பிரதி பொலிஸ் மா அதிபர்கள் மூவர் உட்பட ஒன்பது பொலிஸ் அதிகாரிகளுக்கு எதிராக விசாரணை செய்வதற்கு பதில் பொலிஸ் மா அதிபர் குற்றப்புலனாய்வுப் பிரிவினர் மற்றும் விசேட விசாரணை பிரிவினருக்கு ஆலோசனை வழங்கியுள்ளார். இந்த விடயம் சம்பந்தமாக குற்றவியல் மற்றும் ஒழுக்காற்று நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு சட்டமா அதிபர், பதில்
பொலிஸ் மா அதிபருக்கு நேற்று அறிவித்திருந்தார். ஏப்ரல் 21 தாக்குதல் சம்பவம் தொடர்பில் ஆராய்வற்காக ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்ட விசேட விசாரணைக் குழுவின் இறுதி அறிக்கைக்கு அமைய இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதன்போது தனது கடமைகளை உரிய முறையில் நிறைவேற்றாமை தொடர்பில் இவர்களுக்கு எதிராக விசாரணைகளை மேற்கொள்ளமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment