பொசன் பூரணை பருவகாலத்தில் நாடளாவிய ரீதியில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்புக்களில் ஆயிரத்து 522 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக கலால் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதன்போது ஆயிரத்து 541 சுற்றிவளைப்புக்கள் இடம்பெற்றுள்ளதோடு, சுமார் 50 லட்சம் பெறுமதியான மதுபானம், கோடா ஸ்பிரிட், வடிகட்டும் உபகரணங்கள் மற்றும்போதைப்பொருட்களும் கைப்பற்றப்பட்டுள்ளன.கைது செய்யப்பட்டுள்ள சந்தேக நபர்கள் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளனர்.

ஹெரோயின் போதைப் பொருளுடன் சந்தேகநபர் ஒருவர் கைது!
மொரட்டுவ, கட்டுபெத்த பிரதேசத்தில் சுமார் 70 இலட்சம் ரூபாவுக்கும் அதிக பெறுமதியுடைய ஹெரோயின் போதைப் பொருளுடன் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
பொலிஸ் விஷேட அதிரடிப் படையின் புலனாய்வு பிரிவு அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலின் பிரகாரம் நடத்தப்பட்ட சுற்றிவளைப்பில் போதைப் பொருள் வர்த்தகத்தில் ஈடுபட்ட குறித்த சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார். இதன்போது சந்தேகநபரிடமிருந்து ஒரு கிலோவும் 127 கிராம் நிறையுடைய ஹெரோயின் மற்றும் மோட்டார் சைக்கிள் ஒன்றும் இரண்டு கைத் தொலைபேசிகளும் மீட்கப்பட்டுள்ளன. கைது செய்யப்பட்ட சந்தேகநபர் பொலிஸ் போதை தடுப்பு பிரிவு அதிகாரிகளிடம் மேலதிக விசாரணைக்காக ஒப்படைக்கப்பட்டதாக பொலிஸ் விஷேட அதிரடிப் படையினர் தெரிவித்தனர்.
No comments:
Post a Comment