அமெரிக்காவை காலம்காலமாக எல்லா நாடுகளும் சுரண்டுகின்றன. இனி அது நடக்கப்போவதில்லை என்று அந்நாட்டின் அதிபர் டிரம்ப் கூறியுள்ளார்.ஜி20 மாநாட்டில் கலந்துகொள்வதற்கு ஜப்பான் புறப்படுவதற்கு முன்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், பல்வேறு நாடுகளின் தலைவர்களுடன் ஜப்பானில் பேச்சு நடத்த இருப்பதாகக் கூறினார். அதில் பல நாடுகள் அமெரிக்காவை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்வதாகவும், விரைவில் அதற்கு முற்றுப்புள்ளி வைக்கப்படும் என்றும் கூறினார். சென்ட் செலுத்தாத சீனா :-நீண்ட காலமாக அனைத்து நாடுகளும் அமெரிக்காவை பொருளாதார ரீதியாக சுரண்டி வருவதாகவும், ஆனால் இனி அது நடக்காது என்பதுதான் தற்போதுள்ள மிகப்பெரிய வித்தியாசம் என்றும் அவர் தெரிவித்தார். தான் அதிபராவதற்கு முன்னர் ஒரு சென்ட்
தொகை கூட அமெரிக்காவுக்கு கட்டாத சீனா, தற்போது பில்லியன் கணக்கான டாலர்கள் செலுத்துவதாகவும் டிரம்ப் சுட்டிக்காட்டினார்.
தொகை கூட அமெரிக்காவுக்கு கட்டாத சீனா, தற்போது பில்லியன் கணக்கான டாலர்கள் செலுத்துவதாகவும் டிரம்ப் சுட்டிக்காட்டினார்.
ரஷ்ய அதிபர் புதின் உடனான சந்திப்பு குறித்து கேட்டபோது, ''புதினை பொறுத்தவரை அவருடன் சிறப்பான உரையாடல் அமையும்,'' எனக் கூறிய டிரம்ப், ஆனால் அவருடன் நான் என்ன பேசப்போகிறேன் என்பது ஊடகங்களுக்கு தேவையில்லாத விஷயம்,'' என்றும் வேடிக்கையாக கூறினார்.அமெரிக்க அதிபர் தேர்தலில் ரஷ்யத் தலையீடு பற்றி விசாரணை நடத்திய ராபர்ட் முல்லர் அறிக்கை வெளியான பிறகு, முதல் முறையாக புதினை டிரம்ப் சந்தித்துள்ளார். அமெரிக்க அதிபர் தேர்தல் பிரசாரத்தையும் டிரம்ப் ஏற்கனவே துவங்கிவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment