மட்டக்களப்பு, ஒல்லிக்குளம் பகுதியில் ஐ.எஸ்.ஐ.எஸ். பயங்கரவாதிகளினால் நிலத்தில் புதைத்து வைக்கப்பட்டிருந்த 300 ஜெலக்நைட்கள் , ஆயிரம் டெடனைட்டர்கள் என்பவை குற்றத்தடுப்பு பிரிவினரால் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸ் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்கடந்த ஏப்ரல் மாதம் 21 ஆம் திகதி தற்கொலை குண்டு தாக்குதலுடன் தொடர்புடைய சஹ்ரானின் இரண்டாம் கட்ட தளபதியான சவுதி அரேபியாவில் கைது செய்யப்பட்டு இலங்கைக்குக் கொண்டுவரப்பட்ட மில்ஹான் என்பவரிடம் சி.ஐ.டி. யினர் மேற்கொண்ட விசாரணையில், மட்டக்களப்பு காத்தான்குடி பொலிஸ் பிரிவிலுள்ள ஓல்லிக்குளம் பகுதியில் ஸஹ்ரானின் தங்குமிடான முகாம் ஒன்றைக் கடந்த மாதம் பொலிசார் கண்டுபிடித்தனர்.நேற்று
வியாழக்கிழமை கொழும்பிலிருந்து மில்ஹானை அழைத்துசென்று முகாம் பகுதியில் மேற்கொண்ட தேடுதல் நடவடிக்கையின்போதே எஸ்லோன் குழாயில் அடைத்து வைக்கப்பட்டிருந்த 300 ஜெலக்நைட்கள், ஆயிரம் டெடனைட்டர்கள் என்பவற்றை குற்றத்தடுப்பு பிரிவினர் மீட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:
Post a Comment