மத்திய கிழக்கு நாடான ஈரான் மற்றும் அமெரிக்கா இடையே பதற்றம் ஏற்பட்டுள்ள நிலையில், தன் ஆளில்லா, 'ட்ரோன்' எனப்படும், உளவு விமானம் வீழ்த்தப்பட்
டதற்கு பதிலடியாக, ஈரானின் ராணுவ கம்ப்யூட்டர்களுக்குள் புகுந்து, அமெரிக்கா தாக்குதல் நடத்தியுள்ளது.
மத்திய கிழக்கு நாடான ஈரானுடன், அமெரிக்கா, 2015ல், அணு ஒப்பந்தம் செய்தது. கடந்தாண்டு இந்த ஒப்பந்தத்தை, அமெரிக்கா விலக்கி கொண்டது. போர் சூழ்நிலைஅதைத் தொடர்ந்து, இரு நாடுகளுக்கும் இடையே பதற்றமான சூழ்நிலை நிலவுகிறது. மத்திய கிழக்கு கடல் பகுதிகளில், தன் படைகளை, அமெரிக்கா நிறுத்தி வைத்துள்ளது.மேலும், ஈரான் மீது பொருளாதார தடை விதித்துள்ளது. மத்திய கிழக்கு நாடுகள் கடல் பகுதியில் சென்ற, கச்சா எண்ணெய் ஏற்றிச் சென்ற கப்பல்கள் மீது, தாக்குதல் நடத்தப்பட்டன. இதற்கு, ஈரானே காரணம் என, அமெரிக்கா கூறி வருகிறது.
இரு நாடுகளுக்கும் இடையே பதற்றம் அதிகரித்துள்ள நிலையில், அமெரிக்காவின், ட்ரோன் எனப்படும் ஆளில்லா உளவு விமானத்தை, சுட்டு வீழ்த்தியதாக ஈரான் அறிவித்தது. அதைத் தொடர்ந்து, போர் சூழ்நிலை உருவாகி உள்ளது.'எங்கள் எல்லைக்குள் நுழைந்த, அமெரிக்கஉளவு விமானத்தை வீழ்த்தும் முடிவை திரும்பப் பெற்றோம். அந்த விமானத்தில், 30 பேர் இருந்ததால், அதை தாக்கவில்லை' என,
ஈரான் கூறியது.
மேலும், அமெரிக்கா தாக்கினால், அதற்கு தான் பேரழிவு ஏற்படும் என்றும் ஈரான் எச்சரித்தது.இதற்கு பதிலடியாக, 'ஈரான் மீது தாக்குதல் நடத்த திட்டமிட்டோம். ஆனால், அதில், 150 பேர் உயிர் இழக்கும் அபாயம் இருந்ததால், அந்த முடிவை, அதிபர், டொனால்ட் டிரம்ப் கைவிட்டார்' என, அமெரிக்கா கூறியது.
இவ்வாறு, இரு தரப்புக்கும் இடையேயான பிரச்னை தீவிரமடைந்துள்ள நிலையில், ஈரான் ராணுவத்தின் கம்ப்யூட்டர்களுக்குள் நுழைந்து, அமெரிக்கா தாக்குதல் நடத்தியுள்ளதாக, தகவல்கள் தெரிவிக்கின்றன.இது குறித்து, அமெரிக்க அதிகாரிகள் கூறியதாவது:எங்கள் ராணுவத்தின், சைபர் பிரிவு அதிகாரிகள், ஈரான் ராணுவத்தின் கம்ப்யூட்டர்களை கட்டுப்படுத்தி, அவற்றை செயலிழக்க செய்துள்ளனர். அந்த நாட்டிடம் உள்ள, ஏவுகணைகளை செலுத்தப் பயன்படுத்தப்படும் கம்ப்யூட்டர்கள் செயல்இழக்கம் செய்யப்பட்டு உள்ளன.
எச்சரிக்கை
அமெரிக்காவின், ட்ரோனை வீழ்த்தியபோதே, ஈரான் மீது தாக்குதல் நடத்துவது குறித்து ஆராயப்பட்டது. ஆனால், உயிரிழப்புகள் ஏற்படுவதை தடுப்பதற்காக, தாக்குதல் நடத்துவதை, அதிபர் டிரம்ப் ஒத்தி வைத்துள்ளார். நாங்கள் பின்வாங்குவதாகவோ, பயப்படுவதாகவோ யாரும் நினைக்க வேண்டாம் என, எச்சரிக்கிறோம்.இவ்வாறு, அவர்கள் கூறினர்.
ஈரான் எச்சரிக்கைஇதற்கிடையே, ஈரான் படைப் பிரிவுகளை பார்வையிட்ட, அந்த நாட்டு ராணுவத்தின் மூத்த அதிகாரியான, மேஜர் ஜெனரல், கோலமாலி ரஷீத் கூறியதாவது:அமெரிக்க அரசும், அதன் ராணுவமும் பொறுப்புடன் நடந்து கொள்ள வேண்டும். தங்கள் நாட்டு மக்களையும், ராணுவத்தினரையும் பாதுகாப்பதில் அவர்கள் கவனம் செலுத்த வேண்டும். எங்கள் மீது தாக்குதல் நடத்த திட்டமிட்டால், அதற்காக மிகப் பெரிய விலையை அமெரிக்கா கொடுக்க நேரிடும்.இவ்வாறு, அவர் கூறினார்.
No comments:
Post a Comment