ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு கவுன்சிலின் நிரந்தரமல்லா உறுப்பினர் பதவிக்கு, இந்தியாவை தேர்ந்தெடுக்க, சீனா, பாகிஸ்தான் உட்பட, ஆசிய - பசிபிக் பிராந்தியத் தைச் சேர்ந்த, 55 நாடுகள் ஒருமனதாக ஆதரவு தெரிவித்துள்ளன. 2021 மற்றும் 2022 என, இரண்டு ஆண்டுகளுக்கானது இந்தப் பதவி.இந்தியாவுக்கு, சீனா, பாக்., உட்பட, 55 நாடுகள்,ஆதரவு!: ஐ.நா., பாதுகாப்பு கவுன்சில், உறுப்பினர், பதவிஐக்கிய நாடுகள் சபையின் உயரிய அமைப்பான, ஐ.நா., பாதுகாப்பு கவுன்சிலில், தற்போது, 15 நாடுகள் இடம் பெற்றுள்ளன. சீனா, பிரான்ஸ், ரஷ்யா, அமெரிக்கா, பிரிட்டன்
ஆகிய, ஐந்து நாடுகள் நிரந்தர உறுப்பினராக உள்ளன. இதைத் தவிர, 10 நிரந்தரமல்லா உறுப்பு நாடுகளும் உள்ளன.இந்த நிரந்தரமல்லா உறுப்பினர் பதவி, இரண்டு ஆண்டுகளுக் கானது. ஒவ்வொரு ஆண்டும், ஐந்து நாடுகள், இந்தப் பதவிக்கு தேர்ந்தெடுக்கப்படும்.
ஆகிய, ஐந்து நாடுகள் நிரந்தர உறுப்பினராக உள்ளன. இதைத் தவிர, 10 நிரந்தரமல்லா உறுப்பு நாடுகளும் உள்ளன.இந்த நிரந்தரமல்லா உறுப்பினர் பதவி, இரண்டு ஆண்டுகளுக் கானது. ஒவ்வொரு ஆண்டும், ஐந்து நாடுகள், இந்தப் பதவிக்கு தேர்ந்தெடுக்கப்படும்.
அதன்படி, 2020 ஜனவரியில் இருந்து, இரண்டு ஆண்டுகளுக்கான நிரந்தரமல்லா உறுப்பினர்கள் தேர்வு சமீபத்தில் நடந்தது. அதில், எஸ்தோனியா, நைஜர், செயின்ட் வின்சன்ட், கிரனாடைன்ஸ், துனீஷியா, வியட்னாம் ஆகியவை தேர்ந்தெடுக்கப் பட்டன.உறுப்பினர்கள் தேர்வுவரும், 2021 மற்றும் 2022ம் ஆண்டுக்கான, ஐந்து நிரந்தரமல்லா உறுப்பினர்களை தேர்ந்தெடுக்கும் தேர்தல், அடுத்த ஆண்டு ஜூன் மாதம் நடக்க உள்ளது. இந்த, 10 நிரந்தரமல்லா உறுப்பு நாடுகள், அவை அமைந்துள்ள பிராந்தியத்தின் அடிப்படை யில் தேர்வு செய்யப்படும்.
ஆப்ரிக்கா மற்றும் ஆசிய நாடுகளுக்கு, ஐந்து; கிழக்கு ஐரோப்பிய நாடுகளுக்கு, ஒன்று; லத்தீன் அமெரிக்கா மற்றும் கரீபியன் நாடுகளுக்கு, இரண்டு; மேற்கு ஐரோப்பிய நாடு களுக்கு, இரண்டு என, ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளன.இந்நிலையில், ஐ.நா., வின், ஆசிய - பசிபிக் பிராந்திய நாடுகளின் குழு கூட்டம், நியூயார்க்கில் நேற்று நடந்தது. இதில், 2021மற்றும் 2022ம் ஆண்டுக்கான, நிரந்தரமல்லா உறுப்பினர் பதவிக்கு, இந்தியாவின் பெயரை பரிந்துரைக்க, குழுவில் உள்ள, 55 நாடுகளும் ஆதரவு தெரிவித்து உள்ளன.இதை, ஐ.நா.,வுக்கான இந்தியாவின் நிரந்தர துாதர், சையது அக்பருதீன் தெரிவித்துள்ளார்.
சீனா, பாகிஸ்தான் உட்பட, குழுவில் உள்ள, 55 நாடுகளும் முழு ஆதரவு அளித்துள்ளன' என, 'டுவிட்டர்' சமூக வலைதளத்தில் வெளியிட்டு உள்ள செய்தியில், அக்பருதீன் கூறியுள்ளார். இந்தியா இதற்கு முன், 1950 - 1951, 1967 - 1968, 1972 - 1973, 1977 - 1978, 1984 - 1985, 1991 - 1992 மற்றும் 2011 - 2012ல் நிரந்தரமல்லா உறுப்பினராக இருந்துள்ளது.
ஐ.நா., பாதுகாப்பு கவுன்சிலை மாற்றி அமைக்க வேண்டும்; எங்களுக்கு நிரந்தர உறுப்பினர் அந்தஸ்து அளிக்க வேண்டும்' என, இந்தியா தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. இதற்கு, மத்திய அரசு கொள்கை அளவில் அதிமுக்கியத் துவம் அளித்து,பல்வேறு நாடுகளுடன் தொடர்ந்து பேச்சு நடத்தி வருவதாக, லோக்சபா வில் நேற்று, மத்திய வெளியுறவுத்துறை இணை அமைச்சர் முரளீதரன் தெரிவித்தார்.
No comments:
Post a Comment