நூற்றுக்கணக்கான உயிர்களை பலிகொண்ட ஏப்ரல் 21 தாக்குதல்கள் நடத்தப்பட்டு இன்றுடன் இரண்டு மாதங்கள் நிறைவடைகின்றன.இந்த தாக்குதல்களில் காயமடைந்த பலர் இன்னும் வைத்தியசாலைகளில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.காயமடைந்தவர்கள் குணமடையவும், உயிரிழந்தவர்களை நினைவு கூர்ந்தும் இன்றைய தினம் பல தேவாலயங்களில் விசேட பூஜைகள் நடைபெற்றன.இந்த தாக்குதலில் கடுமையாக பாதிக்கப்பட்ட கட்டுவாப்பிட்டிய புனித செபஸ்தியன் தேவாலயம் தற்போதும் மீளமைக்கப்பட்டு வருகிறது.இந்த தேவாலயத்தில் நடத்தப்பட்ட தாக்குதலில் காயமடைந்து வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்று வந்த 73 வயதான ஒருவர், நேற்று
உயிரிழந்தார்.கொச்சிக்கடை புனித அந்தோனியார் தேவாலயத்திலும் இன்று பகல் விசேட ஆராதனை கூட்டம் நடத்தப்பட்டது.
No comments:
Post a Comment