழக காவல்துறையில் முறையிட்டுள்ளனர்.
தம்மை அவுஸ்திரேலியா அழைத்துச் செல்வதாக கூறியவர்கள், கடலில் வைத்து உரிய சமிஞ்ஞை கிடைக்காமையால் திசை தெரியாது நாகப்பட்டிணம் அருகே படகை நிறுத்திவிட்டு சென்றுவிட்டதாக தெரிவித்தனர்.
பின்னர் நீண்ட நேரம் ஆகியும் அவர்கள் திரும்பாததால் சந்தேகம் ஏற்பட்டு காவல்துறையை நாடியுள்ளனர்.
தமது பணத்தை மீள பெற்றுத் தரும்படி, அல்லது அவுஸ்திரேலியா செல்வதற்கான வழிவகையை ஏற்படுத்துமாறு பாதிக்கப்பட்ட இலங்கை அகதிகள் கோரியுள்ளனர்.
No comments:
Post a Comment